telepathygiridharbaba

telepathygiridharbaba
shirdisai thunai

Monday 28 October 2013

சிவன் நிச்சயம் காப்பாற்றுவார்

இறைவனின் அருள் அலைகள் அபரிமிதமாக வெளிப்படும் ஒரு அதிசய சில ஆலயங்களுக்கு செல்லும்போது , நம்மை அறியாமல் பூரண மன நிம்மதி கிடைக்கும். பூர்வ ஜென்ம தொடர்பு அந்த ஆலயங்களுக்கும் , நமக்கும் இருக்கும் என்கிற எண்ணம் மனதில் மெல்ல அரும்பும். , புராதன காலத்தில் இருந்தே பெரும் புகழுடன் , அருள் பாலித்துக் கொண்டு இருந்த ஒரு சில ஆலயங்கள் - இன்று மக்கள் மத்தியில் அதிகம் அறியப்படுவது இல்லை. ஆனால் , அந்த ஆலயங்களில் இன்றும் அருள் அலைகள் அபரிமிதமாக வெளிப்படுகின்றன.

அஷ்ட திக் பாலகர்களில் ஒருவரான - அக்னியும், நவ கிரகங்களில் நீதி தேவனான - சனி பகவானும் , வழிபட்ட பழம்பெரும் ஆலயமான திருக்கொள்ளிக்காடு ஆலயம் பற்றிய தகவல்களை , நமது வாசகர்களிடம் பகிர்ந்து கொள்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

அன்பர் ஒருவர், தனது கடன் இந்த ஜென்மத்தில் முடியாது என்று , எல்லா விதமான முயற்சி , பரிகாரம் என்று சகலமும் செய்துவிட்டு , வெறுத்துப் போய் , விரக்தியின் விளிம்பில் , குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ளலாமா என்று விபரீத முடிவுக்கும் சென்றவர். அந்த நிலையில் எதேச்சையாக திருவொற்றியூர் - வடிவுடை அம்மன் ஆலயம் அருகில் , அவர் என்னை சந்திக்க , என்னுடைய ஆலோசனையின் பேரில் இந்த ஆலயம் சென்று வந்தார். " 48 நாட்கள் - உடல் , மன சுத்தியோடு , கடைசி ஒன்பது நாட்கள் தினம் ஒரு வேளை மட்டுமே உணவு உண்டு , விரதம் மேற்கொண்டு - இந்த ஆலயம் சென்று அபிஷேகம் செய்து வாருங்கள் . உங்களை அந்த சிவன் நிச்சயம் காப்பாற்றுவார்" என்று நம்பிக்கையூட்டினேன்.

இது தான் சார் , என்னுடைய கடைசி முயற்சி . நீங்கள் சொல்லியபடி இன்னும் ஒரு வருடத்தில் , எனக்கு விடிவு இல்லை என்றால், நான் வாழ்வதிலே அர்த்தமில்லை என்று சொல்லிச் சென்றவர்.

சென்று வந்த ஆறே மாதத்தில் , அவரது ஒட்டு மொத்த கடனும் அடைந்து , பூரிப்புடன் இருக்கிறார். இப்போது , அவரை பார்க்கும்போது - அவர் முகத்தில் தெரியும் சந்தோசம் , மனதுக்கு நிம்மதியாக இருக்கிறது.

அதனால் தான், அடிக்கடி நான் சொல்வது உண்டு. சில ஆலயங்களுக்கு நாம் செல்லும்போது , நமது கர்மக்கணக்கு நேராகிறது.

ஏழரை சனி , அஷ்டம சனி நடப்பவர்களும் , மகர , கும்ப - ராசி , லக்கினங்களில் பிறந்தவர்களுக்கும் , சிம்ம ராசி , இலக்கின நேயர்களும் - இந்த ஆலயம், அவசியம் ஒருமுறை வந்து , வழிபட்டுச் செல்லுங்கள்.
உங்கள் வாழ்வில் பெரிய திருப்புமுனை ஏற்படும்.



ஆலயத்தின் பெருமைகளையும், மகிமைகளையும் வார்த்தைகளில் விவரிக்க முடியாது. பழம் பெரும் அரசர்கள், இறைவனின் மகிமையை பரிபூரணமாக உணர்ந்து , அவரை பூஜித்து இருக்கின்றனர். ஆயிரம் வருடங்களாக , பூஜை செய்யப்பட்ட இறை சந்நிதானத்தில் - அருள் அலைகள் அபரிமிதமாக நிறைந்து இருக்கும். ராகு கால நேரங்களில் இதைப் போன்ற ஆலயங்களில் - அம்மன் சந்நிதி முன்பு இருக்க வாய்ப்பு கிடைப்பவர்கள், பாக்கியம் செய்தவர்கள்.


திருக்கொள்ளிக்காடு! - திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப் பூண்டி வட்டத்தில், திருவாரூர் - திருத்துறைப்பூண்டி நெடுஞ்சாலையில் உள்ள திருநெல்லிக்காவிலிருந்து தெங்கூர், கீராலத்தூர் வழியாக இத்தலத்தை அடையலாம். சனி பகவானின் தோஷம் நீக்கும் தலங்கள் வரிசையில் இது தலையாயது.

சுவாமிபெயர் - அக்கினீசுவரர், தேவியார் - பஞ்சினுமெல்லடியம்மை.

இத்திருக்கோயிலை வலம் வந்து சனி பகவானை வழிபட்டுத் திருக்கொள்ளி அக்னீஸ்வரர் திருமுன்பு வீழ்ந்து வணங்குபவர்களின் சனி தோஷத்தைத் தன் ஜோதியால் எரித்துச் சாம்பலாக மாற்றுபவன் அவ்விறைவன் என்பதைத் தொன்மை நூல்கள் கூறுகின்றன.

1,500 ஆண்டுகளுக்கும் முற்பட்ட இத்திருக்கோயிலை மாமன்னன் முதலாம் இராஜராஜ சோழன் கற்கோயிலாகப் புதுப்பித்தான். இக்கோயிலில் இராஜராஜ சோழனின் கல்வெட்டுகள், முதலாம் இராஜேந்திர சோழனின் கல்வெட்டு, அவனது மகன் முதல் குலோத்துங்க சோழனின் கல்வெட்டுகள், பிற சோழ மன்னர்களின் கல்வெட்டுகள் உள்ளன.


சோழ மன்னன் ஒருவனுக்கு மிகக் கடுமையான சனி தோஷம் ஏற்படவே, எங்கும் அவனுக்கு அமைதி கிட்டாமையால் கடைசியாக இங்கு வந்து சனி பகவானைப் பூஜித்து அக்னீஸ்வரர், மிருதுபாதநாயகி ஆகியோர் திருவடிகளை வணங்கி சிவஜோதியின் காரணமாகச் சனி தோஷம் முழுவதும் நீங்க மனமகிழ்வடைந்தான் என்பது தலபுராணம்.சோழ மன்னர்கள் காலத்தில் இத்தலம் முக்கியத்துவம் பெற்று விளங்கியது.

இத்திருக்கோயிலின் தலமரம் வன்னி. தீர்த்தக் குளம் கோயிலுக்கு எதிரே உள்ளது. இராஜகோபுரம் இல்லை. முகப்பு வாயில் வழியாக உள்ளே சென்றால் பலி பீடமும் நந்தியும்

Saturday 26 October 2013

மனத்தைக் காணமுடியாது. 

எண்ணத்தைக் காணலாம். 

10 மடையன்கள் ஆற்றைக் கடந்து வந்த பிறகு
10 பேரும் இருக்கின்றார்களா என ஐயம்
எண்ணினார்கள். 

9 பேர் எனத் தெரிந்தது.
ஒவ்வொருவரும் எண்ணினார்கள். 

முடிவு 9 என வந்தது. ஒருவரைக் காணோம் எனஅழுதார்கள். வழிப்போக்கன் விசாரித்து ஒருவரும் தவறவில்லை என 10 பேரிருப்பதாக கதை.

எண்ணுபவர் தம்மை எண்ண மறப்பதால் 10 பேர் 9 பேராகத் தெரிந்தது. இது மடையனைப் பற்றிய கதை என நாம் சிரிக்கலாம்.

வாழ்வில் எவரும் ஒரு முறையாவது இதுபோல் நடக்காமலிருக்க மாட்டார்கள். கண்ணாடியைத் தேடுபவர்கள் போட்டுக் கொண்டே தேடுவதுண்டு.

எண்ணம் மனத்தின் கருவி என்பதால் எவரும் எண்ணத்தைக் காணமுடியும்.

நாமே மனம் என நினைப்பதாலும், மனத்தோடு நாம் ஐக்கியமாகி விடுவதாலும் நம் மனத்தை நாம் காண முடியாது.

உடலைவிட்டு வெளியே போகும் திறமையுள்ளவர், வெளியிலிருந்து தம்முடல் தரையில் படுத்திருப்பதைக் காண்பார்கள். 

நம்மால் அது முடியாது. மனத்தை விட்டு வெளியே வந்தவர்கள் தங்கள் மனத்தை பிறர் மனம்போல் பார்க்கலாம்.

உடலை விட்டு வெளியேறுவது அனைவராலும் முடியாது.
மனத்தை விட்டு வெளியேறுவது அதைவிடக் கடினம்.

ஒருவர் அதைச் செய்யப் பிரியப்பட்டால் அதற்கு முன் செய்யக் கூடியதுண்டு.
தம் குறைகளை பிறர் அறிவதுபோல் அவர் அறிந்தால் அவருக்கு அத்தகுதியுண்டு.

பிரகாச சக்தி காயத்திரி

பிரகாச சக்தி காயத்திரி
********************
மூலமந்திரம்
ஓம் கைலாசவாசாய கங்காதாராய மகேஸ்வராயஅம்பிகைநாதாய சர்வேஸ்வராய சர்வ லோக பிரகாசாய நம: சிவய

பிரகாச சக்தி காயத்திரி

‘ஓம் சிவசக்திப்பிரகாசாய சுதாய வித்மஹே
ஷ ண்முக: பிரகாசாய தீமஹி
தந்நோ சர்வலோகப் பிரகாச ரட்சக ப்ரசோதயாத்’
பொருள்

பரப்பிம்மான சிவனும் பிரபஞ்ச சக்தியானஆதிசக்தியும் இணைந்து ஏற்படும் பிரகாசமான ஆறுமுகங்களில் ஏற்படும் பிரகாசத்தால் உலகத்தை ஆளும் சக்தி அச் சக்தி நம்முள் உள்ள ஆத்ம சக்தியை வெளிக் கொண்டுவந்து எம்மை வளிப்படுத்துவதாகட்டும். என்று பிராத்திக வேண்டும்.எம்முள் உள்ள சக்தி விளிப்படையும் இடங்கள் ஆறு அவை ஆறாதாரங்கள் அவை விளிப்படைந்து ஒளி பெற்று எம்மை வழிபடுத்தும் சக்தி வாய்ந்தது இம்மந்திரம்.

இந்த மந்திரம் சக்தி வாய்ந்தது. வசதியானவர்கள் முடியுமானால் திருவற்றியூர் தியாகராஜ சன்நிதிக்குச் சென்று ஆதிபுரிஸ்வரர் அனுமதி பெற்று சுவாமி குமரகுருபரன் சமாதியில் சமர்பணம் செய்து ஆரம்பிக்கவும்.
‘நம்பினால் கெடுவதில்லை நான்மறை தீர்ப்பு’
சர்வ மங்களங்களும் உண்டாகுவதாக.

மனித மனம்

வணக்கம்

நெடு நாளைய ஆசை.
மனித மனம் பற்றி அறிய.
வாழ்வும்..வீழ்வும்.
இதன் சீரான இயக்கத்தில்தான்.
”மனசு வச்சா முடிச்சிடுவேன்” -
மனதை எப்படி நினைக்க வைப்பது
‘மனம்’- மனித மனங்களின்
நீள அகலங்களை நமக்கு காட்ட வருகிறது.



முகவரி : http://seithiga.blogspot.in/

Monday 14 October 2013

நவக்கிரக மந்திரங்கள்

சூரியன்:ஓம் ஹ்ரௌம் ஸ்ரீம் ஆம் ஆதித்யாய ஸ்வாஹா
சந்திரன்:மந்திரம்: ஓம் ஸ்ரீம் க்ரீம் ஹம் சம் சந்த்ராய நம
செவ்வாய்:ஐம் ஹ்மௌம் ஸ்ரீம் த்ராம் கம் க்ரஹாதி பதயே அகங்காரகாய ஸ்வாஹா
புதன்:ஓம் ஹ்ராம் க்ரோம் ஐம் க்ரஹ நாதாய புதாய ஸ்வாஹா
வியாழன்:ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் ப்லீம் ஐம் க்லௌம் க்ரஹாதிபதயே ப்௫ஹஸ்பதயே வீம் ட: ஸ்ரீம் ட: ஐம் ட: ஸ்வாஹா
சுக்ரன்:மந்திரம்: ஓம் ஐம் கம் க்ரஹேச்வராய சுக்ராய நம
சனி:ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்ரஹ சக்ரவர்த்தினே சநைச்சராய, க்லீம் ஐம் ஸௌ:ஸ்வாஹா
ராகு:ஓம் க்ரீம் க்ரீம் ஹூம் ஹூம் டம் டங்கதாரிணே ராஹவே ரம் ஹ்ரீம் பைம் ஸ்வாஹா
கேது:ஓம் ஹ்ரீம் க்ரூம் க்ரூரரூபிணே கேதவே ஐம் ஸௌ: ஸ்வாஹா

தசமஹா வித்யை மூலமந்திரங்கள்

 தசமஹா வித்யை மூலமந்திரங்கள்
தக்ஷிண காளிகா(ஜென்மம் பயன்பெற)
"ஓம் க்ரீம், ஹூம் ஹூரீம் ஹூரீம் , தக்ஷிண காளிகே, க்ரீம் க்ரீம் க்ரீம், ஹூம், ஹூம் ஹ்ரீம் ஹ்ரீம் ஸ்வாஹா" yantra
 
ஸ்ரீ தாரா (இடையூறு நீங்க)
"ஓம் த்ரீம் ஹ்ரீம் ஹ்ராம் ஹ்ரூ்ம் நமஸ்தாராயை, மஹா தாராயை ஸகல துஸ்தரான் தாராய தாராய தர தர ஸ்வாஹா" tara yantra

ஸ்ரீ மஹா ஷோடசி (நினைத்தது கிட்ட}
"ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஐம் ஸௌ:- ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் - கஏஈலஹ்ரீம் ஹஸகஹலஹ்ரீம் ஸகலஹ்ரீம் ஸெள: ஐம் க்லீம் ஹ்ரீம் ஸ்ரீம்" yantra

ஸ்ரீபுவனேச்வரீ (சகல மேனாபீஷ்டம் நிறைவற)
"ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம்" yantra

திரிபுர பைரவி (ஆத்மாஞானம் கிட்ட)
"ஓம் ஹ்ஸ்ரைம் ஹ்ஸ்கலஹ்ரீம் ஹ்ஸ்ரௌ" yatra

சின்ன மஸ்தா (ஐம்புலன்கள் அடக்க)
"ஓம் ஹ்ரீம் ஹீம் ஐம் வஜ்ர வைரோசனியே ஹும் ஹும் பட் ஸ்வாஹா" chinnamasta yanta

தூமாவதி (ஜன்ம சாபல்யம் நீங்க)
"தூம் தூம் தூமாவதி ட: ட: ஸ்வாஹா" yantra

பகளாமுகி (எதிரிகளைத் துவம்சம் செய்ய)
"ஓம் ஹ்ர்லீம் பகளாமுகீ, ஸர்வதுஷ்டானாம் வாசம் முகம் பதம் ஸ்தம்பவ ஜிஹ்வாம் கீலய புத்திம் வினாசய ஹர்லீம் ஓம் ஸ்வாஹா" 

Saturday 12 October 2013

சோடசகலாப் பிராத சட்கம்

சோடசகலாப் பிராத சட்கம்

 கலைகளின் வன்னமும் தானமும் கூறியது:

 நற்றழலின் கொழுந்துபய கதிர்மின்னு விளக்கு நண்ணும் வா ளொளி புகைமா ணிக்கமிரு மின்னு உற்றொளிரு மிரவி நூறாயிரகோடி யுதவ ஒளியன்ன தொகைவட்ட ஞானாகாயம் அற்றமில் ஞானவ் வாழி ஞானக்கண் ணாடி அவிர்நூறா யிரகோடி மதியொளியத் தொகையே பெற்ற தின கரவெயில் மேற் பேசவரு மிருளே பிறங்குந்தி முதல்முடி மேற் றுவாதசாந்தம் பெறுமே

 - ௧
 மேல் சோடசகலைக்கு நாபிமுதலாகத் துவாதசாந்தம் அளவாக அளவுந் தானமும் சொல்லியது: அங்குலநா லகரத்திற் குந்தி மீதே அடுத்திடு மூன்றிற் கெட்டெட் டாயே னிற்குந் துங்கமுள நாவினுக்கு மூன்று மூன்றாந் துலங்கியவோ ரிரண்டினுக்கு நான்கு நான்காந் தங்கியமே லொன்றுக்கு மூன்றே யாகுந் தயங்கியமே லொன்றுக்கொன் றாகச் சாற்றும் பங்கமிலா விவைகள்துவா தசாந்த மாகப் பாங்குபெறு கலைகலெனப் பகரு நூலே

- ௨
மேல் அகர முதலான சோடச கலைக்கு வடிவு சொல்லியது: அகரமுக ரம் மகரம் விந்து நல்ல அர்த்த சந்திரனிவையவ் வடிவே யாகும் புகலவரு முக்கோண மிருவிந்து நடுவே பொருந்து மலம் விந்துவலம் நடுவே விந்து தகவுடைய திரிசூல மிரண்டு விந்து சாரும் வியோ மாதிநால் விந்து நான்காய் நிகழவரு மிருகுச்சி யிரண்டு விந்து நீடுமொரு விந்துவென நிறுத்து நூலே

 - ௩
மேல் பதினாறு கலைகளுக்குந் தேவதை கூறியது: மலரயன் முன்னால்வர்களு மாகு முந்தி மருவகர மாதி யொரு நாலுக்கும் மேல் இலகவரு நான்கினுக்குஞ் சதாசிவமே தெய்வம் எழிலுடைய மேலிரண்டிற் காகதமாஞ் சிவமே நலமுடைய நான்கினுக்கு நற்பரம சிவமே நண்ணுமநா கதசிவமே நவிலரிய விரண்டிற்(கு) உலகறிய வைந்துமூன் றிரண்டி ரண்டே யுள்ளாகு மிரண்டிரண்டிற் கொருநான்கு தானே

- ௪

மேல் ஆதார நிராதாரங்களுக்குங் கலைகளுக்கும் மலநிலை சொல்லியது: மூலத்தி லோங்கார மசபைக் காக மொழிவர்கா மிகமலமேல் முகிழ்க்கு முந்தி யேலத்தான் மேவகர முன்னி ரண்டிற் கிழுக்குமல மேலிரண்டிற் கிலகு மாயை சீலத்தான் மேவிரண்டிற் றிகழ்மா யேயத் திறலுடைய மேலிரண்டிற் சேர்மா மாயை சாலத்தான் மேலிரண்டிற்ற குதி ரோதந் தயங்கியமே லிரண்டிற் கா ணவமே சாற்றில்

- ௫

மேல் ஆதார நிராதாரங்களிலுள்ள மலங்களுடனே எண்பத்து நான்கு நூறாயிர யோனி பேதமும் சோதனைப் படும் என்கின்றது: அரியமூலா தார மதனின் மேவி யவிரு மோங் காரமொழி லசபைக் காகத் தெரிவரிய யோனிதா பரமே யாகுந் திகழ்வரு முந்தியின்மே லகரமாதிப் பிரவரிய விவ்விரண்டா யதுகூ றாகிப் பெறும் யோனி யூர்வனவு நீரில் வாழ்தற்(கு) உரியனவும் பறவைகளு நாற்கான்மா னிடரும் உயர்தெய்வ கதியுமென வுரைக்கு நூலே

 - ௬

மேல் எல்லாக் கலைகளுக்கும் மாத்திரையுஞ் சட்சூனியமும் கூறியது: மூன்றுகர மிரண்டுகர மகர மொன்ரே முந்துவிந்து வரைபிறைகால் முக்கோண மரைக்கால் ஆன்றமைந்த நாதமா காணி நாதாந்தம் அரைமாமே லரைக்காணி சத்தியைமுந் திரியை யேன்றவியா பினியரைக் காணியின்கீ ழினரையே யிம்முறை வியோமாதி யரையரைமாத் திரையே தோன்று மகரத்தின்மே னிரோதசத்தி யின்மேல் தோற்றும்வியா பினிசமனை யுன்மனை மேற்சுன்னே
 - ௭ -

 சோடசகலாப் பிராத சட்கம் முற்றிற்று -

Thursday 10 October 2013

போலியான மின்னஞ்சல் முகவரி-- கண்டறிய நமக்கு ஓர் இணையதளம்

போலி மின்னஞ்சல் முகவரியை கண்டறிய வேண்டுமா… இதைப்படியுங்கள்…!

emailநண்பர்களோ அல்லது மற்றவர்களோ அவர்களைத் தொடர்புகொள்ள நம்மிடம் தமது மின்னஞ்சல் முகவரியைப் பகிர்ந்துகொள்கின்றனர். ஆனால் மற்றவர்கள் பகிர்ந்துகொள்ளும மின்னஞ்சல் முகவரிகள் சரியானதா இல்லை போலியானதா என்று பார்த்தவ நம்மால் கண்டறிய முடியாது.
அவர்கள் கொடுக்கும் மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பினாலும் சென்று சேராது. இதற்கு காரணம் ஒருவேளை அவர்கள் தவறான மின்னஞ்சல் முகவரியைக் கொடுத்திருக்கலாம் அல்லது அதிக நாட்கள் உபயோகிக்காமல் விட்டதால் செயலிழந்து இருக்கலாம். இல்லையென்றால் வேண்டுமென்றே நம்மிடம் போலியான மின்னஞ்சல் முகவரியை கொடுத்திருக்கலாம்.
அதுபோன்ற நேரங்களில் குறிப்பிட்ட மின்னஞ்சல் முகவரி சரியாக வேலை செய்கிறதா இல்லை செயலிழந்து விட்டத கண்டறிய நமக்கு ஓர் இணையதளம் உதவி புரிகிறது.
அந்த இணையதளத்துக்கான லிங்க்.
http://www.verifyemailaddress.org/
ஒரு மின்னஞ்சல் சரியானதா இல்லை போலியானதா என்று அறிந்த நீங்கள் அதிக தொழில்நுட்ப அறிவு பெற்றிருக்க வேண்டிய அவசியமில்லை. குறிப்பிட்ட லிங்கில் சொடுக்கி அந்தத் தளத்துக்குச் செல்லுங்கள்.
அதில் ஒரு விண்டோ வரும். அதில் உள்ள காலி கட்டத்தில், நீங்கள் பரிசோதிக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரியைக் கொடுத்து அருகில் உள்ள Verify Email என்ற பட்டனை அழுத்தவும். நீங்கள் அவ்வாறு அழுத்தியவுடன் நீங்கள் கொடுத்த மின்னஞ்சல் முகவரி சரியானதா, இல்லை போலியானதா என்ற முடிவு வரும். குறிப்பிட்ட மின்னஞ்சல் சரியாக இருந்தால் அது Valid என்றும், இல்லை என்றால் not Valid என்றும் வரும்.அதை வைத்து குறிப்பிட்ட மின்னஞ்சல் சரியானதா இல்லை போலியானதா என்பதை நீங்க தெரிந்து கொள்ள முடியும்.

பாரதி வாழ்வு: சில காலக் குறிப்புகள்

பாரதி வாழ்வு: சில காலக் குறிப்புகள்

1882
டிசம்பர் - 11 சுப்பிரமணிய பாரதியார் பிறந்த நாள் (கார்த்திகைத் திங்கள்; மூல நட்சத்திரம்) தந்தை: திரு.சின்னசாமி ஐயர், அன்னை: திருமதி.இலட்சுமி அம்மாள். 'சுப்பையா' இது வீட்டிலே வழங்கிய பெயர்.
1887
அன்னையார் மறைவு
1889
தந்தையார் மறுமணம். 'மாற்றாந்தாய்' திருமதி. வள்ளியம்மாள், பாரதியை அன்புடன் பேணிய வளர்ப்புத் தாய்; தந்தையார் மறுமணத்தின்போதே பாரதிக்குப் பூணூல் அணியும் சடங்கு. தந்தையாரிடம் தொடக்கக் கல்வி.
1893
கவிதைத் திறமை கண்டு புலவர்கள் 'பாரதி' பட்டம் சூட்டினர்.
1894-97
நெல்லை, இந்துக் கல்லூரிப் பள்ளியில் (ஐந்தாம் பாரம் வரை) கல்வி.
1897
ஜுன் 15 திருமணம். கடையம் திரு.செல்லப்பா ஐயரின் மகளார் செல்லம்மாள் பாரதியின் வாழ்க்கைத் துணைவியார்.
1898
ஜுன்: தந்தையார் மறைவு. பாரதி, காசிப் பயணம். அத்தை திருமதி. குப்பம்மாள் ஆதரவு. காசி இந்துப் பல்கலைக் கழகத்தில் கல்வி. வடமொழி, இந்துஸ்தானி மொழிகளில் பயிற்சி, அலகாபாத் பல்கலைக் கழக நுழைவுத் தேர்வில் முதல்வர்.
1902
எட்டயபுரம் மன்னர் அழைப்பை ஏற்று எட்டயபுரம் திரும்பினார். சமஸ்தானத்தில் பணி.
1903
சமஸ்தானப் பணி விடுத்து, மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியப் பணி. மூன்று திங்களே இப்பணியில் இருந்தார். சோழவந்தான் அரசஞ் சண்முகனார் விட்டுச்சென்ற இடத்தில் பாரதியார் பணியாற்றினார் என்பது இதுவரை பலர் அறியாத செய்தி.
1904
'சுதேச மித்ரன்' உதவியாசியப் பணி. சென்னையில் பாரதியார்க்கு அறிமுகமானவர்களில் குறிக்கத்தக்கவர்கள்: ஜி.சுப்பிரமணிய ஐயர், சர்க்கரைச் செட்டியார், மண்டையம் எஸ்.என்.திருமலாச்சாரியார், டாக்டர் எம்.சி.நஞ்சுண்டராவ், ஜி.ஏ.நடேசன், வி.கிருஷ்ணசாமி ஐயர், திரு.வி.க. மூத்த மகள் தங்கம்மாள் பிறப்பு.
1905
வங்கப் பிரிவினையால் நாடு முழுவதிலும் தேசியக் கிளர்ச்சியில் பேரெழுச்சி.
1906
கல்கத்தாக் காங்கிரஸ் மாநாடு, தாதாபாய் நவுரோஜி தலைமையில் - சுதேசிப் பொருளே பயன்படுத்த வேண்டும், அயல்நாட்டுப் பொருள் புறக்கணிக்க (பகிஷ்கரிக்க)ப் படவேண்டும், தேசியக் கல்வித் திட்டம் வேண்டும் முதலிய கருத்துகளைத் தாங்கிய தீர்மானங்கள் கல்கத்தாக் காங்கிரசில்தான் நிறைவேறின. 'சுயராஜ்யம்' என்ற சொல்லும் அதன் வழிப்பட்ட கருத்தும் வேர் பாய்ச்சிய காலம் அது.
கல்கத்தாவிலிருந்து திரும்பும் போதுதான் சகோதரி நிவேதிதாவைச் சந்தித்து, ஞானாசிரியராகக் கொண்டார். ஆன்மிகம் தேசியம் ஆகிய துறைகளிலே ஏற்கனவே ஈடுபாடு கொண்டிருந்த பாரதிக்கு இந்தச் சந்திப்பு மிகவும் வேகத்தையும் ஆழ்ந்த ஈடுபாட்டையும் ஏற்படுத்திற்று. அவருடைய ஆளுமையின் தீவிர வளர்க்சிக்கு நிவேதிதையார் தொடர்பு பெருங்காரணம் என்பது மிகையாகாது.
1907
ஏப்ரல் 'இந்தியா' ஆசிரியப் பொறுப்பு - விபன சந்திரபாலர் சென்னை வருகை; பாரதியின் பெரும்பங்கு. 'பால பாரத' என்ற ஆங்கிலப் பத்திரிகையையும் பாரதி நடத்தினார்.
சூரத் காங்கிரஸ்-இயக்கத்தில் பிளவு - தமிழ்நாட்டுப் பிரதிநிதிகளில் பாரதி ஒருவர்; மற்றவர்கள் வ.உ.சிரம்பரம்பிள்ளை, சுரேந்திரநாத் ஆர்யா, வி.சர்க்கரைச் செட்டியார், வி.துரைசாமி ஐயர் - இவர்கள் திரகர் தலைமையில் இயங்கிய தீவிரவாதிகளாவர் - இந்தத் தீவிரவாதிகளில் லாஜபதிராய் குறிக்கத்தக்கவர்.
1908
ஜி.ஏ.நடேசன் வாயிலாகப் பாரதியாரை அறிமுகம் செய்துகொண்ட திரு.வி.கிருஷ்ணசாமி ஐயர் பாரதியாரின் சில பாடல்களை அச்சிட்டு வெளியிட உதவினார் - அப்போது அச்சானவற்றுள் 'எந்தையும் தாய்', 'ஜய பாரத' என்பவை சில. பாரதியாரே அவர் பாடல்களைப் பாடக் கேட்டுக் கிருஷ்ணசாமி ஐயர் உவகையுற்றுப் பாடல்களை வெளியிட முன் வந்தார். கிருஷ்ணசாமி ஐயருக்குப் பாரதியின் தீவிரவாதம் உடன்பாடு இல்லை; அவர் மிதவாதி ஆயினும், பாரதியின் கவிதைகளிலே நாட்டம் கொண்டார்.
பாரதியாரே தம் கவிதைத் தொகுப்பை (ஸ்வதேச கீதங்கள்) இந்த ஆண்டில்தான் வெளியிட்டார்.
வ.உ.சி., சுப்பிரமணிய சிவா வழக்கில் பாரதி சாட்சியம்
'இந்தியா' பத்திரிகை உரிமையாளர் கைது.
புதுச்சேரி சேர்தல் - குவளைக் கிருஷ்ணமாச்சாரியார் (குவளைக் கண்ணன்) சந்திப்பு - பிரிட்டிஷ் இந்தியாவில் இடர்ப் பாட்டுக்கு உள்ளான 'இந்தியா' புதுச்சேரியிலிருந்து மீண்டும் வெளிவரத் தொடங்கியது - 'விஜயா', 'சூர்யோதயம்' என்ற இதழ்களும் புதியனவாக தொடங்கப்பட்டன பாரதியாரைத் தலைவராகக் கொண்ட 'பால பாரத சங்கம்' தோன்றியது.
இரண்டாவது மகள் சகுந்தலை பிறப்பு - திருமதி செல்லம்மாளும் புதுவை வந்து சேர்தல்.
1909
ஸ்வதேச கீதங்கள் இரண்டாம் பாகம் 'ஜன்ம பூமி' என்ற பெயரில் வெளிவந்தது.
'இந்தியா' 'விஜயா' இரண்டு இதழ்களுக்கும் பிரிட்டிஷ் இந்தியாவில் தடை
1910
ஏப்ரல் தொடக்கத்தில் அரவிந்தர் புதுவை வருகை - பாரதி - அரவிந்தர் தொடர்பு - இருவரும் வேத ஆய்வில் ஈடுபட்டனர் - அரவிந்தர் நடத்திய ஆர்ய (ARYA) இதழில் பாரதியார் எழுதினார்.

இதே ஆண்டு நவம்பரில் ஒரு கவிதைத் தொகுதியைப் பாரதி வெளியிட்டார். "இதன் இயல்பு தன் கூற்றெனப்படும். அதாவது, கதாநாயகன் தன் சரிதையைத் தான் நேராகவே சொல்லும் நடை" என்ற முகவுரைக் குறிப்போது 'கனவு' என்ற பெயரில் வெளிவந்தது அந்த நூல்; பின்னே 'ஸவசரிதை'யாக வந்ததும் அதுவே.
'கர்மயோகி' இதழ் வேளிவரத் தொடங்கியது. (இரண்டாண்டுகளே இந்தப் பத்திரிகை நடந்தது)
வ.வே.சு.ஐயர் புதுவை சேர்தல்.
1911
"ஆஷ் துரையின் கொலையால் ஒற்றர்களின் அட்டகாசம் அதிகரித்தது. தேசபக்தர்களைப் புதுவையிலிருந்து வெளியேற்றுவதற்கு அவர்கள் செய்த சதி பலிக்கவில்லை" (அரசாங்கம் வெளியீடு)
பாரதிக்கு மெய்க்காப்பளர்போலத் தொண்டுபுரிந்த அம்மாகண்ணு அம்மாளும் அவளுடைய புதல்வர்களான வேணுகோபால், தேவசிகாமணி ஆகியோரும் பாரதிக்குக் கிடைத்தற்கரிய உயர்த் தொண்டர்கள் - புதுவையில் பாரதிக்கு நெருக்கமானவர்கள் கனக சுப்புரத்தினம் என்ற பாரதிதாசன், வ.ரா. (மசாமி ஐயங்கார்), சங்கர கிருஷ்ணன், தோத்தாத்திரி, ஹரி ஹர சர்மா, குவளைக் கண்ணன் போன்ற சீடர்கள்; மற்றும், அரவிந்தர், வ.வே.சு.ஐயர், பரலி.சு.நெல்லையப்பர், சிவக்கொழுந்து நாயக்கர், வாத்தியார் சுப்பிரமணிய ஐயர், சங்கரச் செட்டியார், பொன்னி முருகேசம் பிள்ளை, கிருஷ்ணசாமிப் பிள்ளை, கிருஷ்ணசாமிச் செட்டியார், மேலும் பல பெரியோர்கள்.
'சின்னச் சங்கரன் கதை'யும் மற்றம் சில கையெழுத்துப் படிகளும் ஒற்றர்களிடம் சிக்கி அழிந்துபோயின. நண்பர்களின் தூண்டுதலால் 'சின்னச் சங்கரன் கதை'யை மட்டும் புதிதாக எழுதினார்; ஆனால் ஆறு இயல்கள் மட்டுமே உருயின. அந்த அளவில் 'ஞானபாநு' (சுப்பிரமணிய சிவா நடத்திய இதழ்) வெளியிட்டது.

1914
நேடாலில் பாரதியின் 'மாதா மணிவாசகம்' வெளியாயிற்று
1917
கண்ணன் பாட்டு (முதற் பதிப்பு); பரலி சு.நெல்லையப்பர் வெளியிட்டார்.

1918
பரலி சு.நெல்லையப்பர் பாரதியின் 'நாட்டுப் பாட்டு' (முதற் பதிப்பு) வெளியிட்டார்.
நவம்பரில் புதுவையை விட்டுப் புறப்பட்ட பாரதியைக் கடலூரில் கைது செய்தனர். சென்னை வழக்கறிஞர் திரு.துரைசாமி ஐயர், 'சுதேசசமித்திரன்' ஆசிரியர் திரு.ஏ.ரங்கசாமி ஐயங்கார் சி.பி.இராமசாமி ஐயர் ஆகியோர் முயற்சியால் விடுதலை பெற்றார்.
1919
கடையம் (திருமதி செல்லம்மாள் ஊர்), எட்டயபுரம் - இரண்டு ஊர்களிலும் தங்கி வந்தார். இடையில் திருவனந்தபுரத்தில் நடந்த ஒரு திருமணத்துககுப் போனபோது திரு.கே.ஜி.சேஷையரின் பழக்கம் ஏற்பட்டது.
1920
மீண்டும் 'சுதேசமித்திரன்' உதவியாளரானார். புதுவையிலிருந்து வ.வே.சு.ஐயரும் பல நண்பர்களும் சென்னை வந்து சேர்ந்தனர்.

காந்தியடிகளைக் கண்டு, சில மணித்துளிகள் பேசும் வாய்ப்பினைப் பாரதியார் பெற்றார். நேரம் சிறிதளவேயாயினும் இரு பெருமக்களும் ஒருவரை யொருவர் இனங்கண்டு கொண்ட அற்புதமான சந்திப்பு.
1921
திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி கோயில் யானை பாரதியைத் தூக்கி எறிந்தது. செப்டம்பர் மாதம் 11ஆம் நாள் பாரதி மறைவு.

ஆதி சங்கரர் காலத்திலேயே போலி சாமியார்கள் இருந்திருக்கிறார்கள் போல!

எழுத்தாளர் திரு. சுந்தர்
ஜி ப்ரகாஷ் அவர்கள் ஆதி சங்கரரின் "பஜ கோவிந்தம்" என்னும் பக்தி இழையோடும் ஞான வைராக்கிய நூலின் 31 சரணங்களையும் சுருக்கமாக மொழி பெயர்த்து அளித்திருந்தார். அதனை வாசித்த போது பற்பல எண்ணங்கள் என் மனத்தில் அலை பாய்ந்தன.
முதலில் திருமதி. எம்.எஸ் அவர்கள் குரலில் அமைந்த பத்து பாடல்களுக்கு ராஜாஜி அவர்களின் முன்னுரை நினைவுக்கு வந்தது. நான் மாணவனாக இருந்தபோது அந்த உரையை அவருடைய குரலிலேயே (மிமிக்ரி) பேசி பரிசு பெற்றிருக்கிறேன். "அத்வைத சித்தாந்தத்தை பரப்பிய ஆதி சங்கரர், பக்தி மார்க்கத்தின் முக்கியத்துவத்தையும் அடிக்கோடிட்டு பல ஆக்கங்களை அளித்திருக்கிறார்; அவற்றில் பஜ கோவிந்தமும் ஒன்று" என்று மூதறிஞர் ராஜாஜி அவர்கள் இந்த அறிமுகத்தை தொடங்கி, அதன் முத்தாய்ப்பாக "Shri Sanakra has packed into the Bhaja Govindam song, the substance of all Vedanta, and set the oneness of Gnana and Bhakthi to melodious music" என்று இரத்தினச் சுருக்கமாக இந்தப் படைப்பை அறிமுகப் படுத்தியிருக்கிறார்.
அங்கும் இங்கும் அலைபாயும் நம் "மூட" மனத்தின் அலங்கோலத்தைப் பற்றித்தான் அந்த ஸ்லோகங்கள் விவரிக்கின்றன. நிலையில்லாத இகலோக சுகங்களின் ஈர்ப்பு எப்படி நம் மனத்தை ஆக்கிரமிக்கிறது, அதனிலிருந்து மீள்வது எவ்வளவு முக்கியம் என்பது இந்த நூலின் அடிநாதமான கருத்து. ஓஷோ ரஜனீஷ் இதற்கு விரிவான உரை ஒன்றை அளித்திருப்பதாக அறிகிறேன். அதனையும் சின்மயானந்தாவின் உரையையும் வாசிக்கவேண்டும். That is part of my Ta-da list!
அந்த நூலின் பதினான்காவது ஸ்லோகம் மிகவும் சுவாரசியமானதாக மற்றும் சமகால நிதர்சனத்திற்கு ஒப்ப அமைந்திருக்கிறது. அந்த ஸ்லோகத்தை அப்படியே சமஸ்கிருதத்தில் அளிக்கிறேன்:
जटिलो मुण्डी लुञ्छितकेशः
काषायाम्बर बहुकृतवेषः |
पश्यन्नपि च न पश्यति मूढः
ह्युदरनिमित्तं बहुकृतवेषः ||
தமிழில்:
ஜடிலோ முண்டீ லுஞ்சித கேச:
காஷாயாம்பர பஹு கிருத வேஷ:
பஸ்யன்னபி ச ந பஸ்யதி மூட:
ஹி உதர நிமித்தம் பஹு கிருத வேஷ:
இதன் சுருக்கமான தமிழாக்கம்:
போலி சாமியார்"சடை வளர்த்தவன், சிகையை மழித்தவன், காவித்துணி உடுத்தி வேஷம் போடுபவன்- இவர்கள் எல்லோரும் கண்ணிருந்தும் குருடர்கள். இவர்களின் வேஷம் அத்தனையும் வயிற்றுப் பிழைப்புக்குத்தான்."
வேஷம் போடும் சாமியார்கள் அந்தக் காலத்திலும் இருந்திருக்கிறார்கள் என்பதை இதன் மூலம் அறிகிறோம். மனிதன் தோன்றிய காலத்திலிருந்தே போலிகளும், பித்தலாட்டக்காரர்களும் இருந்திருக்கிறார்கள். திருவள்ளுவரும் இதே கருத்தை:
மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்த தொழித்து விடின்
என்று "கூடா ஒழுக்கம்" என்னும் அதிகாரத்தில் இந்த வேஷதாரிகளை நமக்கு சுட்டியிருக்கிறார்.
வெறும் வயிற்றுப் பிழைப்புக்காக மட்டும் என்ற நிலையைத் தாண்டி தற்போது அது பணம் கொழிக்கும் பிசினஸாக மாற்றம் கொண்டுவிட்ட சூழலைத்தான் நாம் காண்கிறோம். இந்தத் தொழிலுக்கு "ஆன்மீகம் பண்ணுவது" என்று பெயர்! கொண்டு வந்து கொட்டுவதற்கு மக்கள் தயாராக இருக்கிறார்கள்!
வேதாந்த ரகசியங்களை ஒரு கற்றறிந்த குருவின் மூலமாக அறிய வேண்டும் என்று நமது சனாதன தர்மத்தின் நீதி நூல்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இன்றைக்கு உள்ளது போல் பள்ளிக்கூடங்களோ கல்லூரிகளோ இல்லாத காலகட்டத்தில் அறிவிற் சிறந்தவராகக் கருதப்பட்ட ஒரு பெரியவரை குருவாக ஏற்று அவர் மூலம் கல்வி கற்பது அந்தக் கால முறை. அதனால் அந்த குருவிற்கு சமுதாயத்தில் ஏற்றமானதொரு படிநிலையை அளித்திருந்தனர்.
ஆனால் அந்த குரு ஒருவரின் தகப்பனாகக் கூட இருக்கலாம். உண்மையில் ஒருவருக்கு காயத்ரி மந்திரத்தை "பிரம்மோபதேசம்" செய்விப்பது அவர்தம் தகப்பன் தானே! மேலும் சமஸ்கிருதத்தில் "குரு" என்னும் சொல்லுக்கு தந்தை என்றும் பொருள் உண்டு. காளிதாசரின் ரகு வம்சத்தில் நான்காவது சர்க்கத்தின் முதல் பாடலில் "ச ராஜ்யம் குருணா தத்தம்…" என்று தகப்பனால் அளிக்கப்பட்ட அரசு என்று குறிப்பிடுகிற இடத்தில் "குரு" என்னும் சொல் பயன்படுத்தப் பட்டிருப்பதைக் காண்கிறோம்.
அந்த "குரு" தான் இன்றைக்கு பல போலிகள் கைகளில் சிக்கி படாதபாடு பட்டுக் கொண்டிருக்கிறது!
முற்றிலும் மாறுபட்ட இன்றைய சூழலில் நாமே புத்தகங்கள் வாயிலாகவும், இணையம் மற்றும் ஊடகங்கள் வாயிலாகவும் பலவற்றை கற்க முடிகிறது. அதுபோல் வேதங்கள், உபநிஷத்துக்கள் மற்றும் பல வேதாந்த நூல்களையும், தர்ம சாஸ்திரத்தையும் நாமே கற்றறிந்து கொள்ளக்கூடிய நிலை வந்து விட்டது. ஆனால் தற்போதும் பல போலி அறிவாளிகள் தங்கள் வாக் சாதுரியத்தாலும், கண்கட்டு வித்தைகளாலும் (hocus-pocus) மக்களை ஏமாற்றி, தாங்களே கடவுள் என்றும் கூறி நம்ப வைத்துக் கொண்டும் ஏமாற்றி வருகின்றனர். இது போன்ற பல போலிகளின் ஏமாற்று வேலைகள் அம்பலத்திற்கு வந்து அவர்கள் கிரிமினல் குற்றங்களுக்காக தண்டனை கூட அடைந்திருக்கிறார்கள். ஆனாலும் இன்னமும் அதுபோன்ற போலிகளிடம் ஏமாறுவோரின் எண்ணிக்கை குறையவில்லை. ஒரு புதுக் கவிதை வாசித்தேன்:
குருவே,
நீங்கள் வெறும் காற்றிலிருந்து
விபூதி எடுக்கிறீர்கள்
லிங்கம் எடுக்கிறீர்கள்
தங்கம் எடுக்கிறீர்கள்
ஆனால்
உங்களை ஜாமீனில் எடுக்க
முடியவில்லையே!
Properly structured validation process, peer review போன்ற திறனாய்வு முறைகள் நெறிப்படுத்தப்பட்டிருக்கும் அறிவியல் துறைகளிலேயே பல டுபாகூர் விஞ்ஞானிகள் (charlatans) தோன்றி மக்களை ஏமாற்றி வரும் இன்றைய சூழலில் "மகராஜன் கப்பல், கொள்வதெல்லாம் கொள்ளும்" என்ற நிலையிலிருக்கும் ஆன்மீகத்தில் யார் வேண்டுமானாலும் புகுந்து விளையாடலாம் தானே!
உலகம் உருண்டை என்று எல்லோரும் சொன்னால், அது தவறு என்றும் உலகம் உண்மையில் தட்டையாக, ஆனால் சிறிது உப்பலாக ஊத்தப்பம் வடிவத்தில் உள்ளது என்றும் ஒரு புது அறிவாளி சொல்ல ஆரம்பித்தால், அவனைச் சுற்றியும் பத்து பேர் கூடுவார்கள். அவன் உடனே தன் அறிவார்ந்த சொற்பொழிவுகளை வீடியோ எடுத்து விளம்பரம் செய்து மில்லியன் கணக்கில் கல்லா கட்டுவான்! இதுபோன்ற செயல்பாடுகளைத்தான் நாம் கண்கூடாகக் காண்கிறோம்!
மக்களிடம் "மந்திரத்தில் மாங்காய் காய்க்கவேண்டும்", முயற்சியேயில்லாமல் பலன் பெற வேண்டும் என்னும் ஷார்ட்கட் மனப்பான்மை பெருகியிருப்பதால் இது போன்ற போலி சாமியார்கள் ஆதிக்கம் லவலேசமும் குறையாது என்பது திண்ணம்!

திருக்குறள் - பௌத்த உரை

திருவள்ளுவர் வைதிகரா சமணரா என்று விவாதங்கள் நடைபெறும் நிலையில், திருக்குறளுக்கு ஏன் ஒரு பௌத்த உரை எழுதக்கூடாது என்று தோன்றியது :). முதற்குறளுக்கான பௌத்த உரை, இதோ !

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி 
பகவன் முதற்றே உலகு

அகரம் எழுத்துக்களுக்கு முதன்மையானது ஆதிபகவன் உலகிற்கு முதன்மையானவன். 
 
எழுத்துக்களில் அகரத்தை மட்டும் முதன்மையாக உணர்த்தியது எதனால் ?
 
குருகுலத்தில் கற்கும் போது  அகரத்தை ஆசார்யர் உச்சரித்தவுடன், போதிசத்துவரின் அதிஷ்டானத்தினால் ”ததா அநித்ய ஸர்வஸம்ஸ்கார சப்தோ நிஸ்சரதி ஸ்ம” என்றவாறு அந்த அகரமானது சர்வஸம்ஸ்காரங்களும் ”அநித்யமானது” என உணர்த்தியதாம். “அகாரோ முக ஸர்வதர்மாணாம்” என்றவாறு அகரமே சகலதர்மங்களுக்கு முகமானது என்று அஷ்டஸாஹஸ்ரிக ப்ரஜ்ஞாபாரமிதா சூத்திரத்தில் பகவனே அகரத்தின் முதன்மைமை உபதேசிக்கிறார். 
 
ஆதிபகவன் யாரை குறித்தது ?
 
இங்கு ஆதிபகவன் எனக்குறிப்பது ஆதிபுத்தனையே. “பகவனே ஈசன் மாயோன் பங்கயன் சினனே *புத்தன்*” என்று சூளாமணி நிகண்டு கூறுகிறது. ”பகவான்மாரஜில்லோஜஜ்ஜின:” என்றவாறு அமரகோசமும் புத்தனுடைய நாமங்களில் ஒன்றாக “பகவத்” என்பதை குறிக்கிறது. ”ஏவம் மயா ஸ்ருதம் ஏகஸ்மின் ஸமயே பகவான்” என்று சகல பௌத்த சூத்திரங்களும் புத்தனை பகவான் என்று குறிப்பிட்டே நிதானத்தை துவங்குவதையும் கருத்தில்கொள்க. 
 
எழுத்துக்கள் எதை குறித்தன ?
 
பிராஹ்மி, கரோஷ்டி, அங்கலிபி, வங்கலிபி, திராவிடலிபி என பகவனால் அறியப்பட்ட சதுஷ்ஷஷ்டி லிபிகள்.
 
ஆதிபகவன் உலகிற்கு முதன்மையானது எதனால் ?
 
அமரகோசத்தின்படி, “லோகஜித்” என்பதும் பகவனின் நாமமாம். உலகத்தை வென்றவனாதலால் உலகிற்கு முதன்மையானாவன் எனக்கருதுவது இங்கு பொருந்தும். லலிதவிஸ்தர சூத்திரத்திலும் ”லோகநாத இத்யுச்யதே | லோகஜ்யேஷ்ட இத்யுச்யதே | லோகஸ்ரேஷ்ட இத்யுச்யதே | லோகேஷ்வர இத்யுச்யதே |” என்றவாறு லோகநாதன் என்றும் குறிப்பாக லோகஜ்யேஷ்டன்(உலகத்திற்கு மூத்தவன்) என்றும் லோகசிரேஷ்டன் என்றும் லோகேஷ்வரன் என்று பகவனின் நாமங்களாக பல இருப்பது ஈண்டு கவனத்திற்கொள்ளவேண்டியது.
 
வர்தமானகால பத்திரகல்பத்து புத்தரை அன்றி திரிகாலங்களை சார்ந்த சகல புத்தர்களையும் குறிக்கும் பொருட்டு, தர்மகாயத்தின் உருவகமான ஆதிபுத்தனே போற்றப்பட்டரென்க. ஆதிபுத்தன் தர்மகாய ஸ்வரூபத்தை குறிப்பதாம். தர்மகாயத்தின் ஸ்வரூபம் மஹாவைரோசனராம். அகரமோ வைரோசன புத்தரின் பீஜம். அகரம் ஆதிபகவனுக்கு உவமையாக கூறப்பட்டது குறிப்பால் இதை உணர்த்தவே என்க.
 
உலகு என்பதை எதை குறித்தது ?
 

மேரு பர்வதமும் அதை சுற்றிய நான்கு மஹாத்வீபங்களும் போன்ற, ஆயிரம் மேரு மலைகளை கொண்டது “ஸஹஸ்ரசூடிக லோகதாது”. ஆயிரம் ஸஹஸ்ரசூடிக லோகதாதுவை அடக்கியது “த்விதீயமத்யம லோகதாது”. ஆயிரம் த்விதீயமத்யம லோகதாதுவை அடக்கியது ”திரிஸாஹஸ்ர மஹாஸாஹஸ்ர லோகதாது”. இந்த திரிஸாஹஸ்ரமஹாஸாஹஸ்ரலோகாது மொத்தமும் ஒரு உத்தமநிர்மாணகாய புத்தனின் ஆளுகைக்கு உட்பட்டதாம். உத்தமநிர்மாணகாய புத்தனின் ஆளுகைக்கு உட்பட்டவையே “உலகு” என குறிக்கப்பட்டது.

Monday 7 October 2013

அம்பிகை சிதக்னி குண்டத்தில் தோன்றியவள்


ம்பிகை சிதக்னி குண்டத்தில் தோன்றியவள். தேவர்களின் கார்யங்களைச் சிறப்பாகச் சாதிப்பதற்காகவே அவள் இவ்வாறு தோன்றினாள். இவ்வாறு சிதக்னி குண்டத்தில் தோன்றிய அன்னையை எரியோம்பி வழிபடுவதே “சண்டிஹோமம்” போன்றன.
வ்வாறாக, யாககுண்டத்தில் வளரும் தீயில் உருப்பெற்று எழும் ஶ்ரீசக்கரத்தின் உச்சியில் உள்ள பிந்துவில் அன்னையானவள் பரசிவனின் மடியில் எழுந்தருளியிருக்கிறாள். அவளிடமிருந்து அவனையும், அவனிடமிருந்து அவளையும் பிரிக்க இயலாது.
“மூவர்க்கும் முற்பொருளாய் முத்தொழிற்கும் வித்தாகி
நாவிற்கும் மனதிற்கும் நாடரிய பேரறிவாய்
தேவர்க்கும் முனிவர்க்கும் சித்தர்க்கும் நாகர்க்கும்
யாவர்க்கும் தாயாகும் எழில் பரையை வணங்குவாம்”
என்று அபிராமி பட்டர் போற்றுவது போல, எழில் பரையாக, முன்னைப் பழமைக்கும் முன்னைப் பழையவளாய், பின்னைப் புதுமைக்கும் புதுமையளாய் அவள் அங்கே காமேஸ்வரியாக எழுந்தருளியிருக்கிறாள். இவ்வாறு காமேஸ்வரன் திருமடியில் எழுந்தருளியிருக்கும் அன்னை மஹாத்ரிபுரசுந்தரியானவள் நான்கு கரங்கள் கொண்டருள்கிறாள். அங்குசமும் பாசமும் பின்னிரு கரத்திலும் கரும்பும், பஞ்சபாணங்களும் அவளின் முன்னிரு கரத்திலும் மிளிர்கின்றன.
ப்போது, வரமருளவும் அபயம் தரவும் கரங்கள் இல்லையே என்றால், அப்பணிகளை அவள் திருவடிகளே அநாயாசமாகச் செய்தருள்கின்றன என்பது சக்தி உபாசகர்களின் நம்பிக்கை.
பிரபஞ்ச நாயகி பரம்பொருள் விமர்சனம் என்ற கண்ணாடியில் தன்னைப் பார்க்கும் போது அப்பரம்பொருளுக்கே “அஹம்பாவம்” ஏற்பட்டு விடுகிறதாம். அப்போது அப்பரம்பொருள் காமேஸ்வரராகிறார். அம்பிகையோ, காமேஸ்வரி ஆகிறாள்.
தன் போதே, பிரபஞ்சம் உருவாகிறது. இக்காமவல்லியை உபாசிக்கும் மரபே ஶ்ரீவித்யையாகும். ஶ்ரீவித்யையின் முக்கிய இடத்தை ஶ்ரீசக்கர உபாசனை பெறுகிறது என்பர்.
ஶ்ரீசக்கர மத்தியில் ப்ரம்மா, விஷ்ணு, ருத்ரன், மஹேஸ்வரன், ஆகியோரைக் கால்களாகவும், சதாசிவனைப் பலகையாகவும் கொண்ட பஞ்ச பரும்மாசனத்தில் “ஸர்வானந்தமயபீடம்” என்கிற பிந்து வடிவமான மஹா பீடத்தில் காமேஸ்வரனின் இடது மடியில் அன்பு வடிவமான பாசத்தையும், கோபமாகிய அங்குசத்தையும், மனமாகிய கரும்பு வில்லையும், ஐந்து தன்மாத்திரைகளைக் குறிக்கும் பஞ்சபாணங்களையும் ஏந்தியவளாக ஶ்ரீமத் லலிதா மஹாத்ரிபுர சுந்தரி எழுந்தருளியிருப்பாள் என்று சாக்த தந்திரங்கள் குறிப்பிடுகின்றன.
சிவானந்தப் பேறருளி முக்தி தருபவள்
சாக்தர்களுக்கு மட்டுமல்ல, சைவர்களுக்கும் அன்னை வழிபாடு முக்கியமான ஒன்றாக விளங்குகிறது. “சிவஞானப்பிரதாயினி” என்பது அம்பாளின் திருநாமங்களுள் ஒன்று. சிவஞானப்பேற்றைத் தந்து முக்தி அருளும் சிறப்புடையவள் அவளேயாம்.
க, அன்னையை இவ்வாறு மனதில் கற்பித்து, மனச்சுத்தி பேணி, வைதீக மரபின் வண்ணம் அக்னியிலும், ஆகம மரபின் வண்ணம் விக்கிரகத்திலும், தாந்திரீக மரபின் வண்ணம் ஶ்ரீசக்கரத்திலும் ஆவாஹித்து வழிபடுவர். இவ்வாறு சாக்த தந்திர மரபின் வண்ணம் வழிபடுவது என்பதும் தமிழகத்தின் மிகப் பழமையான வழிபாட்டு மரபுகளுள் ஒன்று.. திருமந்திரம் தந்த திருமூலர் பெருமானே இவ்வழிபாட்டு மரபு பற்றி விளக்கிச் சொல்லியிருக்கின்றமையை காண்கிறோம்.
“ககராதி ஓரைந்தும் காணிய பொன்மை
அகராதி ஓராறு அத்தமே போலும்
சகராதி ஓர்நான்கும் தாள் சுத்தவெண்மை
ககராதி மூவித்தை காமிய முக்தியே
                                                        – (திருமந்திரம்- புவனாபதி சக்கரம்)”
றுபத்து நான்கு உபசாரங்களை அளித்து அன்னையை வழிபடுவர். இவற்றை எல்லாம் ஶ்ரீ சக்கர சிம்மாசனத்தில் எழுந்தருளியிருக்கிறவளாக, அன்னையைப் பாவித்து அளித்து வழிபடுவதும் சிறப்பானதாகும்.
செம்மை சார் மரபின் வழியே ஶ்ரீ சக்கரபூஜை
ம்பிகையை ஶ்ரீசக்கரம் என்ற யந்திரத்தின் நடுவில் பிந்துவில் எழுந்தருளச் செய்து, அவள் பரிவார தேவதைகளை அன்னையை நோக்கி அவளைச் சுற்றி ஒவ்வொரு கோணங்களில் எழுந்தருளியிருப்பதாகப் பாவித்து வழிபடுவதே ஶ்ரீ சக்கர பூஜையாகும்.
பூஜா மந்திரத்தாலும் ஆசமனத்தாலும் தூய்மை செய்த ஒருவர் குருவழிபாடு புரிந்து சங்கல்ப்பித்துக் கொண்டு, தேகரட்சை செய்து கொள்ள வேண்டும். தேவி எழுந்தருளும் ஶ்ரீ சக்கரத்தினைச் சுற்றிலும் மதில்களாகவும், கோட்டைகளாகவும், நாற்பத்து நான்கு வரிசைகளை பாவனையுடன் பூசிக்க வேண்டும். இதுவே ஶ்ரீ சக்கர பூஜையின் முதலம்சமாகச் சொல்லப்பெறுகிறது.
டுத்துப்  பூஜை  செய்பவர்  தமது  பௌதீக  உடலை  மந்திரங்களின்  மூலம்  தெய்வீகமாக்கிக் கொள்ள வேண்டும். விக்நோத்ஸாரணம் என்கிற விக்னங்களை நீக்கிடும்  வழிபாட்டையாற்ற  வேண்டும்.  இதன்  பின்,  தெய்வீகச்  சரீரமெங்கும்  தேவர்களை  ஆவாஹித்துத்   தெய்வமயமாகச் ,சக்தி மயமாகத்  தன்னையும் தன்னைச் சுற்றியிருக்கிற இடத்தையும் சாதகன் அமைத்துக் கொள்கிறான்.
டம்பில் மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அனாகதம், விசுக்தி, ஆக்ஞா என்கிற ஆறு சக்கரங்களையும் எழுப்பி  தேவதைகளை நியாசம் செய்தல் வேண்டும். இவ்வாறு பதினெட்டு வகையான நியாசங்கள் உள்ளன. இப்படியெல்லாம் தன்னை சுத்தி செய்து தெய்வீகப்படுத்திக் கொண்டபின்னரே, ஒருவர் ஶ்ரீசக்கரபூஜையினுள் நுழைகிறார். ஶ்ரீசக்கரபூஜையில் பாத்திரங்கள் முக்கிய இடம் வகிக்கின்றன. கலசபாத்திரம், சாமான்யார்க்கிய பாத்திரம், குரு பாத்திரம், சுத்தி பாத்திரம், விசேஷார்க்கிய பாத்திரம், அலி பாத்திரம், பலி பாத்திரம், ஆத்மபாத்திரம், இவ்வாறாக அப்பாத்திரங்கள் பல்திறத்தன.. அவை பூஜையின் ஒவ்வொரு நிலைகளில் சாதகனால் பாவிக்கப்பெறுகிறது.
ள்ளக் கமலத்தில் உறையும் உன்னதமானவளை.. மானசீகமாக, உள்ளே, அந்தராத்மாவில் பூஜித்துப் பின்னர், சுழு முனை வழியே பிரமரந்திரம் வரை கொண்டு சென்று, உபசாரங்கள் வழங்கி நாசித்துவாரத்தின் வழியே திரிகண்டமுத்திரையில் குவித்து, புஷ்பாஞ்சலியுள் புகுவித்து, புறத்தே அமைந்துள்ள  ஶ்ரீசக்கர மஹாயந்திர மத்தியில் ஆவாஹனம் செய்வர்.
துஷ்ஷஷ்டி உபசாரங்கள் என்ற அறுபத்து நான்கு உபசாரங்களை அன்னைக்கு வழங்கிப் பூஜித்து, அம்பாளைச் சுற்றி எட்டெட்டு வரிசையில் சேரும் ஆவரண சக்திகளை பூஜிப்பர். இது பரிவாரார்ச்சனை என்று குறிப்பிடப்பெறும். நிறைவாக, நவாவர்ணபூஜையும், லலிதா சஹஸ்ரநாம அல்லது திரிசதி நாம அர்ச்சனையும், நைவேத்தியத்துடன் விசேட பூஜையும் செய்வர். அதன் பின் பலிதானம், சுவாஸினீ பூஜை என்பவற்றினையும் ஆற்றுவர்.
ம் தாயே, நாயோம் தவறே செய்யினும் பொறுத்தருள வேண்டும்.. என்று விண்ணப்பம் செய்து பூஜாபலனையும் நிறைவில் அன்னையின் வரதஹஸ்தம் என்ற வரமருளும் இடது திருக்கரத்தில் சமர்ப்பிக்கப்பெற்று ஶ்ரீசக்கரபூஜை நிறைவு பெறும்.
ஶ்ரீ சக்கர உபாசனையில் பயமும், பயனும், அருளும்.
திசங்கரபகவத்பாதர் ஶ்ரீ சக்கரவழிபாட்டை சீரமைத்துப் பரவச் செய்தார் என்பது நம்பிக்கை. ஶ்ரீ வித்யோபாசனை என்று போற்றப்பெறுகிற ஶ்ரீசக்கர வழிபாடு இன்று சக்தி வழிபாட்டாளர்களிடம் சிறப்புற்று விளங்குகிறது.
திசங்கரபகவத் பாதர் சிருங்கேரியில் ஶ்ரீ சக்கரத்தின் மீது சாரதா தேவியைப் பிரதிஷ்டை செய்திருப்பதாகச் சொல்லுவர். காஞ்சியில் காமகோடி பீட வாசினியாக எழுந்தருளியிருக்கிற அன்னை காமவல்லி முன்பாக ஆதிசங்கரர் ஶ்ரீ சக்கரபூஜை செய்திருக்கிறார். சிதம்பரத்தில் ஆடவல்ல பெருமானின் வலப்பக்கத்தில் சிவசக்கரமும் சக்தி சக்கரமும் இணைந்து சம்மேளனமாக இருக்கிறது. இதனையே சிதம்பர ரகசியமாக வழிபடுகிறசிறப்பும் அமைந்திருக்கிறது. அன்னை சிவகாமி சந்நதியில் சிறப்பான ஶ்ரீ சக்கரம் ஒன்று அமைந்திருப்பதாகவும் குறிப்பிடுவர்.
திருக்குற்றாலத்தில் ஶ்ரீ சக்கரபீடம் இருப்பதாயும், திருப்பெருந்துறை ஆவுடையார் கோயிலில் அம்பாள் சந்நதியில் ஶ்ரீ சக்கரமே பிரதிஷ்டை செய்யப் பெற்றிருப்பதாகவும் (அம்மைக்கு இங்கு திருவுருவம் இல்லை) திருவானைக்காவில் அகிலாண்டநாயகியின் காதணிகளில் ஶ்ரீ சக்கரம் பொறிக்கப்பெற்றிருப்பதாகவும் குறிப்பிடுவர். இவ்வாறாக, தேவாரப் பாடல் பெற்ற புகழ்மிக்க சிவஸ்தலங்களிலும் அன்னையின் ஶ்ரீசக்கரம்சிறப்புடன் வழிபாடு செய்யப்பெற்று வருகிறது.
ஶ்ரீ வித்யா உபாசனையை நன்கு நெறிப்படுத்தியவர்களில் ஆதிசங்கர பகவத்பாதர், வித்யாரண்யர், நீலகண்டர், பாஸ்கரராஜர் ஆகியோர் முதன்மை பெறுகின்றனர்.
ஶ்ரீ சக்கரம் கைலாசப்பிரஸ்தாரம், மஹாமேருப்ரஸ்தாரம், அர்த்தமேரு பிரஸ்தாரம், பூபிரஸ்தாரம் எனப்பலவகை உண்டென்பர். இலங்கையில் பல பெரியவர்களுடன் பேசியதில் சிலர் ஶ்ரீ சக்கர வழிபாடு பற்றி சிறிது அச்சம் கொள்கின்றனர். தொடர்ச்சியாகச் செய்ய வேண்டிய வழிபாடு என்றும் விதி முறை வழுவாது செய்ய வேண்டிய வழிபாடு என்றும் இது குறித்து அவர்களின் அச்சம் இருக்கிறது.
ன்னொரு நூலொன்றில் படித்ததில் அதில், ஶ்ரீ சக்கிரோபாசனையைச் செய்பவர்கள் மனச்சலனம் இல்லாதவர்களாக இருக்க வேண்டும். ஏனெனில் திரிபுரசங்காரத்தின் பின் திரிபுராரியான பரமேஸ்வரனே ஶ்ரீ சக்கர ரூபிணியாக, தேவியாக இருக்கிறார் என்றும் கண்டிருந்தது. ஆனால், இந்தியாவில் தற்போது ஶ்ரீ சக்கரபூஜை பலராலும், பல நிலைகளிலும் சுருக்கமாகச் செய்யப்பெறக் காண்கிறேன். அங்கெல்லாம் பெரியளவில் ஆசார மரபுகள் பேணப்படுவதாகவோ, அச்சம் கொள்வதாகவோ, தெரியவில்லை.. கடைகளிலும் சிறியனவாயும், பெரியனவாயும் பல ஶ்ரீசக்கரங்கள் விற்பனைக்கு இருக்கக் கண்டேன்.
ழமையான யந்திரங்களில் எழுத்துக்கள் நிறைய இருக்கும். ஶ்ரீசக்கரத்தில் எழுத்துக்கள் இருப்பதில்லை. ஸ்ரீ சக்கரம் பண்டைய இந்துக்களின் பாரத நாட்டினரின் கேத்திரகணித அறிவையும், ஆற்றலையும், விஞ்ஞான உணர்வையும் காட்டுவதாயும் சில ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். சக்கர ராஜாவாக இருப்பதால் ஶ்ரீசக்கரத்தை சக்ரராஜம் என்றும் போற்றுவர்.
த்தாத்திரேயர் வழி நின்று பரசுராமர்  ஶ்ரீவித்யையைக் கற்றுப் பரப்பிப்  பின் தன் சீடரான ஸமேதஸ் வழியே நமக்கு இன்று கிடைத்திருக்கிற நூலாகப் பரசுராம கல்பத்தைக் குறிப்பிடுவர். இதன் வழியே இன்றைய தென்னகத்துச் ஶ்ரீசக்கர வழிபாடுகள் நடைபெறுவதாகவும் தெரிகிறது.
சீராக  முறைப்படி  ஶ்ரீவித்யையை  அனுசரித்து  ஶ்ரீ சக்கரபூஜை செய்பவர் யோகமும், குரு பலனும், கிடைத்து பரம ரஹஸ்யங்களை அறிந்து தேவியின் விஸ்வரூபக் காட்சியைப் பெறுவார் என்று குறிப்பிடுவர். பாஸ்கரராஜர் போன்ற முக்கிய ஆச்சார்யார்களின் வரலாற்றை இதற்கு உதாரணமாகக் குறிப்பிடுவர்.
க, சக்கரசக்தியாக நின்றருளும் அன்னையை பற்றிய சிந்தனைக்கு வித்திட்டு, இச்சாரதா நவராத்திரிப் புண்ணிய காலத்தில், இது தொடர்பான சிந்தனை பெருகப் பிரார்த்திக்கிறோம்.


Saturday 5 October 2013

அருள்மிகு கடம்பவனேஸ்வரர் திருக்கோயில்

அருள்மிகு கடம்பவனேஸ்வரர் திருக்கோயில் 


கருவறையில் சப்தகன்னிகள்: கருவறையில் லிங்கத்திற்கு பின்புறத்தில் சப்தகன்னியர்கள் இருக்கின்றனர். சிவன் சாபவிமோசனம் கொடுத்தபோது, சப்தகன்னியர்கள் மீண்டும் தூம்ரலோசனனை அழித்தால் தோஷம் பிடிக்குமே! என அஞ்சி, அசுரனை எதிர்க்க முன்வரவில்லை. எனவே, அசுரனை அழித்து தங்களை காக்கும்படி சிவனிடம் வேண்டிக்கொண்டனர். சிவன் அவர்களுக்கு பாதுகாப்பாக இருந்து, அசுரனையும் அழித்தார். இவர் இத்தலத்தில் சப்தகன்னிகளுக்கு பாதுகாவலராக இருப்பதாக ஐதீகம். இங்கு சுவாமிக்கு நேர்பின்புறத்தில் இருக்கும் சாமுண்டியை, துர்க்கையாக வழிபடுகின்றனர். எனவே, துர்க்கைக்கு சன்னதி இல்லை. பெண்கள் துர்க்கைக்குரிய வழிபாட்டை சிவன் சன்னதி முன்பாகவே செய்வது விசேஷம்.

ராகுகால வேளையில் இவளுக்கும், சிவனுக்கும் விசேஷ பூஜைகளும் நடக்கிறது. காலையில் வணங்கவேண்டிய சிவன்: இக்கோயிலில் சிவன் சுயம்புவாக, வாமதேவ முகமாக (வடக்கு திசையை நோக்கி) இருக்கிறார். கோமுகம் வலது புறமாக திரும்பி இருக்கிறது. கோயிலுக்கு எதிரே அகண்டகாவிரி ஓடுகிறது. சப்தகன்னிகளுக்கு சிவன், தைப்பூசத்தன்று காட்சி கொடுத்ததாக ஐதீகம். எனவே, அந்நாளில் இவர் காவிரியில், அம்பாளுடன் எழுந்தருள்கிறார். இவருடன் சுற்றுப்பகுதியில் உள்ள 7 சிவன்களும் எழுந்தருள்கின்றனர். அன்று ஒரே நாளில் 8 சிவன்களையும் தரிசிக்கலாம். இத்தலத்தில் ஐப்பசி முதல்கட்ட துலாஸ்நானம் விசேஷமாக கொண்டாடப்படுகிறது. ""காலைக்கடம்பர், மதியம் சொக்கர் (ரத்தினகிரி), மாலை ஈங்கோய்நாதர் (ஈங்கோய்மலை)'' என்ற வரிசையில் வழிபடுவது குறைவிலாத பலன்கள் கிடைக்கும் என்கின்றனர். அதன்படி, இவரை காலை வேளையில் வழிபட்டால் காசியில் வழிபட்ட பலன்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இத்தலத்திற்கு "தெட்சிணகாசி' என்றொரு பெயரும் உண்டு.

அகத்தியர், கண்ணுவ முனிவர் ஆகியோர் சுவாமியை வழிபட்டுள்ளனர். அம்பாள் முற்றிலாமுலையம்மை தனிச்சன்னதியில் கிழக்கு பார்த்தபடி இருக்கிறாள். இச்சன்னதிக்கு முன்புறம் "பரமநாதர்' காவல் தெய்வமாக இருக்கிறார். இவர் தனது வலது கையை நெற்றி மேல் வைத்து, மரியாதை செய்தபடி வித்தியாசமான கோலத்தில் இருக்கிறார். இவருக்கு தேன் அபிஷேகம் செய்து, பாசிப்பருப்பு பாயசம் படைத்து வழிபடுகிறார்கள். இவ்வாறு செய்வதால் அவர்கள் குடும்பத்திற்கு சுவாமி பாதுகாப்பாக இருப்பார் என நம்புகிறார்கள்.
இங்குள்ள சிவன் வடக்கு நோக்கிய சுயம்புலிங்கமாக இருப்பது சிறப்பாகும். கருவறையில் லிங்கத்திற்கு பின்புறத்தில் சப்தகன்னியர்கள் இருப்பது தனி சிறப்பு. 


முருகன் சிறப்பு: சூரபத்மனை வதம் செய்த தோஷம் நீங்க முருகன் இங்கு சுவாமியை வழிபட்டுள்ளார். இவர் பிரகாரத்தில் ஆறுமுகங்களுடன் சுப்பிரமணியராக வள்ளி, தெய்வானையுடன் தனிச்சன்னதியில் இருக்கிறார். "ஆறுபடைகளிலும் இருக்கும் முருகனைப் போன்ற அமைப்புடையவர்' என்ற பொருளில் இவரைக்குறித்து அருணகிரியார் பதிகம் பாடியுள்ளார். இவரது சன்னதிக்கு நேர் எதிரே, சிவன் கருவறை கோஷ்டத்தில் லிங்கோத்பவர் இருக்கிறார். இவருக்கு இருபுறமும் மகாவிஷ்ணு, பிரம்மா ஆகியோர் வணங்கியபடி இருக்கின்றனர். இக்கோயிலில் நடராஜர் சன்னதியில் இரண்டு நடராஜர்கள் இருக்கின்றனர். இவர்களில் ஒருவரது பாதத்தின் கீழ் முயலகன் இல்லை. இவரது தலையில் பிறைச்சந்திரன் இருக்கிறார்.

தூம்ரலோசனன் எனும் அசுரன், தேவர்களை துன்பப்படுத்தி வந்தான். அவர்கள் அம்பாளிடம், அசுரனிடம் இருந்து தங்களை காப்பாற்றும்படி வேண்டினர். அவர்களுக்காக அம்பாள் துர்க்கை வடிவம் எடுத்து அவனை அழிக்கச் சென்றாள். அசுரன் தான் பெற்றிருந்த வரத்தினால் துர்க்கையுடன் தொடர்ந்து சமபலத்துடன் மோதவே, துர்க்கையின் பலம் குறைந்தது. எனவே, சப்தகன்னிகளை அனுப்பி அசுரனுடன் போர் புரியச் செய்தாள். அவர்களை எதிர்க்க முடியாத அசுரன், அவர்களிடமிருந்து தப்பி வனத்திற்குள் ஓடினான். அங்கு கார்த்தியாயன மகரிஷியின் ஆசிரமத்திற்குள் ஒளிந்து கொண்டான். சப்த கன்னியர்களும் ஆசிரமத்திற்குள் சென்றனர். அங்கு முனிவர் தவத்தில் இருந்ததைக் கண்ட அவர்கள், தூம்ரலோசனன்தான் முனிவர் போல உருமாறி அமர்ந்திருப்பதாக கருதி, முனிவரை அழித்து விட்டனர். இதனால், அவர்களுக்கு பிரம்மஹத்தி தோஷம்
பிடித்தது. அவர்கள் தங்களது தோஷம் நீங்க அருளும்படி அம்பாளை வேண்டினர்.

அம்பாள், இத்தலத்தில் சிவனை வேண்டிக்கொள்ள விமோசனம் கிடைக்கும் என்றாள். அதன்படி சப்தகன்னிகள் இங்கு வந்து தவமிருந்தனர். சிவன் அவர்களுக்கு கடம்ப மரத்தில் காட்சி தந்து சாபவிமோசனம் கொடுத்தார்.

மகா பிராமணன்

  •  ‘காமக்குரோதங்களை விட்டொழிக்கிறவன் எவனோ அவனே மகாபிராமணன்' எனும் ஞானம் பேரரசன் கௌசிகனை விசுவாமித்திரனாக்குவது தான் இந்நாவலின் சாரம். பிராமணனாக வேண்டுமென்ற வேட்கையும் கூட காமம் தான் எனும் சிந்தனைத் தெளிவு நம்மையும் புடமிடுகிறது. 

  •       காம குரோதம் இல்லாதவனெனில் செருக்கு அறுத்தவன் என்றும், மரண துன்பத்திலிருந்து வசிஷ்டர் விடுபட்டது செருக்கை வென்றதால் தான் என இந்திரனே சொன்னபடியால், படைப்பின் இரகசியத்தை கண்டறிந்து விஸ்வாமித்திரனே ஒரு உலகைப் படைக்கும் ஆற்றலையும் பெற்றதெப்படி என உணர்த்தி நிற்கிறது நாவல். இதில் உபநிடதத்தின் இரகசியங்கள், காயத்ரி மந்திரத்தின் பெருமை அனைத்தும் அடங்கியுள்ளன. வேதகாலத்து உலகம் சமகால மொழியில் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. தேவகன்னியர்கள் இவ்வுலகில் வந்து தவ சிரேஷ்டர்களோடு குடும்பம் செய்ததாக புனையப்பட்ட கற்பனையை மேஜிக்கல் ரியலிசம் என்பர் இக்கால இலக்கியவியலாளர்கள்.

  • வசிஷ்டரின் ஆசிரமத்துக்கு வந்த கௌசிக மாமன்னன் அவரது உபசரிப்பின் அஸ்திவாரம் ஆசிரமப் பசுவான காமதேனுவின் வழித்தோன்றல் நந்தினி தான் என்றறிந்து அதனை தனக்காக தரும்படி வசிஷ்டரை வேண்ட, ‘உனக்குத் தேவையானதை தவத்தின் மூலம் பெற்றுக் கொள்' என்கிறார் வசிஷ்டர். அவர் மேலிருந்த அன்பு துவேஷமாகிறது அரசனுக்கு. அவனுக்கு ஈசனருள் பெறவேண்டிய மார்க்கத்தைக் காட்ட தன் சீடன் வாமதேவனைப் பணிக்கிறார் வசிஷ்டர்.

  • இயற்கையின் பாதையிலிருக்கிற தடையை அப்புறப்படுத்தி, அதன் செயல்பாட்டினை முன்னெடுத்துச் செல்ல வேண்டியது பிராமணனின் தர்மம் எனவும், உலக நன்மைக்காக தவம் புரியும் பிராமணன் தனக்கு பிரியமானவற்றைக் கவனிக்கக் கூடாதெனவும், புலனாகாதவற்றிலிருந்து புலனறிவுக்கு வருகிற சக்தியை மையப்படுத்தி ஒருபுறமிருந்து பெற்றதை மறுபுறம் பரவலாக்கி உலகுக்கு தருகிற இயந்திரமாகிய பிராமணன் பிரியம், பிரியமற்றதற்கு அப்பால் இருப்பவன் என்றும் வாமதேவனையும் நம்மையும் தெளிவிக்கிறார் வசிஷ்டர்.

  •  தவப்பயனால் கிட்டிய சிவ அஸ்திரங்களை கௌசிகன் வசிஷ்டர் மேல் செலுத்த வெகு எளிதாக அவற்றை எதிர்கொள்கிறார் வசிஷ்டர். தனது பிரம்மதண்டத்தால் கௌசிகனின் பகைமனதை மாற்றுகிறார். தோல்வியால் துவண்ட கௌசிகனை வாமதேவன், தவமென்பது யாதென தெளிவிக்கிறான்.

  • “தத்தம் விருப்பங்கள் நிறைவேற யாரெல்லாம் என்னென்ன செய்கின்றார்களோ அதெல்லாம் தவமே.

  • மனமொரு விளக்கு கம்பம். ஒரே இடத்தில் குவித்தால் பிரகாசம் மிகுவது போல் மனதை ஒருநிலைப்படுத்த மனதின் அங்கங்களாக இருக்கிற பொறிகளைப் பிடிக்க வேண்டும். மனம் அலைபாயாதபடி பிடித்து நிறுத்தும் போது மையக்கோட்டில் சுழலும் பம்பரம் போல் நோக்கத்தில் சுழலும். பாம்பு பின் முகமாக சுற்றிக் கொண்டால் தலையானது வாலைப் பிடிப்பது போல் நோக்கம் நிறைவேற செய்யவேண்டியது மறுபுறம் பதிலாகக் கிடைக்கும். இதுவே தவத்தின் முதல் கட்டம்.

  • விதை மரமாவது போன்றதே தவம். காலம், இடம் பொருந்தினால் மட்டுமே சரியாகும். தன் நிலையைக் காப்பாற்றிக் கொண்டு, எதிர்வரும் நிலையை தனக்கேற்றபடி வடிவமைத்துக் கொள்ளப் போராடுவதே தவம்.

  • பாம்பாட்டி பாம்பை ஆட்டி வைப்பது போல, மனதை தன்போக்கில் வசப்படுத்திக் கொள்கிறவன் இந்த உலகை ஆட்டி வைப்பான்.

  •  நீ என்னவாக வேண்டுமென்பதை நிச்சயித்துக் கொள். அதற்கு உன் முயற்சியே சாதனை என நம்பு. முயற்சி சாஸ்திரத்தின் வழியாக நடைபெறுமானால், சிறிதளவு கொடுத்து அதிக அளவு நிரப்பிக் கொள்வதைப் போன்றது. அது சாஸ்திரத்துக்கு அப்பாற்பட்டதெனில், ஒரு படி அரிசி கொடுத்து மூன்று படி கேழ்வரகு வாங்குவது போலாகும்”.

  •  இவ்வுபதேசங்கள் வாமதேவனால் நமக்கும் சித்திக்கின்றன.

  • சத்திரிய குலத்தில் பிறந்த  விஸ்வாமித்திரர், தன் உடலோடு சொர்க்கம் புக விரும்பிய திரிசங்கு மன்னனுக்காக தனியாகவொரு சொர்க்கலோகம் படைக்குமளவு மகாபிராமணனாய் உயர்வடைந்ததை நாவல் ஊர்ஜிதப்படுத்துகிறது.

  • கன்னட இலக்கிய உலகில் சொல்லத்தக்க ஓரிடம் உண்டு தேவுடு நரசிம்ம சாஸ்திரிக்கு. (1896 - 1962) குழந்தை இலக்கியம், திரையுலகம், பத்திரிகையாளர், கல்வி பிரச்சாரம், விடுதலைப் போராட்ட வீரர் என பன்முகத்தன்மை கொண்டவர் இவர். அறுபதுக்கும் அதிகமான இவரது படைப்புகள் கன்னட இலக்கியத்தில் என்றும் அழியாதவை. மகா பிராமணன், மகா சத்திரியன், மகா தரிசனம் ஆகிய மூன்று நாவல்களும் போதும் இவரது பெருமையைப் பறைசாற்ற. இவரது கடைசி நாவலான மகா தரிசனத்தை வேதம் என்றே கூறலாம்.

  • இறையடியான் சாகித்ய அகாதெமிக்கு சர்வக்ஞர் உரைப்பா, சலங்கைச் சடங்கு, போராட்டம், அவதேஸ்வரி, புரந்தர தாசர் போன்ற நூல்களின் மொழிபெயர்ப்பால் நிலைத்த புகழுடையவர். இவர் மொழிபெயர்த்த பணியம்மா நாவல் கல்லூரிகளுக்குத் துணைப்பாட நூலாக உள்ளது. அவரது அனுபவமிக்க மொழியாக்கம் கன்னடத்தை தமிழுக்கு நெருக்கமாக்குகிறது.

  • நூல் பெயர்: மகா பிராமணன்
  • கன்னட மூலம்: தேவுடு நரசிம்ம சாஸ்திரி
  • தமிழாக்கம்: இறையடியான்
  • வெளியீடு : சாகித்ய அகாதெமி
  • பக்கங்கள்: 384
  • விலை: ரூ.180/-