telepathygiridharbaba

telepathygiridharbaba
shirdisai thunai

Friday 9 August 2013

வாஞ்சியூரில் உள்ள கோசாலைக்குள்

காலை நேரம். குளித்துமுடித்த கையோடு, கை நிறைய விபூதியை எடுத்து, மூன்று விரல்களில் குறையாமல் எடுத்து, கீழே குனிந்து கொண்டே நெற்றியில் வைத்து இடதும் வலதுமாகத் தீட்டி தலையை ஆட்டியபடிநிமிர்ந்து பார்த்தால்… அடடா என்ன ஒரு தெய்வீக அழகு! நீறு இல்லா நெற்றி பாழ் என்று சும்மாவா சொல்லி வைத்தார்கள். நெற்றிக்கு அழகு தரும் இந்தத் திருநீறு, என்ன ஒரு வாசனையுடன் சுண்டியிழுக்கிறது.

வெறுமனே இப்படி விபூதியை இட்டுக் கொண்டிருந்தால் போதுமா? அது எப்படித் தயாராகிறது? அதன் மூலப் பொருள்கள் எவை? அதன் வாசனைக்கான காரணம் என்ன என்று நமக்குள்ளே கேட்டுக் கொள்ள வேண்டாமா?
இந்தக் கேள்விகளுடன் வாஞ்சியூரில் உள்ள கோசாலைக்குள் அடியெடுத்து வைத்தோம்.

1892-ல் காஞ்சி சங்கரமடத்தின் மூலம் திருமலைராயன்பட்டினம் வாஞ்சியூரில் உள்ள ஸ்ரீவிஸ்வநாதசுவாமி கோவிலில் தொடங்கப்பட்டது இந்த கோசாலை.

தற்போது ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் வழிகாட்டலில் தரம்பிரிக்கப்பட்ட பசுக்களின் சாணத்திலிருந்து திருநீறு(விபூதி) தயாரிக்கும்பணி நடந்து வருகிறது. அவற்றைப் பார்வையிட்டுக் கொண்டு சென்றபோது, கோவிலின் ஸ்ரீகாரியம் பி.கணபதிசுப்ரமணியன் நம்மிடம் இவை குறித்து விளக்கத் தொடங்கினார்.

“365 நாளும் பசுமாடு சாணம்போடும். எனவே விபூதி தயாரிக்கத் தேவையான மூலப் பொருள் தடையின்றிக் கிடைக்கிறது. இதிலிருந்து தயாரிக்கப்படும் விபூதியினை கோவில்களுக்கும் பக்தர்களுக்கும் அளிக்கிறோம். 10 கிலோ சாணத்தில் 2 கிலோ விபூதி தயாரிக்க முடியும். கிலோ ஒன்று ரூ.250-க்கு விற்க முடியும். இந்த ஜவ்வாது விபூதி,குழந்தைகளுக்கு ஏற்படும் பல்வேறு உபாதைகள், பெரியோருக்கு ஏற்படும் வயிற்று வலி, தலைவலி உள்ளிட்ட வற்றுக்கும் அருமருந்து.

முதலில் சாணத்தை தட்டி, நன்கு காயவைத்து, நெல் பதர் படுக்கையில் வைக்க வேண்டும். இவற்றை கோபுரம்போல் அடுக்கி கருக்காவால் மூடி நெருப்பிட வேண்டும். அதிக வெப்பத்தில் 5 நாள்களில் உள்ளே இருக்கும் சாண உருண்டை வெள்ளையாக, தொட்டால் உதிர்ந்துவிடும் நிலைக்கு மாறிவிடும். அதனை எடுத்து சலித்தால், தரமான விபூதி தயார்.
இதில் நல்ல லாபமும் கிடைக்கிறது. இங்கே கோசாலையில் 70 மாடுகள் உள்ளன. இவை போடும் கன்றுகளை சுற்று வட்டார விபூதி தயாரிப்பு ஆர்வலர்களிடம் அளிக்கிறோம். சுமார் 100 பேர் இப்பணியில் உள்ளனர்.

சிறிய வகை பாக்கெட்டுகளில் அடைத்து, திருநள்ளாறு ஸ்ரீதர்பாரண்யேஸ்வரர் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்கள்,மடங்கள், சைவ அடியார் குழுக்களுக்குக் கொடுக்கிறோம். கோவில் மற்றும் விபூதி தயாரிப்பு இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு செயல்பாடுகளைக் கண்காணிக்கிறோம். வாஞ்சியூர்கோசாலையும், விபூதி தயாரிப்பு மையங்களும் முறையாகச் செயல்படுகின்றன. இதற்கான வரவேற்பும் அதிகரித்துள்ளது. ஒரு மாட்டின் சாணத்தில் இருந்து ரூ.500 வரையிலான விபூதி தயாரித்து விற்கமுடியும்” என்றார் அவர்.

அப்படியே கோசாலையைச் சுற்றி வந்தோம். பசுவின் சிறுநீர்-கோமியம் இங்கே பினாயில் ஆகிறது. கோமியம் ஓர் இயற்கை கிருமிநாசினி. ஒரு மாட்டிலிருந்து 10 லிட்டர் பினாயில் தயாரிக்க முடியுமாம். பீனோல் என்கிற கார்பானிக் அமிலம் இயற்கையாக பசுவின் சிறுநீரில் உள்ளதாம். ஒரு மாட்டின் கோமியத்தில் இருந்து ரூ.400-க்கு விற்பனையாகும் வகையில் பினாயில் தயாரிக்க முடியுமாம். இதற்கான பயிற்சியை இங்கு தருகிறார்கள்.

கோமியத்தை குடுவையில் காய்ச்சி ”அர்க்’ என்ற பொருளைத் தயாரிக்கிறார்கள். இந்த கோசாலையை சுற்றிப் பார்த்தபோது, மாடுகள் குறித்த பல்வேறு ஆச்சரியமூட்டும் செய்திகள் கிடைத்தன. நம் நாட்டில்44 வகை தரமான பசுக்கள் உள்ளனவாம். தமிழகத்தில் கும்பளச்சேரி, தார்பர்க்கர், மலைநாடு வகை முக்கியமானவை. மாடுகளில் பாஸ்டிராஸ் என்பது ஐரோப்பிய இனமாகவும், பாஸ்இண்டிகஸ் என்பது ஆசிய இனமாகவும் கண்டறியப்பட்டது.

கீத்உட்பர்டு என்கிற ஆஸ்திரேலிய விஞ்ஞானி பால் ஆராய்ச்சியில் ஈடுபட்டபோது, அதன் தன்மையை ”ஏ’ என்றும் ”பி’ என்றும் பிரித்துள்ளார்.”ஏ’ என்பது நோயை உருவாக்கும் மூலக்கூறு உள்ள பால் இனம். ”பி’என்பது நோய்க்கு மருந்தாகும் தன்மையது. இந்தியாவில் குறிப்பாக தமிழகப் பகுதியில் இவ்வாறு கலப்பின முறையில் இல்லாமல் ”பி’ வகை மாடுகள் அதிகமாக உள்ளன. கலப்பின பசுக்கள் பால் உற்பத்தியை அதிகமாக்குகிறது. இது, தரமான மாடுகளுடன் கலந்துவிட்டதே இப்போது கவனத்தில் கொள்ளவேண்டிய விஷயம். ஆக, பாலை தரம் பார்த்து பயன்படுத்தவேண்டிய அவசியத்தில், தினமும் உபயோகிக்கும் விபூதிஎத்தகையதாக இருக்க வேண்டும் என்பதை யோசிக்க வேண்டியுள்ளது.
ஆனால், டாலமைட் என்கிற கல் மாவு, கருக்காய்த் தவிடு, பேப்பர் கழிவு மூலம் உருவாக்கப்படும் விபூதியே தற்போது அதிக பயன்பாட்டில் உள்ளது. இது மனிதர்களுக்கு தோல் நோயை உண்டாக்குகிறது. தரமான சாணத்திலிருந்து கிடைக்கும் விபூதியே உடல் நலத்துக்கும், வழிபாட்டுக்கும் சிறந்தது.

No comments:

Post a Comment