telepathygiridharbaba

telepathygiridharbaba
shirdisai thunai

Saturday 16 March 2013

ஸ்ரீபேருண்டாதேவி, ஸ்ரீ வன்ஹிவாசினி தேவி


அகத்தியரின் சோடச மாலை - சதுர்த்தி திதி - 

ஸ்ரீபேருண்டாதேவி

சதுர்த்தியிலே நாதவிடை வாம பூசை
தரவேணுந் தயவாக அடிமை செய்ய
மதித்தபடி வரமருள்வாய் வாம ரூபி
வான் வெளியே வாசியே மௌனத் தாயே!
பதித்துன்றன் பதத்திலென்றன் சென்னி தன்னைப் 
பரிதிமதி அகன்றாலும் அகலா மற்றான்
துதித்தபடி நின்சரண் மெனக்குத் தந்தாள்
சோதியே! மனோன்மணியே! சுழுனை வாழ்வே!

அனைத்து அண்டங்களிலும் நிறைந்துள்ள தேவிஅகிலத்துக்கே 

ஆதிகாரணியாகத் துலங்குபவள். அநேக கோடி அண்டங்களைப் படைத்தவள். 

அவற்றை உருவாக்கியதால் இந்த அன்னைக்குஅநேக கோடி ப்ரமாண்ட ஜனனீ’ 

என்றும் ஓர் திருநாமம் உண்டு. உருக்கி வார்த்த தங்கம் போன்ற மேனியில் 

பட்டாடைகளையும்,குண்டலங்கள்பொன் ஆரங்கள்முத்துமாலைஒட்

டியாணம்,மோதிரங்களைத் தரித்துநிகரற்ற அழகுவல்லியாகத் திகழும் இவள் 

முக்கண்கள் தரித்தவள். 

புன்முறுவல் பூத்து தரிசிப்போரைப் பூரிக்க வைக்கிறார். தன் கர கமலங்களிலும் 

பக்தர்களின் பாதக மலங்களை அழிக்க பாசம்,அங்குசம்கத்திகோதண்டம்

கவசம்வஜ்ராயுதம்தரித்துள்ளாள். தேவியின் திருவடித் தாமரையைத் தாமரை 

மலர் தாங்குகிறது.

மந்திரம்:

ஓம் பேருண்டாயை வித்மஹே விஷஹராயை தீமஹி

தன்னோ நித்யா ப்ரசோதயாத்

வழிபட வேண்டிய திதிகள்: சுக்ல பக்ஷ சதுர்த்திகிருஷ்ண பக்ஷ துவாதசி.

வழிபடு பலன்கள்: விஷ ஆபத்துகளிலிருந்து மீளலாம்.


பஞ்சமி திதி - ஸ்ரீ வன்ஹிவாசினி தேவி

பஞ்சமியில் பெற்றெடுத்தாய் சேயேன் றன்னைப்
பால்கொடுத்துப் பத நடனஞ் செய்தாய் தாயே!
கொஞ்சமொரு காரியத்தில் தவக்கஞ் செய்தால்
குழிப்பயிருங் கூரையின்மேல் ஏறுமோ தான்
தஞ்சமென நின் பொற்றாள் சார்ந்த மைந்தன்
சாக்கிரத்துக் கப்பால் நின் றாறி நைக்குள்
துஞ்சியுந்துஞ் சாதிருக்க ஏணி தந்தாள்
சோதியே! மனோன்மணியே! சுழினை வாழ்வே!

அக்னி மண்டலத்தில் உறைவதால் வன்ஹி வாஸினி. அக்னி மண்டலம் நம் 

உடலின் மூலாதாரத்தில் உள்ளது. அங்கு குண்டலினி வடிவாய் அம்பிகை 

துலங்குகிறாள். வஹ்னி என்ற பதம் மூன்று என்ற எண்ணிக்கையையும் 

குறிக்கும். தேவி லலிதையின் பஞ்சதசாக்ஷரி என்னும் மகா மந்திரத்தின் 

வாக்பவ,காமராஜசக்தி கூடங்களும் மூன்றே ஆகும். அழகே உருவாய் அருளே 

வடிவாய்த் திகழும் இவள் மஞ்சள் நிற பீதாம்பரம் அணிவதில் 

விருப்பமுள்ளவள். சுற்றிச் சுழலும் மயக்கும்விழிகளையுடையவள். தன் 

திருக்கரங்களில் தாமரைசங்கு,கரும்பு வில்அல்லிப்பூகொம்புமலரம்புகள்

மாதுளம்பழம்,அம்ருத கலசம் எனத் தரித்திருக்கின்றாள். 

மந்திரம்:


ஓம் வஹ்னி வாஸின்யை வித்மஹே ஸித்திப்ரதாயை தீமஹி

தன்னோ நித்யா ப்ரசோதயாத்

வழிபட வேண்டிய திதிகள்: சுக்ல பக்ஷ பஞ்சமிகிருஷ்ண பக்ஷ ஏகாதசி.

வழிபடு பலன்கள்:

நோய் தீரும். தேக காந்தியோடுஉலக இன்பங்களை பூரணமாக அனுபவிக்க 

இயலும். (  நன்றி ஆன்மீக உலா)

Thursday 14 March 2013

அகத்தியரின் சோடசமாலை






அகத்தியரின் சோடசமாலை -  2  - துவிதியை திதி

துதிகையென்றும் உபயமென்றும் இடையின் என்றுஞ்
சுவர்க்கமென்றும் நரகமென்றுஞ் சொல்லக் கேட்டு
மதிரவியா யடிமுடியாய் உயராண பெண்ணாய்
வாழ்வாகித் தாழ்வாகி வழங்குந் தாயே!
விதிதொலந்து வினைதொலைந்து வெட்கங் கெட்டு
வீம்பவும் ஆசைதுக்கம் விட்டே யோட்டு
சுதன முகம்பார் மதிமுகத்தால் சூட்சாசூட்சி
சோதியே! மனோன்மணியே! சுழிமுனை வாழ்வே!



த்ரிதியை திதி

திரிதிகையில் அசுத்தமற்றுச் சுத்தமாகிச்
சிற்சொரூபந் தனைச் சேர்ந்த தெளிவே கண்டு 
உறுதியுடன் உனதுபதம் அகலாச் சிந்தை
உறவு செய்வாய் உம்பரையே உமையே தாயே
அறுதியாய் இகத்தாசை அகன்ற ஞான
ஆனந்த வாசையைத்தா அடியேனுக்குச்
சுருதியிலே மனமிருக்கத் துணை செய் தாயே!
சோதியே! மனோன்மணியே! சுழிமுனை வாழ்வே!


Friday 1 March 2013

27 நட்சத்திர லோகங்களுக்கும் பூமிக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. எனவே தான் ஜீவ வாழ்க்கையை திரிகோண, முக்கோண யந்திரச் சக்கரமாக, நட்சத்திரங்கள் - பூமி - ஜீவன்கள் ஆகிய மூன்றும் சம்பந்தப்பட்ட "த்ரிபாதா ஜீவ யந்திரமாக" - சித்தர்கள் விளக்குகின்றார்கள்.

27 நட்சத்திரங்களுக்கு உரித்தான பூஜைகளில் ஒன்றாக சற்குரு குருமங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீ வேங்கடராம சுவாமிகள் தம் சற்குருநாதராம் சிவகுரு மங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீ இடியாப்ப ஈச சித்த சுவாமிகள் அருளாசியின் படி "ஸ்ரீஅகஸ்தியர் நட்சத்திர வாக்கிய ரோகிணி சந்திர சக்கரம்" என்ற எளிமையான வழிபாட்டு முறையாக அளித்தருள்கின்றார்.

இங்கே கொடுக்கப்பட்டுள்ள "ஸ்ரீஅகஸ்தியர் நட்சத்திர வாக்கிய ரோகிணி சந்திர சக்கரத்திற்கான" விசேஷ மந்திரங்களையும் இங்கே பகிர்ந்தளிக்கின்றோம்.

ஒவ்வொரு நட்சத்திர தேவதா மூர்த்திகளுக்கும் முறையே 27 நட்சத்திர தேவதைகளுக்குண்டான மந்திரங்களை முறையோடு 
உச்சரித்து, தாமே தம் கையால் அரைத்த சந்தனத்தினை, அனைத்து நட்சத்திர சக்கரத்திலும் அல்லது அவரவருடைய நட்சத்திர சக்கரத்தில் வைத்து பூஜை செய்தல், நம்முடைய வாழ்நாளில் தினசரி நிகழ்த்தும் "கால தேவதா" பூஜையாக கருதப்படுகின்றது.

ஸ்ரீஅகஸ்தியர் திருநட்சத்திரப் பொற்பாதத் திரட்டு

 
ஸ்ரீஅகஸ்தியர் திருநட்சத்திரப் பொற்பாதத் திரட்டு
 
வண்டமர் பூஞ்சோலைக் கற்பகமே
வந்தெனக்கருள் அஸ்வினி பொற்பாதமே போற்றி! 
கண்டமர் கருணைத் திருஒளியே
காத்தெனைக் கை தூக்கு பரணி பொற்பாதமே போற்றி!
எங்கும் தீபச் சுடர் ஒளியே
ஏங்கும் எனக்கருள்வாய் கிருத்திகை பொற்பாதமே போற்றி!
தாயாய் வந்த அருள் ஒளியே
தயை பூண்டருள்வாய் ரோகிணி பொற்பாதமே போற்றி!
வேதம் ஆனாய் பேரொளியே
வெற்றியருள்வாய் மிருகசீரிஷ பொற்பாதமே போற்றி!
நாதம் ஈந்த நாரிமணியே தினம்
நலம் பல தருவாய் திருவாதிரை பொற்பாதமே போற்றி!
பாதம் தந்து காத்திடுவாய்
பரிந்தருளும் புனர்பூச பொற்பாதமே போற்றி!
வளம் தந்து பெருக்கிடுவாய் அன்புடன்
வணங்கிடயென் பூச பொற்பாதமே போற்றி!
உள்ளம் கனிய உன் புகழ் பாடும் கள்ளமற்ற
உந்தன் பிள்ளைக்கருளும் ஆயில்யப் பொற்பாதமே போற்றி!
கவலை போக்கி ஆதரிப்பாய் அன்னையே
கசிந்துருகும் உன் பிள்ளைக்கருள் மகப் பொற்பாதமே போற்றி!
உள்ளம் மேவும் உத்தமியே உனை நினைந்து
உருகி அழுமெனைத் தேத்து உத்தம பூரம் பொற்பாதமே போற்றி!
தீரா நோயைத் தீர்த்தருளும் அமுத
தீச்சுடரே தினமருள் உத்திர பொற்பாதமே போற்றி!
ஆரா அமுதமாய் ஆனவளே அடியேனுக்கு
ஆபத்தில் உதவிடு ஹஸ்த பொற்பாதமே போற்றி!
கருவில் மீண்டும் வாராமல் கருணையோடு
காத்தருளும் கர்த்தா சித்திரை பொற்பாதமே போற்றி!
கொஞ்சும் புன்னகை பூத்தவளே என்றும்
கோலாகலமாய் வாழ்ந்திட அருள் சுவாதி பொற்பாதமே போற்றி!
எண்ணும் மனத்தை நீ மேவி என்னுள்
என்றும் கோயில் கொண்ட விசாக பொற்பாதமே போற்றி!
பங்கம் இல்லா நிறைவாழ்வு எனக்கு
பரிவுடன் தந்து காக்கும் அனுஷம் பொற்பாதமே போற்றி!
உன்னை வணங்கும் என் கைகள் என்றும்
உதவிடும் உனதருள் பெறவே கேட்டை பொற்பாதமே போற்றி!
உன் புகழ் பேசும் என் நாவே தினமும்
உன் கருணை பெறவே மூலம் பொற்பாதமே போற்றி!
உன்னை நினைக்கும் என் மனமே நலமுடன்
உகந்தருள் தரும் உன் பூராட பொற்பாதமே போற்றி!
நின்னை நோக்கி என் கால்கள் என்றும்
நின்றே தவம் புரியும் உத்திராட பொற்பாதமே போற்றி!
நித்தம் நித்தம் நினைவில் நின்று நலம் தரும்
நீலத் திருமால் அருள் பெற்ற திருவோண பொற்பாதமே போற்றி!
மணமகள் மகிழச் செய்யும் மங்கையே
மன்றாடும் நின் பிள்ளை மலரச் செய்ய அவிட்ட பொற்பாதமே போற்றி!
தீரா நோயைத் தீர்த்தருளும் திவ்விய
தெய்வமே சதய பொற்பாதமே போற்றி!
சோதி அருள் ஈந்திடும் சுந்தர
ஆதி தெய்வமே பூரட்டாதி பொற்பாதமே போற்றி!
வேதியர்க்கெல்லாம் வித்தாகிடும்
வேத தெய்வமே உத்திரட்டாதி பொற்பாதமே போற்றி!
தந்தையாய் வந்து தனிப் பெருங் கருணை காட்டும்
எந்தை அருணாசலத்து வாழ் ரேவதி பொற்பாதமே போற்றி!