telepathygiridharbaba

telepathygiridharbaba
shirdisai thunai

Friday 1 March 2013

ஸ்ரீஅகஸ்தியர் திருநட்சத்திரப் பொற்பாதத் திரட்டு

 
ஸ்ரீஅகஸ்தியர் திருநட்சத்திரப் பொற்பாதத் திரட்டு
 
வண்டமர் பூஞ்சோலைக் கற்பகமே
வந்தெனக்கருள் அஸ்வினி பொற்பாதமே போற்றி! 
கண்டமர் கருணைத் திருஒளியே
காத்தெனைக் கை தூக்கு பரணி பொற்பாதமே போற்றி!
எங்கும் தீபச் சுடர் ஒளியே
ஏங்கும் எனக்கருள்வாய் கிருத்திகை பொற்பாதமே போற்றி!
தாயாய் வந்த அருள் ஒளியே
தயை பூண்டருள்வாய் ரோகிணி பொற்பாதமே போற்றி!
வேதம் ஆனாய் பேரொளியே
வெற்றியருள்வாய் மிருகசீரிஷ பொற்பாதமே போற்றி!
நாதம் ஈந்த நாரிமணியே தினம்
நலம் பல தருவாய் திருவாதிரை பொற்பாதமே போற்றி!
பாதம் தந்து காத்திடுவாய்
பரிந்தருளும் புனர்பூச பொற்பாதமே போற்றி!
வளம் தந்து பெருக்கிடுவாய் அன்புடன்
வணங்கிடயென் பூச பொற்பாதமே போற்றி!
உள்ளம் கனிய உன் புகழ் பாடும் கள்ளமற்ற
உந்தன் பிள்ளைக்கருளும் ஆயில்யப் பொற்பாதமே போற்றி!
கவலை போக்கி ஆதரிப்பாய் அன்னையே
கசிந்துருகும் உன் பிள்ளைக்கருள் மகப் பொற்பாதமே போற்றி!
உள்ளம் மேவும் உத்தமியே உனை நினைந்து
உருகி அழுமெனைத் தேத்து உத்தம பூரம் பொற்பாதமே போற்றி!
தீரா நோயைத் தீர்த்தருளும் அமுத
தீச்சுடரே தினமருள் உத்திர பொற்பாதமே போற்றி!
ஆரா அமுதமாய் ஆனவளே அடியேனுக்கு
ஆபத்தில் உதவிடு ஹஸ்த பொற்பாதமே போற்றி!
கருவில் மீண்டும் வாராமல் கருணையோடு
காத்தருளும் கர்த்தா சித்திரை பொற்பாதமே போற்றி!
கொஞ்சும் புன்னகை பூத்தவளே என்றும்
கோலாகலமாய் வாழ்ந்திட அருள் சுவாதி பொற்பாதமே போற்றி!
எண்ணும் மனத்தை நீ மேவி என்னுள்
என்றும் கோயில் கொண்ட விசாக பொற்பாதமே போற்றி!
பங்கம் இல்லா நிறைவாழ்வு எனக்கு
பரிவுடன் தந்து காக்கும் அனுஷம் பொற்பாதமே போற்றி!
உன்னை வணங்கும் என் கைகள் என்றும்
உதவிடும் உனதருள் பெறவே கேட்டை பொற்பாதமே போற்றி!
உன் புகழ் பேசும் என் நாவே தினமும்
உன் கருணை பெறவே மூலம் பொற்பாதமே போற்றி!
உன்னை நினைக்கும் என் மனமே நலமுடன்
உகந்தருள் தரும் உன் பூராட பொற்பாதமே போற்றி!
நின்னை நோக்கி என் கால்கள் என்றும்
நின்றே தவம் புரியும் உத்திராட பொற்பாதமே போற்றி!
நித்தம் நித்தம் நினைவில் நின்று நலம் தரும்
நீலத் திருமால் அருள் பெற்ற திருவோண பொற்பாதமே போற்றி!
மணமகள் மகிழச் செய்யும் மங்கையே
மன்றாடும் நின் பிள்ளை மலரச் செய்ய அவிட்ட பொற்பாதமே போற்றி!
தீரா நோயைத் தீர்த்தருளும் திவ்விய
தெய்வமே சதய பொற்பாதமே போற்றி!
சோதி அருள் ஈந்திடும் சுந்தர
ஆதி தெய்வமே பூரட்டாதி பொற்பாதமே போற்றி!
வேதியர்க்கெல்லாம் வித்தாகிடும்
வேத தெய்வமே உத்திரட்டாதி பொற்பாதமே போற்றி!
தந்தையாய் வந்து தனிப் பெருங் கருணை காட்டும்
எந்தை அருணாசலத்து வாழ் ரேவதி பொற்பாதமே போற்றி!

No comments:

Post a Comment