telepathygiridharbaba

telepathygiridharbaba
shirdisai thunai

Sunday 18 August 2013

யஜுர் வேத உபாகர்மா

யஜுர் வேத உபாகர்மா - ஆவணி 04-ம் தேதி, ஆவணி அவிட்டம் ( 20-08-2013 ) செவ்வாய் கிழமை

(இந்த போஸ்ட் வெளிநாட்டில் வாழ்கின்றவர்களுக்கும்,
புரோஹிதர் கிடைக்காமல் அவதிபடுபவர்களுக்கும்.மீதி பேர்கள்
தக்ஷிணை கொடுத்து செய்தால்தான் பலன்.)

ஸ்ரீ பாலா திருபுரசுந்தரி ஜோதிடம்
ஜோதிடம், புரோஹிதம், எண் கணிதம், ராசிரத்தினம்,பார்க்க அணுகவும்
யஜுர் வேத உபாகர்மா - ஆவணி 04-ம் தேதி, ஆவணி அவிட்டம் ( 20-08-2013 )செவ்வாய் கிழம
தாமாகவே வீட்டில் உகர்மாவை செய்து கொள்பவர்களுக்கு

குறிப்பு:- ப்ரம்மசாரிகள் காலையில் ஸ்நானம், ஸந்தியாவந்தனம் செய்து,பிறகு வபனம் (க்ஷவரம்) செய்துகொண்டு மறுபடியும் ஸ்நானம் செய்து ஸமிதாதானம், ”காமோ கார்ஷீத்” ஜபம், மாத்யாஹ்னிகம், ப்ரஹ்ம யஜ்ஞம்,பின்பு மஹா ஸங்கல்பம் செய்து கொண்டு ஸ்நானம் செய்து யஜ்ஞோபவீத தாரணம், ”காண்ட ரிஷ்” தர்ப்பணம், வேதாரம்பம் செய்து ஸ்வாமிக்கும்,பெரியோர்களுக்கும்நமஸ்காரம் செய்து உபாகர்ம கார்யத்தை முடித்துக் கொள்ள வேண்டும். "ப்ரதம ச்’ராவண ப்ரஹ்மசாரிக்கு காமோகார்ஷீத் ஜபம் கிடையாது." ”க்ருஹஸ்தர்களுக்கு க்ஷவரம், ஸமிதாதானம் கிடையாது.” பாக்கி விஷயங்களை மேலே சொன்னபடி செய்து கொள்ள வேண்டும்.
ஓம் ஸ்ரீ கணேசா’ய நம: ஸ்ரீ குருப்யோ நம:
ஸமிதா தானம்
கிழக்கு முகமாக உட்கார்ந்து, ப்ரஹ்மசாரிகள் அக்னி ஏற்படுத்தி முன்னால் வைத்துக் கொண்டபின், இரண்டு முறை ஆசமனம் செய்ய வேண்டும்.
ஆசமனம் (1) ஒம் அச்யுதாய நம: (2) ஒம் அனந்தாய நம: (3) ஒம் கோவிந்தாய நம:
அங்கவந்தனம்:
ஓவ்வொரு மந்திரத்தைச் சொல்லும்போது அந்தந்த மந்திங்களுக்கு நேர் கொடுக்கப்பட்டுள்ள அந்தந்த விரல்களால் ஸ்பர்சித்துக் கொள்ள வேண்டும்.
கேச…வ வலக்கைக் கட்டை விரல் வலக்கன்னம்
நாராயண வலக்கைக் கட்டை விரல் இடக்கன்னம்
மாதவ வலக்கை மோதிர விரல் வலக் கண்
கோவிந்த வலக்கை மோதிர விரல் இடக் கண்
விஷ்ணு வலக்கை ஆள்காட்டி விரல் வலது நாசி
மதுஸூதன வலக்கை ஆள்காரராலாலட்டிவிரல் இடது நாசி
த்ரிவிக்ரம வலக்கை சிறு விரல் வலது காது
வாமன வலக்கை சிறு விரல் இடது காது
ஸ்ரீதர வலக்கை நடு விரல் வலது தோள்
ஹ்ருஷீகேச… வலக்கை நடு விரல் இடது தோள்
பத்மநாப ஐந்து விரல்களும் சேர்த்து நாபி
தாமோதர ஐந்து விரல்களும் சேர்த்து தலை

விக்னேச்வர த்யானம்
சு’க்லாம் பரதரம் விஷ்ணும் ச’சி வர்ணம் சதுர்ப்புஜம் !
ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்ன உபசா’ந்தயே !!
ப்ராணாயாமம்;
ஓம் பூ:, ஓம் புவ:, ஓகும் ஸூவ: ஓம் மஹ:, ஓம் ஜந:, ஓம் தப:, ஓகும் ஸத்யம், ஓம் தத்ஸ விதுர் வரேண்யம், பர்கோ தேவஸ்ய தீமஹி, தியோ யோந: ப்ரசோதயாத்,ஓமாபோ: ஜ்யோதீரஸா:, அம்ருதம் ப்ரஹ்ம, பூர்ப்புவஸ் ஸூவரோம். ஓம் ஓம் ஓம்- என்று வலது காதைத் தொடவேண்டும். வலது காதில் கங்கை வசிப்பதாக ஐதிகம்

ஸங்கலபம்,
மமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷயத்வாரா ஸ்ரீ பரமேஸ்’வர ப்ரீத்யர்த்தம், |
(காலையில்) ப்ராத ஸமிதாதானம் கரிஷ்யே (மாலையில்) ஸாயம் ஸமிதாதானம் கரிஷ்யே” பிறகு, அக்னி பிரார்த்தனை. ”பரித்வாக்னே பரிம்ருஜாமி, ஆயுஷா ச தநேந ச ஸுப்ரஜா ப்ரஜயா பூயாஸம் ஸுவீரோ வீரை:ஸுவர்ச்சா: வர்ச்சஸா ஸுபோஷ: போஷை: ஸுக்ருஹோ க்ருஹை: ஸுபதி:பத்யா ஸுமேதா: மேதயா ஸுப்ரஹ்மா ப்ரஹ்மசாரிபி: ( என்று சொல்லி ஜலத்தைக் கையில் எடுத்து ) ”தேவஸவித: ப்ரஸுவ” ( என்று கூறி ஜலத்தால் அக்னியைச் சுற்றி விடவும் )
ஹோமம்:- (கீழ்கண்ட மந்த்ரங்களைச் சொல்லி ஒவ்வொரு தடவையும்”ஸ்வாஹா” என்று சொன்ன பின்அக்னியில் ஸமித்தை ஒவ்வொன்றாக வைக்கவும்)

01)ஒம் அக்னயே ஸமிதமாஹார்ஷம் ப்ருஹதே ஜாத வேதஸே யதாத்வமக்னே ஸமிதா ஸமித்யஸே ஏவம் மாமாயுஷா வர்ச்சஸா ஸந்யாமேதயா ப்ரஜயா பசு பி: ப்ரஹ்ம வர்ச்சஸேன அந்நாத்யேன ஸமேதய ஸ்வாஹா.
02) ஏதோஸி ஏதிஷீமஹி ஸ்வாஹா
03)ஸமிதஸி ஸமேதிஷீமஹி ஸ்வாஹா
04)தேஜோஸிதேஜோ மயிதேஹி ஸ்வாஹா
05)அபோ அத்ய அந்வசாரிஷகும்ரஸேந ஸம ஸ்ருக்ஷ்மஹிபயஸ்வான் அக்ந ஆகமம் தம்மாஸகும் ஸ்ருஜவர்சாசஸா ஸ்வாஹா
06)ஸம்மாக்நே வர்ச்சஸா ஸ்ருஜ ப்ரஜயா ச தநேந ச ஸ்வாஹா
07)வித்யுந்மேஅஸ்ய தேவா: இந்த்ரோ வித்யாத் ஸஹரிஷிபி: ஸ்வாஹா
08)அக்நயே ப்ருஹதே நாகாய ஸ்வாஹா
09) த்யாவா ப்ருதிவீ ப்யாகும் ஸ்வாஹா
10) ஏஷாதே அக்நே ஸமித்தயா வர்த்தஸ்வ ச ஆப்யாயஸ்வ ச தயாஹம் வர்த்தமாநோ பூயாஸம் - ஆப்யாயமாநஸ் ச ஸ்வாஹா
11) யோமாக்நே பாகிநகும்ஸந்தம் – அதா பாகம் சிகீர்ஷதி அபாகமக்நே தம்குருமாமக்நே பாகிநம் குரு ஸ்வாஹா
12)ஸமிதமாதாய அக்நே ஸர்வவ்ரதோ பூயாஸகும் ஸ்வாஹா
( என்று ஸமித்தை அக்னியில் சேர்த்த பிறகு )
தேவஸவித: ப்ராஸாவீ: என்று ஜலத்தால் அக்னியை ஒரு முறை சுற்றி விடவும்.பிறகு "ஸ்வாஹா" ( என்று கூறி ஸமித்தை அக்னியில் சேர்க்கவும் )

உபஸ்தானம்:- ”அக்நே உபஸ்த்தாநம் கரிஷ்யே” என்று கூறி உபஸ்தானம் செய்ய எழுந்து நின்று, இரண்டு கைகளையும் கூப்பிக் கொண்டு அக்னி பகவானைப் ப்ரார்த்திக்கவும்) யத்தே அக்நே தேஜஸ்தேந அஹம் தேஜஸ்வீ பூயாஸம், யத்தே அக்நே வர்ச்சஸ்தேந அஹம் வர்ச்சஸ்வீ பூயாஸம், யத்தே அக்நே ஹரஸ்தேந அஹம் ஹரஸ்வீ பூயாஸம் மயி மேதாம் மயிப்ஜாம் மய்யக்நி:தேஜோ த்தாது, மயிமேதாம் மயிப்ரஜாம் மயீந்தர: இந்த்ரியம் த்தாது, மயி மேதாம் மயி ப்ரஜாம் மயிஸூர்யோப்ராஜோ த்தாது, அக்நயே நமஹ மந்த்ரஹீநம் க்ரியாஹீநம் பக்திஹீநம் ஹீதாச’ன யத் ஹுதம் து மயா தேவ பரிபூர்ணம் த்தஸ்து தே, ப்ராயச் சித்தாந்யசேஷாணி தப: கர்மாத்மகாநிலை,யாநிதேஷாமசே ஷாணாம், ஸ்ரீக்ருஷ்ண அனுஸ்மரணம் பரம், ஸ்ரீக்ருஷ்ண,க்ருஷ்ண, க்ருஷ்ண, (என்று சொல்லிநமஸ்காரம் செய்யவும்) பிறகு அக்னியிலிருந்து சிறிதளவு பஸ்மத்தை எடுத்து இடது உள்ளங்கையில் ஜலம் விட்டு மோதிர விரலால் கீழ்க்கண்ட மந்த்ரத்தைக் கூறி, குழைத்து அந்தந்த இடத்தில் ரக்ஷையாக இட்டுக் கொள்ளவும்)

ரக்ஷா மந்த்ரம் : “மானஸ்தோகே தநயே மாந ஆயுஷமாநோகோஷுமாநோ அச்’வேஷீரீ ரிஷ: வீராந்மாநோ ருத்ரபாமிதோவதீ: ஹவிஷ்மந்தோ நமஸாவிதேமதே மேதாவீ பூயாஸம் (நெற்றில்) தேஜஸ்வீ பூயாஸம் (மார்பில்)வர்ச்சஸ்வீ பூயாஸம் (வலது தோளில்) ப்ரஹ்வ்வர்ச்சஸ்வீ பூயாஸம் (இடது தோளில்) ஆயுஷ்மாந் பூயாஸம் (கழுத்தில்) அந்நாதோ பூயாஸம் (நாபியில்)ஸ்வஸ்தி பூயாஸம் (தலையில்) இட்டுக்கொண்டு கை அலம்பி, அக்னி பகவானைப் பார்த்து ப்ரார்த்தனை செய்யவும். ஸ்வஸ்தி ச்ரத்தாம் மேதாம் யச:ப்ரஜ்ஞாம், வித்யாம், புத்திம். ச்’ரியம், பலம், ஆயுஷ்யம், தேஜ: ஆரோக்யம் தேஹி மே, ஹவ்யவாஹந ச்’ரியம் தேஹி மே, ஹவ்யவாஹன ஓம் நம: இதி (என்று சொல்லி அக்னியைப் ப்ரார்த்தித்து பின் ஆசமனம் செய்து) ‘‘ஒம் த்தஸத் ப்ரஹ்மார்ப்பணமஸ்து” என்று சொல்லி ஒரு உத்தரணி தீர்த்தத்தை வலது உள்ளங்கையில் விட்டுக் கீழே விடவும்.
ஸமிதாதனம் முற்றிற்று.
காமோ கார்ஷீத் ஜப ஸங்கலபம்
ப்ரஹ்மசாரிகளும், க்ருஹஸ்தர்களும், அவசியம் செய்ய வேண்டியது
(முதல் ஆவணி அவிட்டம் (ச்ராவணம்) செய்பவர்கள் இதைச் செய்ய வேண்டிய அவசியம் இல்லை)

ஆசமனம் செய்து 2-பில் பவித்ரத்தை மோதிர விரலில் போட்டுக் கொண்டு4-கட்டை தர்ப்பங்களைக் காலின் கீழ் ஆஸனமாகச் சேர்த்து, 4-கட்டை தர்ப்பங்ளை பவித்ர விரலில் மடக்கிக் கொண்டு ஸங்கல்பம் செய்யவும்.
விக்னேச்வர த்யானம்
சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்ப்புஜம் !
ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்ன உபசாந்தயே !!
ப்ராணாயாமம்;. ஓம் பூ:, ஓம் புவ:, ஓகும் ஸூவ: ஓம் மஹ:, ஓம் ஜந:, ஓம் தப:, ஓகும் ஸத்யம், ஓம் தத்ஸ விதுர் வரேண்யம், பர்கோ தேவஸ்ய தீமஹி, தியோ யோந:ப்ரசோதயாத், ஓமாப: ஜ்யோதீரஸ:, அம்ருதம் ப்ரஹ்ம, பூர்ப்புவஸ் ஸூவரோம்.ஓம் ஓம் ஓம் - என்று வலது காதைத் தொடவேண்டும். (வலது காதில் கங்கை தேவி வசிப்பதாக ஐதிகம் )

ஸங்கல்பம் மந்திரம், மமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷயத்வாரா ஸ்ரீ பரமேச்’வர ப்ரீத்யர்த்தம், சு’பே சோ’பனே முஸூர்த்தே, அத்ய ப்ரஹ்மண:த்விதீய பரார்ததே ச்’வேத வராஹ கல்பே ,வைவஸ்வத மந்வந்தரே,அஷ்டாவிம்சதிதமே கலியுகே, ப்ரததே பாதே, ஜம்பூத்வீபே, பாரவர்ஷே, பரத கண்டே, மேரோ: தக்ஷிணே பார்ச்’வே, ச’காப்தே, அஸ்மின், வர்த்தமானே, வ்யாவஹாரிகே, ப்ரவாதீனாம், ஷஷ்ட்யா: ஸம்வத்ஸராணாம் மத்யே.

விஜய நாம ஸம்வத்ஸரே, தக்ஷிணாயனே, வர்ஷ ருதௌ,ஸிம்ஹ மாஸே, சு’க்ல பக்ஷே, சதுர்தச்’யாம் (10.30 காலை வரை) பின் பௌர்ணமாஸ்யாம் சு’பதிதௌ, பௌம வாஸரயுக்தாயாம், ச்’ரவண நக்ஷத்ரயுக்தாயாம், ஸௌம்ய நாமயோக, வணிஜை (10.30 காலை வரை) பின் பவ கரணயுக்தாயாம் ஏவங்குண விசே’ஷண விசி’ஷ்டாயாம் அஸ்யாம் பெளர்ணமாஸ்யாம் சு’பதிதௌ.
மமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷயத்வாரா ஸ்ரீ பரமேச்’வர ப்ரீத்யர்த்தம், தைஷ்யாம் பௌர்ணமாஸ்யாம், அத்யாயோத்ஸர்ஜன, அகரண ப்ராயச்’சித்தார்த்தம்,அஷ்டோத்திர ஸஹஸ்ர, ஸங்க்ய்யா (1008 தரம்) அல்லது அஷ்டோத்திர சத ஸங்க்யயா (108 தரம்) “காமோ கார்ஷீத் மன்யுரகார்ஷீன்” இதி மஹா மந்த்ர ஜபம் கரிஷ்யே. (என்று தர்ப்பையை இடது பக்கம் போடவும்.)
(காமோ கார்ஷீத் மன்யுரகார்ஷீன் நமோ நம: இந்த மந்த்ரத்தை ஜபித்து பிறகு பவித்ரத்தை அவிழ்த்து ஆசமனம் செய்து) ஸர்வம் ஸ்ரீ ப்ரஹ்மார்ப்பணமஸ்து (என்று சொல்லி ஜலத்தைக் கீழே விடவும் ) இதன் பிறகு மாத்யாஹ்னிகம் செய்து ப்ரஹ்ம யஜ்ஞம் செய்ய வேண்டும்.
மஹா ஸஹ்கல்பம்
(2-புல் தர்ப்பை பவித்ரம் தரித்து காலடியில் நாலு கட்டை தர்ப்பையைப் போட்டுக் கொண்டு பவித்ரத்துடன் 4-கட்டை தர்ப்பையை பவித்ர விரலில் மடித்துக் கொண்டு) ஸங்கல்பம் செய்யவும். (பின்)
விக்னேச்வர த்யானம்
சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்ப்புஜம் !
ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்ன உபசாந்தயே !!
ப்ராணாயாமம்;
ஓம் பூ:, ஓம் புவ:, ஓகும் ஸூவ: ஓம் மஹ:, ஓம் ஜந:, ஓம் தப:, ஓகும் ஸத்யம், ஓம் தத்ஸ விதுர் வரேண்யம், பர்கோ தேவஸ்ய தீமஹி, தியோ யோந: ப்ரசோதயாத்,ஓமாப: ஜ்யோதீரஸ:, அம்ருதம் ப்ரஹ்ம, பூர்ப்புவஸ் ஸூவரோம். ஓம் ஓம் ஓம் -என்று வலது காதைத் தொடவேண்டும். (வலது காதில் கங்கை தேவி வசிப்பதாக ஐதிகம் )
ஸங்கல்பம் மந்திரம், மமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷயத்வாரா ஸ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம், ததேவ லக்னம் ஸுதினம் ததேவ, தாராபலம் சந்த்ரபலம் ததேவ! வித்யாபலம் தைவ பலம் ததேவ, லக்ஷ்மீபதே தே அங்க்ரியுகம் ஸமராமி !! அபவித்ர: பவித்ரோ வா ஸர்வாவத்தாம் கதோபிவா ய:ஸ்மரேத் புண்ரீகாக்ஷம் ஸபாஹ்யாப்யந்தர: சு’சி: மானஸம் வாசிகம் பாபம் கர்மணா ஸமுபார்ஜிதம் ஸ்ரீ ராம ஸ்மரணேனைவ வ்யபோஹதி ந ஸம்ச’ய:ஸ்ரீராம ராம ராம, திதிர் விஷ்ணு: த்தாவார: நக்ஷத்ரம் விஷ்ணுரேவ ச யோகச்’ச கரணம் சைவ ஸர்வம் விஷ்ணுமயம் ஜகத் ஸ்ரீ கோவிந்த கோவிந்த கோவிந்த, அத்ய ஸ்ரீ பகவத: மஹா புருஷஸ்ய விஷ்ணோ: ஆஜ்ஞயா ப்ரவர்த்தமானஸ்ய அத்ய ப்ரஹ்மண: த்விதீய பரார்த்தே ச்’வேதவராஹ கல்பே, வைவஸ்வத மன்வந்தரே, அஷ்டாவிம் ச’திதமே, கலியுகே –ப்ரதமேபாதே, ஜம்பூத்வீபே, பாரதவர்ஷே, பரதகண்டே, மேரோ: தக்ஷிணே பார்ச்’வே, ச’காப்தே, அஸ்மின், வர்த்தமானே, வ்யாவஹாரிகே, ப்ரவாதீணாம், ஷஷ்ட்யா, ஸம்வத்ஸராணாம் மத்யே

விஜய நாம ஸம்வத்ஸரே, தக்ஷிணாயனே, வர்ஷ ருதௌ ஸிம்ஹ மாஸே, சு’க்ல பக்ஷே சதுர்தச் யாம் (10.30 காலை வரை) பின் பௌர்ணமாஸ்யாம் சுபதிதௌ பௌம வாஸரயுக்தாயாம், ச்’ரவண நக்ஷத்ரயுக்தாயாம், ஸௌம்ய நாமயோக, வணிஜை (10.30 காலை வரை) பின் பவ கரணயுக்தாயாம் ஏவங்குண விசே’ஷண விசி’ஷ்டாயாம் அஸ்யாம் பௌர்ணமாஸ்யாம் சு’பதிதௌ.
அனாதி அவித்யாவாஸனயா ப்ரவர்த்தமானே, அஸ்மின் மஹதி ஸம்ஸார சகரே, விசித்ராபி: கர்மகதிபி: விசித்ராஸு யோநிஷு புன: புன: அனேகதா ஜனித்வா கேனாபி புண்ய கர்மவிசே ஷேண இதானீம் தனமானுஷ்யே த்விஜன்ம விசே’ஷம், பராப்தவத: மம ஜன்மாப்யாஸாத், ஜன்மப்ரப்ருதி, ஏதத்க்ஷண பர்யந்தம், பால்யே, வயஸி, கௌமாரே,யௌவனே, வார்த்தகே ச ஜாக்ரத், ஸ்வப்ந, ஸுஷுப்தி அவஸ்த்தாஸு, மனோ வாக்காய, கர்மேந்த்ரிய, ஜ்ஞானேந்த்ரிய வ்யாபாரைச்ச ஸம்பாவிதானம் இஹ ஜன்மனி, பூர்வ ஜன்மனி, ஜன்மாந்தரே ச ஜ்ஞானத: அஜ்ஞானத: க்ருதானாம், மஹா பாதகானாம், மஹாபாதக அனுமந்த்ரத்வாதீனாம், ஸமபாதகானாம், உப பாதகானாம், நிந்தித தனாதான உபஜீவனாதீனாம், அபாத்ரீகரணானாம், ஜாதி ப்ரம்ச கராணாம், விஹிதகர்ம த்யாகாதீனாம், ஜ்ஞானத: ஸக்ருத்க்ருதானாம், அஜ்ஞானத: அஸக்ருத்க்ருதானாம், ஹர்வேஷாம் பாபாநாம், ஸத்ய: அபனோதனார்த்தம்,பாஸ்கர க்ஷேத்ரே விநாயகபதி ஸமஸ்த ஹரிஹர தேவதா ஸந்நிதௌ, ச்’ராவண்யாம் பௌர்ணமாஸ்யாம் அத்யா யோபாகர்ம கரிஷ்யே, த்தங்கம் ஸ்நானமஹம் கரிஷ்யே, என்று தர்ப்பையை வடக்கே போடவும். கை அலம்பி தீர்த்தம், ப்ரார்த்தனை (செய்து கொள்ளவும்)
1) அதிக்ரூர மஹாகா கல்பாந்த தஹநோபம, பைரவாய நமஸ்துப்யம் அநுஜ்ஞாம் தாதுமர்ஹஸி
2) துர்போஜன-துராலாப-துஷ்ப்ரதிக்ரஹ ஸம்பவம், பாபம் ஹர மம க்ஷிப்ரம் ஸக்யகன்யே நமோஸ்துதே
3) த்ரிராத்ரம் ஜாஹ்னவி தீரே பஞ்சராத்ரம் து யாமுநே: ஸதய: புநாது காவேரி பாபம் ஆமரணாந்திகம்.
4) கங்கா கங்கேதி யோ ப்ரூயாத் யோ ஜனானாம் சதைரபி, முச்யதே ஸர்வ பாபேப்யோ விஷ்ணுலோகம் ஸ கச்சதி
5) நந்திநி நளிநி ஸீதா மாலதீ ச மாலபஹா, விஷ்ணு பாதாப்ஜ ஸம்பூதா கங்கா த்ரிபத . காமினி
புஷ்கரத் யானி தீர்த்தாநி கங்காத்யா: ஸரிதஸ்ததா, ஆகச்சந்து பவித்ராணி ஸ்னான காலே ஸதா மம
( என்று ஸங்கல்பத்தை முடித்துக் கொண்டு ஸ்நானம் யஜ்ஞோபவீத்தாரம்,காண்டரிஷி தர்ப்பணம் செய்து ச்’ராவண ஹோமம் செய்யும் இடத்தில் கலந்து கொண்டும், ஸ்வாமி தரிசனம், பெரியோர்களை வழிபடுதல் முதலிவற்றை முடித்துக் கொண்டு ச்’ராவண கர்மாவை பூர்த்தி செய்து கொள்ளவும்)
யஜ்ஞோபவீத தாரண மந்த்ரம் ( ரிக், யஸுர், ஸாம வேத பொது)
ஆசமனம் (1) ஒம் அச்யுதாய நம: (2)ஒம் அனந்தாய நம: (3) ஒம் கோவிந்தாய நம:
விக்னேச்வர த்யானம்:
சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்ப்புஜம் !
ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்ன உபசாந்தயே !!
ப்ராணாயாமம்;
ஓம் பூ:, ஓம் புவ:, ஓகும் ஸூவ: ஓம் மஹ:, ஓம் ஜந:, ஓம் தப:, ஓகும் ஸத்யம், ஓம் தத்ஸ விதுர் வரேண்யம், பர்கோ தேவஸ்ய தீமஹி, தியோ யோந: ப்ரசோதயாத்,ஓமாப: ஜ்யோதீரஸ:, அம்ருதம் ப்ரஹ்ம, பூர்ப்புவஸ் ஸூவரோம். ஓம் ஓம் ஓம் -என்று வலது காதைத் தொடவேண்டும். (வலது காதில் கங்கை தேவி வசிப்பதாக ஐதிகம் )
ஸங்கல்பம் மந்திரம்,
மமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷயத்வாரா ஸ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம்,ச்’ரௌதஸ்மார்த்த, விஹிதஸதாசார, நித்யகர்மானுஷ்டான, யோக்யதாஸித்தயர்த்தம், ப்ரஹ்மதேஜ: அபிவ்ருத்யர்த்தம், யஜ்ஞோபவீத்தாரணம் கரிஷ்யே. என்று ஜலத்தை தொட்டு யஜ்ஞோபவீத்தாரண மஹா மந்த்ரஸ்ய, பரப்ரஹ்ம ரிஷி: (தலையில்) த்ருஷ்டுப் சந்த: (மூக்கு நுனியில்)பரமாத்மா தேவதா: (மார்பில்) யஜ்ஞோபவீத்தாரண விநியோக: என்று பூணுல் முடிச்சு வலது உள்ளங்கையில் மேலே இருக்கும் படியும் இடது கை ஜல (பஞ்சபாத்திரத்தில்) பாத்திரத்தில் வைத்துக் கொண்டு
யஜ்ஞோபவீதம், பரமம் பவித்ரம் ப்ரஜாபதே: யத்ஸஹஜம் புரஸ்தாத், ஆயுஷ்யம் அக்ரியம் ப்ரதிமுஞ்ச சு’ப்ரம்,யஜ்ஞோபவீதம் பலமஸ்துதேஜ: ஒம்
(என்று புதிய பூணுலைப் போட்டுக் கொள்ளவும், ப்ரம்மசாரிகள் 1பூணுல்,திருமணம் ஆனவர்கள் 2 பூணுல் பெரியோர்கள் 3 பூணுல்) சிலர் மூன்று முடி பூணுல் அணிந்து கொள்ள பழக்கம் உள்ளது.
ஆசமனம்: உபவீதம் பின்னதந்து ஜீர்ணம் கஸ்மல துஷிதம் விஸ்ருஜாமி ப்ரஹ்ம வர்ச்ச: ஜலேஸ்மின் தீர்க்காயுரஸ்துமே ஒம் (பழைய பூணுலைக் கழற்றி ஜலத்தில் போடவும், ஆசமனம் செய்யவும், பிரம்மச்சாரிகள் மான்தோல், இடுப்புக்கயிறு தண்டம்-மந்திரம் சொல்லி அணியவும்)
காண்டரிஷி தர்ப்பணம்
ஆசமனம் செய்து பவித்ரம் போட்டுக் கொண்டு: கட்டைபில்லை பவித்ரத்துடன் மடித்துக் கொண்டு விக்னேச்வர த்யானம்: சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்ப்புஜம் !
ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்ன உபசாந்தயே !! ப்ராணாயாமம்;ஓம் பூ:, ஓம் புவ:, ஓகும் ஸூவ: ஓம் மஹ:, ஓம் ஜந:, ஓம் தப:, ஓகும் ஸத்யம், ஓம் தத்ஸ விதுர் வரேண்யம், பர்கோ தேவஸ்ய தீமஹி, தியோ யோந: ப்ரசோதயாத்,ஓமாப: ஜ்யோதீரஸ:, அம்ருதம் ப்ரஹ்ம, பூர்ப்புவஸ் ஸூவரோம். ஓம் ஓம் ஓம் -என்று வலது காதைத் தொடவேண்டும். (வலது காதில் கங்கை தேவி வசிப்பதாக ஐதிகம் )
ஸங்கல்பம் மந்திரம்,
மமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷயத்வாரா ஸ்ரீ பரமேச்’வர ப்ரீத்யர்த்தம்,ச்’ராவண்யாம், பௌர்ணமாஸ்யாம், அத்யாயோபாகர்மாங்கம் ப்ராஜாபத்யாதி காண்டரிஷி தர்ப்பணம் கரிஷ்யே (என்று சொல்லி, கட்டைபுல் தர்ப்பையை கீழே போட்டு ஜலத்தை தொடவும். பூணுலை மாலையாகப் போட்டுக் கொண்டு கீழ்க்கண்ட 9 தர்ப்பணங்களை அக்ஷதையும், எள்ளும் சேர்த்துக்கொண்டு, மும்மூன்று தடவை உள்ளங்கை இடது பக்கம் வழியாக ஜலத்தைக் கீழே விடவும்) ப்ரஜாபதிம் காண்டரிஷிம் தர்ப்பயாமி (3) ஸோமம் காண்டரிஷிம் தர்ப்பயாமி (3) அக்னிம் காண்டரிஷிம் தர்ப்பயாமி (3) விச்’வான் தேவான் காண்டரிஷிம் தர்ப்பயாமி (3) நேராக ஸாகும்ஹிதீர் தேவதா: உபநிஷதஸ் தர்ப்பயாமி (3) யாஜ்ஜிகீர் தேவதா: உபநிஷதஸ்: தர்ப்பயாமி (3) வாருணீர் தேவதா:உபநிஷதஸ் தர்ப்பயாமி (3) ( துக்கிய உள்ளங்கையைக் கீழமர்த்தி அதன் வழியாக ஜலம் விடவும்) ப்ரஹ்மாணம் ஸ்வயம்புவம் தர்ப்பயாமி (3) (நேராக ஜலம் விடவும்) ஸதஸஸ்பதிம் தர்ப்பயாமி (3) பூணுலை உபவீதி (பவித்ரத்தை காதில் வைத்து) ஆசமனம் செய்யவும்.

வேதாரம்பம்
பவித்ரம் அணிந்து கொண்டு கட்டை தர்ப்பையை பில் மடித்துக் கொண்டு ச்ராண்யாம் பௌர்ணமாஸ்யாம் அத்யாய உபாகர்மாங்கம், வேதாரம்பம் கிரிஷ்யே, தர்ப்பையை போட்டு கை அலம்பவும். ஒம்பூ: தத்ஸவிதுர்வரேண்யம், ஒம்புவ: பர்கோ தேவஸ்ய தீமஹி, ஒம் கும் ஸுவ: தியோயோந: ப்ரசோதயாத்,ஓம் பூ: தத்ஸவிதர்வரேண்யம் பர்கோதேவஸ்ய தீமஹி, ஓம்புவ: தியோயோந:ப்ரசோதயாத்: ஒகும் ஸுவ:
தத்ஸவிதர்வரேண்யம் பர்கோதேவஸ்ய தீமஹி, தியோயோந: ப்ரசோதயாத் ஓம்.ஓம்
இக்ஷேத்வா - ஊர்ஜேத்வா – வாயவஸ்த – உபாயவஸ்த தேவோ வ : ஸவிதா ப்ரார்பயது ச்’ரேஷ்டதமாய கர்மணே ஓம் – ஓம் அக்னிமீளே புரோஹிதம் யஜ்ஞஸ்ய தேவம்ருத்விஜம்:ஹோதாரம் ரத்ன தாதமம் ஓம் – ஓம் அக்ன ஆயாஹிவீதயே க்ருணாநோ ஹவ்ய தாதயே நிஹாதா ஸத்ஸி பர்ஹிஷி ஓம் – ஓம் ச’ந்நோ தேவீரபிஷ்டயே ஆபோ பவந்துபீதயே ச’ம்யோரபிஸ்ரவந்துந:ஓம் – ஓம்ஸமாம்நாய; ஓம் ஸமாம் நாத: வ்ருத்திராதைச் ம-ய-ர-ஸ-தஜபன லகஸம்மிதம் – அத சி’க்ஷாம் – ப்ரவக்ஷ்யாமி கௌ: க்மா ஜ்மா – க்ஷமா – ஷோனி: அவநி: - அ– இ – உண் – ருலுக் – ஏஓங் – ஐஓளச் ஹயவரடு – லண் – ஞமங்ணநமு – ஜபஞ்ச்– கடதஷ் ஜப கடமஸ் க – ப – ச – ட – த சடதவ் – கபய் – ச’ஷஸர் – ஹல் –இதிமா ஹேச்’வராணி ஸூத்ராணி ஓம் நமோ ப்ரஹ்மணே – நமோஸ்த்வக்னயே –நம: ப்ருதிவ்யை நம ஒஷதீப்ய: நமோவாசே, நமோ வாசஸ்பதயே, நமோ விஷ்ணவே, ப்ருஹதே கரோமி, ஒம் தத்ஸத், பவித்ரம் அவிழ்த்து ஆசமனம், கும்பத்துக்கு தீபாராதனை, ஆசீர்வாதம், தீதுத்தப்ரஸாதம் – வாத்யார் ஸம்பாவனை – சுண்டல் – அப்பம் – புஷ்பம் ரக்ஷை ப்ரஸாதம் – ஸ்வாமி பெரியோர் நமஸ்காரம் – வீட்டில் போய் ஹாரத்தி.

ஆவணி 05-ம் தேதி, ( 21-08-2013 ) புதன் கிழமை – காயத்ரி ஜப ஸங்கல்பம். ( ரிக், யஸுர், ஸாம வேத பொது)
ஆசமனம் செய்து பவித்ரம் போட்டுக் கொண்டு: கட்டைபில்லை தரித்து விக்னேச்வர த்யானம்:
சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்ப்புஜம் !
ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்ன உபசாந்தயே !!
ப்ராணாயாமம்;
ஓம் பூ:, ஓம் புவ:, ஓகும் ஸூவ: ஓம் மஹ:, ஓம் ஜந:, ஓம் தப:, ஓகும்,ஸத்யம், ஓம் தத்ஸ விதுர் வரேண்யம், பர்கோ தேவஸ்ய தீமஹி, தியோ யோந: ப்ரசோதயாத்,ஓமாப: ஜ்யோதீரஸ:, அம்ருதம் ப்ரஹ்ம, பூர்ப்புவஸ் ஸூவரோம். ஓம் ஓம் ஓம் -என்று வலது காதைத் தொடவேண்டும்.(வலது காதில் கங்கை தேவி வசிப்பதாக ஐதிகம்)
ஸங்கல்பம் மந்திரம்,
மமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷயத்வாரா ஸ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம், சுபே, சோபனே + ஸம்வத்ஸராணாம் மத்யே வரையில் மஹா ஸங்கல்கத்தில் உள்ளது போல் ஜபித்து.
விஜய நாம ஸம்வத்ஸரே, தக்ஷிணாயனே, வர்ஷ ருதௌ ஸிம்ஹ மாஸே, சு’க்ல பக்ஷே பௌர்ணமாஸ்யாம் (08.20 காலை வரை) பின் கிருஷ்ண பக்ஷே, ப்ரதமாயாம் சு’பதிதௌ ஸௌம்ய வாஸரயுக்தாயாம், ச்’ரவிஸ்டா நக்ஷத்ரயுக்தாயாம், அதிகண்ட நாமயோக, பவ (08.20 காலை வரை) பின் கௌலவ கரணயுக்தாயாம் ஏவங்குண விசே’ஷண விசி’ஷ்டாயாம் அஸ்யாம் ப்ரதமாயாம் சு’பதிதௌ.
மித்யாதீத ப்ராயச் சித்தார்த்தம், தோஷவத்ஸு அபதனீய ப்ராயச் சித்தார்த்தம் – ஸம்வத்ஸர ப்ராயச் சித்தார்த்தாஞ்ச – அஷ்டோத்தர ஸஹஸ்ர ஸங்க்யயா (1008)அல்லது அஷ்டோத்தர சத (108) ஸங்க்யயா காயதரீ மஹாமந்த்ர ஜபம் கரிஸ்யே, ஹோமம் கரிஷ்யே ( கட்டைபில்லை வடக்கே போட்டு ஜலம் தொடவும். பிறகு ப்ரணவஸ்ய முதல் ஆயாத்விதி – ஸவிதா தேவதா முடியச் செய்து (1008) அல்லது(108) தடவை காயத்ரியை ஜபித்து (அ) சமித் ஹோமம் செய்து ப்ராணாயாமம், காலை உபஸ்தான மந்த்ரம் சொல்லி உபஸ்தானம் செய்து, பவித்ரத்தைப் பிரித்து விட்டு ஆசமனம் செய்த பிறகு ”ஓம் தத்ஸத் ப்ரஹ்மார்ப்பண மஸ்து” என்று சொல்லி ஜலத்தைக் கீழே விட வேண்டும்.)

Tuesday 13 August 2013

பதில் இல்லாத கேள்விகள்--பழைய நகை அடகு வியாபாரிகள்

ஒரு"விழிப்புணர்வு" அதிர்ச்சி ரிப்போர்ட்...!


பழைய நகை அடகு வியாபாரிகள் - ஒரு"விழிப்புணர்வு" அதிர்ச்சி ரிப்போர்ட்...!


எந்த ஒரு கபட விஷயமும் தமிழனுக்கு உதிக்காது. அதற்கென்றே புகழ் பெற்ற சில வெளி மாநிலக் கூட்டம் இருக்கிறது. எந்த சந்தில் புகுந்தால் குறுகிய காலத்தில் இலாபம் கிடைக்கும் என்று பார்த்துக் கொண்டு இருப்பார்கள். இதை உறுதிப் படுத்த மகா நதி படத்தில் வரும் 'தனுஷ்' கேரக்டரைச் சொல்லலாம்.... சுமார் நாற்பது வருடங்களுக்கு முன் தொடங்கப்பட்ட மணப்புரம் அடகு வியாபாரக் கடையை தொடங்கியது திருச்சூரைச் சேர்ந்த பத்மநாபன் மற்றும் மகன் நந்த குமாரும்.

திருச்சூர் நகரை சுற்றி மட்டுமே செய்த நகை அடகு வியாபாரம் மெல்ல கேரளா முழுவதும் வியாபித்தது. 1992 இல் முதன் முதல் பங்கு சந்தையில் பதிவு செய்த அடகு கடை எனும் முத்திரையோடு தங்களின் வணிகத்தைப் பெருக்கினார்கள். இன்றைய தேதியில் 26 மாநிலங்கள் மற்றும் அனைத்து யூனியன் பிரதேசங்களையும் சேர்த்து சுமார் 3000 கிளைகளைக் கொண்டு பரப்பி, சுமார் ரூ 11600 கோடி அளவு சொத்துக்கள் உள்ள நிறுவனம் என்றும், 22000 ஊழியர்களையும் 16 இலட்சம் வாடிக்கையாளர்களையும் கொண்ட நிறுவனம் என்று மார்தட்டிக் கொள்கிறார்கள்.

அதே போல மற்றொரு நிறுவனம் முத்தூட் நிறுவனம். 25000 ஊழியர்களையும், 22 மாநிலங்களில் மற்றும் 4 யூனியன் பிரதேச பகுதிகளில் மொத்தம் 4000 அலுவலகங்கள் இந்தியா முழுவதும் இல்லாது என்று மார் தட்டிக் கொள்கிறார்கள். நிகர சொத்து மதிப்பு ரூ 23372 கோடிஎன்று சொல்கிறார்கள். அதே நேரம் அவர்களது திருப்பிச் செலுத்த வேண்டிய வெளிக் கடன் சொத்து மதிப்பை விட அதிகம். அதை விட மற்றொரு முக்கிய விஷயம், இந்த நிறுவனத்தின் முழு பங்குகளும் அவர்களது குடும்பத்திற்கு உள்ளேயே இருக்கிறது.

சரி எதற்கு இந்த விளக்கமெல்லாம்?

இவர்களின் வியாபார தந்திரத்தையும், அதை பயன் படுத்திய புத்திசாலித்தனமும், இன்றைக்கு ரிசர்வ் வங்கியின் சட்டத்தால் பாதிக்கப் பட்டதும் மற்றும் அடகு வைத்துள்ள மக்களின் நிலை என்ன ஆகும் என்று தெளிவிக்கத்தான் இந்தப் பதிவு.

இந்த நிறுவனங்கள் கண்டெடுத்த முதல் வளமான வாடிக்கையாளர் உள்ள மாநிலம் தமிழ் நாடு. சட்டென்று தேவைப் படும் பணம் உடனடியாக கிடைக்கும் இடம் ஒரே இடம் நம் லாலா சேட்டுக் கடைதான். சேட்டு ஒரு எல்லைக்கு மேல் கொடுக்க மாட்டார் என்பதால் உடனே செல்வது வங்கிகளுக்குத்தான்.

இதிலும் இரண்டு விதமான வங்கிகள். ஒன்று தேசியமயமாக்கப் பட்ட வங்கி மற்றது நிதி அல்லது சிட் பண்டு அல்லது கூட்டுறவு வங்கி.

பின்னவைகளில் வாடிக்கையாளருக்கு ஓரளவு அனுசரணை உண்டு, ஆனால் தேசிய மயமாக்கப் பட்ட வங்கிகள் இந்த மாதிரி வாடிக்கையாளர்களை படுத்திய பாடு இருக்கிறதே? அப்பப்பா? விரட்டு வார்கள், நாளைக்கு வரச் சொல்வார்கள், குறைத்து மதிப்பீடு செய்வார்கள், கடன் கொடுக்கும் தொகையில் ஒரு பகுதியை டெபாசிட் செய்யச் சொல்வார்கள். டோக்கன் கொடுத்து விட்டு நாள் பூராவும் இழுத்தடிப்பார்கள். காரணம் இவர்களது வட்டி விகிதம் தனியார் வங்கிகளை விட சற்றே குறைவு.


மனம் நொந்த மக்கள், வேறு வழியில்லாமல் தனியார் வங்கிகளை நாடத் தொடங்கியபோதுதான், இது போல மலையாளிக் கம்பெனிகளுக்கு இதில் உள்ள குள்ள நரித்தனமான மிகப் பெரிய வர்த்தகம் புலனாகியது .

சிறிய அளவில் இது போல நிதி நிறுவனம் தொடங்க முதல் பெரியதாகத் தேவை இல்லை. அனால் அபரிமிதமான வளர்ச்சி வேண்டும் என்று எண்ணும் பண முதலைகள் இல்லையா? அதற்க்கான குறுக்கு வழிகளை ஆராய்ந்தார்கள். அவர்களுக்கு கிடைத்தது ஒரு மிகப் பெரிய கொழு கொம்பு.

மக்களிடம் இருந்து நகைகளை அடமானம் வாங்கி அதே நகையை மறு அடமானம் வைப்பது எனும் மாபெரும் சட்டத்தின் ஓட்டையை உபயோகித்தார்கள். இந்த ஓட்டையை வேண்டுமென்றே உண்டாக்கினார்களா இல்லை இந்த ஓட்டையினால் பலன் பெரும் அரசியல் வாதிகள் தெரிந்த்தேதான் இவ்வாறு சட்ட விதிகளை உண்டாக்கினார்களா எனத் தெரியவில்லை.

அதாவது இந்த இரண்டு நிதி நிறுவனங்களும், தேசிய மயமாக்கப் பட்ட வங்கிகளுடன் புரிந்துணர்வு இட்டுக் கொண்டு, மக்களிடம் பெற்ற நகைகளை இங்கே வந்து அடகு வைத்து பணம் பெற்றுக் கொள்வார்கள்.

சரி, இதில் என்ன தவறு? வர்த்தகம் சரியாகத்தானே நடக்கிறது? இதில் என்ன விதி முறை மீறல் இருக்கிறது என்று கேட்பவர்களே.....

இதை நீங்கள் லென்ஸ் கொண்டு பார்க்க வேண்டும். தேசிய வங்கிகள் நகை அடமானத்திற்குக் கொடுக்கும் வட்டி விகிதம் சுமார் 12%. அவர்களது நிர்ணயம், நகைகளின் மொத்த மதிப்பில் இருந்து 60 முதல் 70 சதம் வரையே கொடுக்கும். இதற்கு மேல் கடன் வேண்டும் என்றால் நீங்கள் அதிக நகைகளை கொடுக்க வேண்டி வரும்.உதாரணத்திற்கு, உங்களுக்கு உடனடி தேவை ரூ 50000 என்று வைத்துக் கொள்வோம். உங்களிடம் உள்ள நகையின் மதிப்பு ரூ 60000 மட்டுமே. தேசிய வங்கிகள் உங்களுக்குக் கொடுக்கப் போகும் கடன் ரூ 36000 முதல் ரூ 40000 மட்டுமே (அதாவது நகை மதிப்பில் 60% முதல் 70% வரை). ரூ 50000 தேவைப் படும் இடத்தில் வெறும் ரூ 40000 மட்டுமே கிடைக்கையில் மீதம் தேவைப்படும் தொகைக்கு என்ன செய்வீர்கள்?

இங்கேதான் வருகிறார்கள் நமது ஹீரோக்கள் முத்தூட் மற்றும் மணப்புரம் நிறுவனங்கள். உங்களை அன்போடு வரவேற்பார்கள். உங்களுக்குத் தேவையான பணம் ரூ 50000 ஐயும் கொடுப்பார்கள். ஆனால் வட்டி 36% மட்டுமே. அதுவும் நீங்கள் கடனின் அசலைத் திரும்பச் செலுத்தப் போகும் கால அளவை அனுசரித்து. மூன்று மாதம் மட்டுமே தவணை. மீறினால், அதாவது நீங்கள் கட்டத் தவறினால், உங்கள் நகை நீங்கள் அறியாமலேயே விற்கப்படும்.அதற்கான சட்ட விதிகளை மதிப்பதாக நீங்கள் கையெழுத்துப் போட்டிருக்கிறீர்கள், கடன் வாங்கும்போது.

ஆனால் இவர்கள் வைக்கும் உங்களுடைய நகைக்கு 8% மட்டுமே கார்ப்பொரேட் வட்டி. ஆனால் இவர்கள் உங்களுக்கு உங்கள் நகையை வைத்தே பெற்ற பணம் கொண்டு உங்களுக்கே கடனுக்குக் கொடுக்கும் வட்டி விகிதம் 36%

யார் இவர்களுக்கு உதவுகிறார்கள்? ஏன் இந்த 26% பண இலாபத்தை அனுமதிக்க வேண்டும்? யார் இதன் பின் புலத்தில்? விடை தெரியாத கேள்விகள்.

இந்த வேலையை ஏன் தேசிய மயமாக்கப் பட்ட வங்கிகள் செய்து பயனை நாட்டுக்குத் தரவில்லை? எதற்காக தனியார் கொள்ளை இலாபம் சம்பாதிக்க உடன் பட வேண்டும்? ஒரு ஏழை மாணவனுக்கு கல்வித் தொகை கடன் தர இவர்கள் மனப்பூர்வமாக முயன்றதுண்டா? ஒரு குறு தொழில் முனைவோருக்குத் தந்ததுண்டா இச்சலுகை?

சரி, போகட்டும்...... என்ன ஆகும் இப்போது?

உங்களின் நகையின் மதிப்பீடு சரிதானா? அது எந்த சட்ட விதிகளுக்கு உட்பட்டாவது எடை போடப்பட்டு விலை நிர்ணயிக்கப் பட்டு உள்ளதா?

இல்லை....

காரணம், நீங்கள் வாங்கிய அந்த பழைய நகை ஒரு சவரனுக்கு ரூ 400 கொடுத்துள்ளீர்கள். அதை அடகு வைக்கும் போதுதான் உங்களுக்குத தெரிகிறது அதன் மதிப்பு ஒரு கிராமுக்கு ரூ 1800 என்று. நீங்கள் வியந்து போய் 'சரி சரி' என்கிறீர்கள் உடனடியாக. காரணம் உங்களின் கடன் அவஸ்தை மற்றும் நிதி பற்றாக்குறை. உங்களுக்கோ மன நிறைவு. நீங்கள் வாங்கியதைக் கால் அதிக மதிப்பை உங்கள் நகை பெறுகிறது. ஆனால் நீங்கள் சோதிக்க மறந்தது, உங்கள் நகை மதிப்பீடு சந்தை மதிப்பீட்டிற்கு ஒப்பாகிறதா என்று!

ஆனால் உங்களின் தங்க மதிப்பு உண்மையில் ஒரு கிராமுக்கு ரூ 2400 என இந்த நிறுவனங்கள் ஏற்கனவே தேசிய வங்கிகளுடன் ஒப்பந்தம் போட்டுள்ளன. அப்போ, மிச்சம் உள்ள உங்களின் தங்க மதிப்பு ரூ 600 எங்கே போயிற்று? இதற்கும் சேர்த்தே இ ந் நிருவனங்கள் பணம் பெற்று அதை சுழற்சியில் இட்டு பணததை இரெட்டிப்பாக்குகிறார்கள்.

என்னிடம் பதில் இல்லாத கேள்விகள் பலதும் உள்ளன..... அவை ஒவ்வொன்றாக....

1. எந்த ஒரு நகையும் அடகில் இருந்து குறிப்பிட்டக் காலக் கெடுவிற்குள் திரும்ப மீட்கப் பட இயலாவிட்டால், நிறுவனங்கள் அந்த நகைகளை ஏலம் போடுவதாக தினசரி பத்திரிக்கைகளில் அறிவிக்க வேண்டும். அது மாதிரி விளம்பரங்களை இதுவரை இந்த இரு நிறுவனங்கள் தினசரி பத்திரிக்கைகளில் கொடுத்துப் பார்த்ததாய் நினைவில்லை? உங்களுக்கு?

2. தேசிய வங்கிகள் தங்களின் வரை முறைக்குள் கடன் கொடுக்க முடியாமல் போய், பிற தனியார் நிறுவனங்கள் இலாபம் அனுபவிப்பதை ஏன் ரிசர்வ வங்கிக்குச் சொல்லவில்லை?

3. கொள்ளை என்று தெரிந்தும் எப்படி தேசிய வங்கிகள் தனியார் அடகு நிறுவனங்களின் விதிகளை மதித்து அவர்களுக்கு மொத்தக் கடன் (bulk loan) கொடுத்தார்கள்? ஏன் தங்கள் வங்கிகளுக்கு விதி முறைகளைத் தளர்த்தக் கோரவில்லை?

4. அரசாங்க வங்கிகளாக இருந்தும் இது போல மிகப் பெரிய வர்த்தக பரிமாற்றங்களை (ரூ. 70000 கோடி அளவில் உள்ள வர்த்தகம்) ஏன் தனியாருக்குத் தாரை வார்த்துக் கொடுத்தார்கள்?

5. தேசிய வங்கிகள், இத்தனை பெரிய சந்தையை ஏன் பயன்படுத்திக்கொள்ளாமல் தனியாருக்கு வசதிகள் செய்து கொடுத்ததின் பின் புலத்தில் உள்ள பயனாளிகள் யார் யார்?இது போல பல கேள்விகளுக்கு விடை இல்லை.சரி..... இது வரை உள்ள சரித்திரங்கள் போகட்டும்.....எதனால் இந்த கட்டுரை எழுந்தது என்பதை உங்களுக்குத் தெரிவிக்க வேண்டாமா?

உண்மை 1: சில நல்ல உள்ளங்கள் மத்திய ரிசர்வ் வங்கிக்கு, இந்த தனியார் துறைகளின் தில்லு முல்லுக்களை வெளிப்படையாகத் தெரிவித்ததின் மூலம், ரிசர்வ் வங்கி தன பிடிகளை இறுக்கி, இந்தத் தனியார் நிறுவனங்களுக்குக் கிடுக்கிப் பிடி போட்டது. அதாவது இந்த தனியார் நிறுவனங்கள் தங்க மதிப்பீட்டில் அறுவது சதவீதத்திற்கு மேல் கடன் கொடுக்கக் கூடாது.

மற்றும், கடன் தொகைக்கு 13% மேல் வட்டி விதிக்கக் கூடாது என்றும் தன் விதி முறையைத் திருத்தி கடந்த வருடம் மார்ச் மாதம் தன் பிடியை இறுக்கியது.

See website http://www.manappuram.com/php/interestrate.php 

Friday 9 August 2013

Kovil Muluthum Kanden

Kovil Muluthum Kanden: Listening to "Kovil Muluthum Kanden" by V Nagaiah on Dhingana!

பசுபதிவுகள்: பாடலும் படமும் - 4 : கவிமணி

பசுபதிவுகள்: பாடலும் படமும் - 4 : கவிமணி

வாஞ்சியூரில் உள்ள கோசாலைக்குள்

காலை நேரம். குளித்துமுடித்த கையோடு, கை நிறைய விபூதியை எடுத்து, மூன்று விரல்களில் குறையாமல் எடுத்து, கீழே குனிந்து கொண்டே நெற்றியில் வைத்து இடதும் வலதுமாகத் தீட்டி தலையை ஆட்டியபடிநிமிர்ந்து பார்த்தால்… அடடா என்ன ஒரு தெய்வீக அழகு! நீறு இல்லா நெற்றி பாழ் என்று சும்மாவா சொல்லி வைத்தார்கள். நெற்றிக்கு அழகு தரும் இந்தத் திருநீறு, என்ன ஒரு வாசனையுடன் சுண்டியிழுக்கிறது.

வெறுமனே இப்படி விபூதியை இட்டுக் கொண்டிருந்தால் போதுமா? அது எப்படித் தயாராகிறது? அதன் மூலப் பொருள்கள் எவை? அதன் வாசனைக்கான காரணம் என்ன என்று நமக்குள்ளே கேட்டுக் கொள்ள வேண்டாமா?
இந்தக் கேள்விகளுடன் வாஞ்சியூரில் உள்ள கோசாலைக்குள் அடியெடுத்து வைத்தோம்.

1892-ல் காஞ்சி சங்கரமடத்தின் மூலம் திருமலைராயன்பட்டினம் வாஞ்சியூரில் உள்ள ஸ்ரீவிஸ்வநாதசுவாமி கோவிலில் தொடங்கப்பட்டது இந்த கோசாலை.

தற்போது ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் வழிகாட்டலில் தரம்பிரிக்கப்பட்ட பசுக்களின் சாணத்திலிருந்து திருநீறு(விபூதி) தயாரிக்கும்பணி நடந்து வருகிறது. அவற்றைப் பார்வையிட்டுக் கொண்டு சென்றபோது, கோவிலின் ஸ்ரீகாரியம் பி.கணபதிசுப்ரமணியன் நம்மிடம் இவை குறித்து விளக்கத் தொடங்கினார்.

“365 நாளும் பசுமாடு சாணம்போடும். எனவே விபூதி தயாரிக்கத் தேவையான மூலப் பொருள் தடையின்றிக் கிடைக்கிறது. இதிலிருந்து தயாரிக்கப்படும் விபூதியினை கோவில்களுக்கும் பக்தர்களுக்கும் அளிக்கிறோம். 10 கிலோ சாணத்தில் 2 கிலோ விபூதி தயாரிக்க முடியும். கிலோ ஒன்று ரூ.250-க்கு விற்க முடியும். இந்த ஜவ்வாது விபூதி,குழந்தைகளுக்கு ஏற்படும் பல்வேறு உபாதைகள், பெரியோருக்கு ஏற்படும் வயிற்று வலி, தலைவலி உள்ளிட்ட வற்றுக்கும் அருமருந்து.

முதலில் சாணத்தை தட்டி, நன்கு காயவைத்து, நெல் பதர் படுக்கையில் வைக்க வேண்டும். இவற்றை கோபுரம்போல் அடுக்கி கருக்காவால் மூடி நெருப்பிட வேண்டும். அதிக வெப்பத்தில் 5 நாள்களில் உள்ளே இருக்கும் சாண உருண்டை வெள்ளையாக, தொட்டால் உதிர்ந்துவிடும் நிலைக்கு மாறிவிடும். அதனை எடுத்து சலித்தால், தரமான விபூதி தயார்.
இதில் நல்ல லாபமும் கிடைக்கிறது. இங்கே கோசாலையில் 70 மாடுகள் உள்ளன. இவை போடும் கன்றுகளை சுற்று வட்டார விபூதி தயாரிப்பு ஆர்வலர்களிடம் அளிக்கிறோம். சுமார் 100 பேர் இப்பணியில் உள்ளனர்.

சிறிய வகை பாக்கெட்டுகளில் அடைத்து, திருநள்ளாறு ஸ்ரீதர்பாரண்யேஸ்வரர் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்கள்,மடங்கள், சைவ அடியார் குழுக்களுக்குக் கொடுக்கிறோம். கோவில் மற்றும் விபூதி தயாரிப்பு இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு செயல்பாடுகளைக் கண்காணிக்கிறோம். வாஞ்சியூர்கோசாலையும், விபூதி தயாரிப்பு மையங்களும் முறையாகச் செயல்படுகின்றன. இதற்கான வரவேற்பும் அதிகரித்துள்ளது. ஒரு மாட்டின் சாணத்தில் இருந்து ரூ.500 வரையிலான விபூதி தயாரித்து விற்கமுடியும்” என்றார் அவர்.

அப்படியே கோசாலையைச் சுற்றி வந்தோம். பசுவின் சிறுநீர்-கோமியம் இங்கே பினாயில் ஆகிறது. கோமியம் ஓர் இயற்கை கிருமிநாசினி. ஒரு மாட்டிலிருந்து 10 லிட்டர் பினாயில் தயாரிக்க முடியுமாம். பீனோல் என்கிற கார்பானிக் அமிலம் இயற்கையாக பசுவின் சிறுநீரில் உள்ளதாம். ஒரு மாட்டின் கோமியத்தில் இருந்து ரூ.400-க்கு விற்பனையாகும் வகையில் பினாயில் தயாரிக்க முடியுமாம். இதற்கான பயிற்சியை இங்கு தருகிறார்கள்.

கோமியத்தை குடுவையில் காய்ச்சி ”அர்க்’ என்ற பொருளைத் தயாரிக்கிறார்கள். இந்த கோசாலையை சுற்றிப் பார்த்தபோது, மாடுகள் குறித்த பல்வேறு ஆச்சரியமூட்டும் செய்திகள் கிடைத்தன. நம் நாட்டில்44 வகை தரமான பசுக்கள் உள்ளனவாம். தமிழகத்தில் கும்பளச்சேரி, தார்பர்க்கர், மலைநாடு வகை முக்கியமானவை. மாடுகளில் பாஸ்டிராஸ் என்பது ஐரோப்பிய இனமாகவும், பாஸ்இண்டிகஸ் என்பது ஆசிய இனமாகவும் கண்டறியப்பட்டது.

கீத்உட்பர்டு என்கிற ஆஸ்திரேலிய விஞ்ஞானி பால் ஆராய்ச்சியில் ஈடுபட்டபோது, அதன் தன்மையை ”ஏ’ என்றும் ”பி’ என்றும் பிரித்துள்ளார்.”ஏ’ என்பது நோயை உருவாக்கும் மூலக்கூறு உள்ள பால் இனம். ”பி’என்பது நோய்க்கு மருந்தாகும் தன்மையது. இந்தியாவில் குறிப்பாக தமிழகப் பகுதியில் இவ்வாறு கலப்பின முறையில் இல்லாமல் ”பி’ வகை மாடுகள் அதிகமாக உள்ளன. கலப்பின பசுக்கள் பால் உற்பத்தியை அதிகமாக்குகிறது. இது, தரமான மாடுகளுடன் கலந்துவிட்டதே இப்போது கவனத்தில் கொள்ளவேண்டிய விஷயம். ஆக, பாலை தரம் பார்த்து பயன்படுத்தவேண்டிய அவசியத்தில், தினமும் உபயோகிக்கும் விபூதிஎத்தகையதாக இருக்க வேண்டும் என்பதை யோசிக்க வேண்டியுள்ளது.
ஆனால், டாலமைட் என்கிற கல் மாவு, கருக்காய்த் தவிடு, பேப்பர் கழிவு மூலம் உருவாக்கப்படும் விபூதியே தற்போது அதிக பயன்பாட்டில் உள்ளது. இது மனிதர்களுக்கு தோல் நோயை உண்டாக்குகிறது. தரமான சாணத்திலிருந்து கிடைக்கும் விபூதியே உடல் நலத்துக்கும், வழிபாட்டுக்கும் சிறந்தது.