telepathygiridharbaba

telepathygiridharbaba
shirdisai thunai

Friday 4 October 2013

இடப வாத்திக தரிசன ரகசியம்

சதுர்யுகங்கள் இரண்டாயிரம் நான்முகனுக்கு ஒரு நாளாகும். அது நூறு கொண்டது நான்முகனது ஆயுட்காலமாகும், நான்முகனின் ஆயுட்காலமே விஷ்ணுவிற்கு ஒரு நாள் ஆகும். ஆக விஷ்ணுவிற்கு நூறு வயது கழிந்தால் உலகிலுள்ள அனைத்து உயிர்களும் அழியும் என்பது  கணக்கு, அழியும் ஊழிகாலத்தில்  உமையுடன் சேர்ந்து திருநடனம் புரிவார் சிவபெருமான். இக்கணக்கினால் தர்மதேவதை வேதனை கொண்டது. தானும் அழிய வேண்டி வருமே என்ன செய்வது  சிவபெருமானிடம்  சரணடைவதுத் தவிர தனக்கு வேறு வழியில்லை என்று சிவனை சரணடைந்தது. இடபமாக மாறி தர்மதேவதை  சிவனின் முன்பு நின்றது. ஐயனே நான் இறவாமலிருக்க வேண்டும். எப்பொழுதும் தங்கள் வாகனமாக நானிருக்கவும் ஆசி கூறுங்கள் என்றது.கேட்ட வரம் கொடுக்கும் அருட்கடலான சிவபெருமானும் இடபத்தில் தலை மேல் தனது கை வைத்து  தர்மதேவதையே உன் விருப்பம் நிறைவேற்றப்படும்.

 ஆகவே தருமத்தினை உலகிற்கு  உணர்த்த கிருதயுகத்தில் நான்கு கால்களுடனும், திரேதாயுகத்தில் இரண்டு கால்களுடனும் கடைசியாக  கலியுகத்தில் ஒரு காலுடனும் தோன்றி தர்மத்தினை நிலைநாட்டுவாய். மேலும்  எப்பொழுதும் என்னை நீ பிரியாமல் இருப்பாய் எனது வாகனமாகும் பேற்றையும் நீயேப் பெறுவாய் என்று திருவாய் எழுந்தருளினார்.தனது அடியார்களுக்கு காட்சியளிக்கும் சிவபெருமானின் 


 இடப வாத்திக தரிசன ரகசியம் இதுவேயாகும், இனி இடப வாத்திக மூர்த்தியை சரிசிக்க நாம் செல்ல வேண்டிய தலம் திருவாவடுதுறையாகும். இத்தலம் மயிலாடுதுறையருகே  அமைந்துள்ளது. இங்குள்ள மாசிலாமணிஸ்வரர்  கோயிலில்  அமைந்துள்ள இடபாந்திக மூர்த்தியை வணங்குவோமானால் ஊழிக்காலத்தில் நம்முடைய ஆன்மா சிவபெருமானை   தஞ்சமடையும்  என்பது  ஐதீகம்.  இவருக்கு திங்கள்,வியாழக்கிழமைகளில் வெண்தாமரை அர்ச்சனையும், பசுவின் பால் நைவேத்தியமும் கொடுக்க குரு தோஷ நிவர்த்தியுண்டாகும். மேலும் சிவபெருமானுக்கு வில்வ நீரால் அபிசேகம் செய்தால் மறுபிறவியிலும் சிவனருள் கிடைக்கும்.

No comments:

Post a Comment