telepathygiridharbaba

telepathygiridharbaba
shirdisai thunai

Saturday 26 October 2013

மனத்தைக் காணமுடியாது. 

எண்ணத்தைக் காணலாம். 

10 மடையன்கள் ஆற்றைக் கடந்து வந்த பிறகு
10 பேரும் இருக்கின்றார்களா என ஐயம்
எண்ணினார்கள். 

9 பேர் எனத் தெரிந்தது.
ஒவ்வொருவரும் எண்ணினார்கள். 

முடிவு 9 என வந்தது. ஒருவரைக் காணோம் எனஅழுதார்கள். வழிப்போக்கன் விசாரித்து ஒருவரும் தவறவில்லை என 10 பேரிருப்பதாக கதை.

எண்ணுபவர் தம்மை எண்ண மறப்பதால் 10 பேர் 9 பேராகத் தெரிந்தது. இது மடையனைப் பற்றிய கதை என நாம் சிரிக்கலாம்.

வாழ்வில் எவரும் ஒரு முறையாவது இதுபோல் நடக்காமலிருக்க மாட்டார்கள். கண்ணாடியைத் தேடுபவர்கள் போட்டுக் கொண்டே தேடுவதுண்டு.

எண்ணம் மனத்தின் கருவி என்பதால் எவரும் எண்ணத்தைக் காணமுடியும்.

நாமே மனம் என நினைப்பதாலும், மனத்தோடு நாம் ஐக்கியமாகி விடுவதாலும் நம் மனத்தை நாம் காண முடியாது.

உடலைவிட்டு வெளியே போகும் திறமையுள்ளவர், வெளியிலிருந்து தம்முடல் தரையில் படுத்திருப்பதைக் காண்பார்கள். 

நம்மால் அது முடியாது. மனத்தை விட்டு வெளியே வந்தவர்கள் தங்கள் மனத்தை பிறர் மனம்போல் பார்க்கலாம்.

உடலை விட்டு வெளியேறுவது அனைவராலும் முடியாது.
மனத்தை விட்டு வெளியேறுவது அதைவிடக் கடினம்.

ஒருவர் அதைச் செய்யப் பிரியப்பட்டால் அதற்கு முன் செய்யக் கூடியதுண்டு.
தம் குறைகளை பிறர் அறிவதுபோல் அவர் அறிந்தால் அவருக்கு அத்தகுதியுண்டு.

No comments:

Post a Comment