telepathygiridharbaba

telepathygiridharbaba
shirdisai thunai

Thursday, 10 October 2013

பாரதி வாழ்வு: சில காலக் குறிப்புகள்

பாரதி வாழ்வு: சில காலக் குறிப்புகள்

1882
டிசம்பர் - 11 சுப்பிரமணிய பாரதியார் பிறந்த நாள் (கார்த்திகைத் திங்கள்; மூல நட்சத்திரம்) தந்தை: திரு.சின்னசாமி ஐயர், அன்னை: திருமதி.இலட்சுமி அம்மாள். 'சுப்பையா' இது வீட்டிலே வழங்கிய பெயர்.
1887
அன்னையார் மறைவு
1889
தந்தையார் மறுமணம். 'மாற்றாந்தாய்' திருமதி. வள்ளியம்மாள், பாரதியை அன்புடன் பேணிய வளர்ப்புத் தாய்; தந்தையார் மறுமணத்தின்போதே பாரதிக்குப் பூணூல் அணியும் சடங்கு. தந்தையாரிடம் தொடக்கக் கல்வி.
1893
கவிதைத் திறமை கண்டு புலவர்கள் 'பாரதி' பட்டம் சூட்டினர்.
1894-97
நெல்லை, இந்துக் கல்லூரிப் பள்ளியில் (ஐந்தாம் பாரம் வரை) கல்வி.
1897
ஜுன் 15 திருமணம். கடையம் திரு.செல்லப்பா ஐயரின் மகளார் செல்லம்மாள் பாரதியின் வாழ்க்கைத் துணைவியார்.
1898
ஜுன்: தந்தையார் மறைவு. பாரதி, காசிப் பயணம். அத்தை திருமதி. குப்பம்மாள் ஆதரவு. காசி இந்துப் பல்கலைக் கழகத்தில் கல்வி. வடமொழி, இந்துஸ்தானி மொழிகளில் பயிற்சி, அலகாபாத் பல்கலைக் கழக நுழைவுத் தேர்வில் முதல்வர்.
1902
எட்டயபுரம் மன்னர் அழைப்பை ஏற்று எட்டயபுரம் திரும்பினார். சமஸ்தானத்தில் பணி.
1903
சமஸ்தானப் பணி விடுத்து, மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியப் பணி. மூன்று திங்களே இப்பணியில் இருந்தார். சோழவந்தான் அரசஞ் சண்முகனார் விட்டுச்சென்ற இடத்தில் பாரதியார் பணியாற்றினார் என்பது இதுவரை பலர் அறியாத செய்தி.
1904
'சுதேச மித்ரன்' உதவியாசியப் பணி. சென்னையில் பாரதியார்க்கு அறிமுகமானவர்களில் குறிக்கத்தக்கவர்கள்: ஜி.சுப்பிரமணிய ஐயர், சர்க்கரைச் செட்டியார், மண்டையம் எஸ்.என்.திருமலாச்சாரியார், டாக்டர் எம்.சி.நஞ்சுண்டராவ், ஜி.ஏ.நடேசன், வி.கிருஷ்ணசாமி ஐயர், திரு.வி.க. மூத்த மகள் தங்கம்மாள் பிறப்பு.
1905
வங்கப் பிரிவினையால் நாடு முழுவதிலும் தேசியக் கிளர்ச்சியில் பேரெழுச்சி.
1906
கல்கத்தாக் காங்கிரஸ் மாநாடு, தாதாபாய் நவுரோஜி தலைமையில் - சுதேசிப் பொருளே பயன்படுத்த வேண்டும், அயல்நாட்டுப் பொருள் புறக்கணிக்க (பகிஷ்கரிக்க)ப் படவேண்டும், தேசியக் கல்வித் திட்டம் வேண்டும் முதலிய கருத்துகளைத் தாங்கிய தீர்மானங்கள் கல்கத்தாக் காங்கிரசில்தான் நிறைவேறின. 'சுயராஜ்யம்' என்ற சொல்லும் அதன் வழிப்பட்ட கருத்தும் வேர் பாய்ச்சிய காலம் அது.
கல்கத்தாவிலிருந்து திரும்பும் போதுதான் சகோதரி நிவேதிதாவைச் சந்தித்து, ஞானாசிரியராகக் கொண்டார். ஆன்மிகம் தேசியம் ஆகிய துறைகளிலே ஏற்கனவே ஈடுபாடு கொண்டிருந்த பாரதிக்கு இந்தச் சந்திப்பு மிகவும் வேகத்தையும் ஆழ்ந்த ஈடுபாட்டையும் ஏற்படுத்திற்று. அவருடைய ஆளுமையின் தீவிர வளர்க்சிக்கு நிவேதிதையார் தொடர்பு பெருங்காரணம் என்பது மிகையாகாது.
1907
ஏப்ரல் 'இந்தியா' ஆசிரியப் பொறுப்பு - விபன சந்திரபாலர் சென்னை வருகை; பாரதியின் பெரும்பங்கு. 'பால பாரத' என்ற ஆங்கிலப் பத்திரிகையையும் பாரதி நடத்தினார்.
சூரத் காங்கிரஸ்-இயக்கத்தில் பிளவு - தமிழ்நாட்டுப் பிரதிநிதிகளில் பாரதி ஒருவர்; மற்றவர்கள் வ.உ.சிரம்பரம்பிள்ளை, சுரேந்திரநாத் ஆர்யா, வி.சர்க்கரைச் செட்டியார், வி.துரைசாமி ஐயர் - இவர்கள் திரகர் தலைமையில் இயங்கிய தீவிரவாதிகளாவர் - இந்தத் தீவிரவாதிகளில் லாஜபதிராய் குறிக்கத்தக்கவர்.
1908
ஜி.ஏ.நடேசன் வாயிலாகப் பாரதியாரை அறிமுகம் செய்துகொண்ட திரு.வி.கிருஷ்ணசாமி ஐயர் பாரதியாரின் சில பாடல்களை அச்சிட்டு வெளியிட உதவினார் - அப்போது அச்சானவற்றுள் 'எந்தையும் தாய்', 'ஜய பாரத' என்பவை சில. பாரதியாரே அவர் பாடல்களைப் பாடக் கேட்டுக் கிருஷ்ணசாமி ஐயர் உவகையுற்றுப் பாடல்களை வெளியிட முன் வந்தார். கிருஷ்ணசாமி ஐயருக்குப் பாரதியின் தீவிரவாதம் உடன்பாடு இல்லை; அவர் மிதவாதி ஆயினும், பாரதியின் கவிதைகளிலே நாட்டம் கொண்டார்.
பாரதியாரே தம் கவிதைத் தொகுப்பை (ஸ்வதேச கீதங்கள்) இந்த ஆண்டில்தான் வெளியிட்டார்.
வ.உ.சி., சுப்பிரமணிய சிவா வழக்கில் பாரதி சாட்சியம்
'இந்தியா' பத்திரிகை உரிமையாளர் கைது.
புதுச்சேரி சேர்தல் - குவளைக் கிருஷ்ணமாச்சாரியார் (குவளைக் கண்ணன்) சந்திப்பு - பிரிட்டிஷ் இந்தியாவில் இடர்ப் பாட்டுக்கு உள்ளான 'இந்தியா' புதுச்சேரியிலிருந்து மீண்டும் வெளிவரத் தொடங்கியது - 'விஜயா', 'சூர்யோதயம்' என்ற இதழ்களும் புதியனவாக தொடங்கப்பட்டன பாரதியாரைத் தலைவராகக் கொண்ட 'பால பாரத சங்கம்' தோன்றியது.
இரண்டாவது மகள் சகுந்தலை பிறப்பு - திருமதி செல்லம்மாளும் புதுவை வந்து சேர்தல்.
1909
ஸ்வதேச கீதங்கள் இரண்டாம் பாகம் 'ஜன்ம பூமி' என்ற பெயரில் வெளிவந்தது.
'இந்தியா' 'விஜயா' இரண்டு இதழ்களுக்கும் பிரிட்டிஷ் இந்தியாவில் தடை
1910
ஏப்ரல் தொடக்கத்தில் அரவிந்தர் புதுவை வருகை - பாரதி - அரவிந்தர் தொடர்பு - இருவரும் வேத ஆய்வில் ஈடுபட்டனர் - அரவிந்தர் நடத்திய ஆர்ய (ARYA) இதழில் பாரதியார் எழுதினார்.

இதே ஆண்டு நவம்பரில் ஒரு கவிதைத் தொகுதியைப் பாரதி வெளியிட்டார். "இதன் இயல்பு தன் கூற்றெனப்படும். அதாவது, கதாநாயகன் தன் சரிதையைத் தான் நேராகவே சொல்லும் நடை" என்ற முகவுரைக் குறிப்போது 'கனவு' என்ற பெயரில் வெளிவந்தது அந்த நூல்; பின்னே 'ஸவசரிதை'யாக வந்ததும் அதுவே.
'கர்மயோகி' இதழ் வேளிவரத் தொடங்கியது. (இரண்டாண்டுகளே இந்தப் பத்திரிகை நடந்தது)
வ.வே.சு.ஐயர் புதுவை சேர்தல்.
1911
"ஆஷ் துரையின் கொலையால் ஒற்றர்களின் அட்டகாசம் அதிகரித்தது. தேசபக்தர்களைப் புதுவையிலிருந்து வெளியேற்றுவதற்கு அவர்கள் செய்த சதி பலிக்கவில்லை" (அரசாங்கம் வெளியீடு)
பாரதிக்கு மெய்க்காப்பளர்போலத் தொண்டுபுரிந்த அம்மாகண்ணு அம்மாளும் அவளுடைய புதல்வர்களான வேணுகோபால், தேவசிகாமணி ஆகியோரும் பாரதிக்குக் கிடைத்தற்கரிய உயர்த் தொண்டர்கள் - புதுவையில் பாரதிக்கு நெருக்கமானவர்கள் கனக சுப்புரத்தினம் என்ற பாரதிதாசன், வ.ரா. (மசாமி ஐயங்கார்), சங்கர கிருஷ்ணன், தோத்தாத்திரி, ஹரி ஹர சர்மா, குவளைக் கண்ணன் போன்ற சீடர்கள்; மற்றும், அரவிந்தர், வ.வே.சு.ஐயர், பரலி.சு.நெல்லையப்பர், சிவக்கொழுந்து நாயக்கர், வாத்தியார் சுப்பிரமணிய ஐயர், சங்கரச் செட்டியார், பொன்னி முருகேசம் பிள்ளை, கிருஷ்ணசாமிப் பிள்ளை, கிருஷ்ணசாமிச் செட்டியார், மேலும் பல பெரியோர்கள்.
'சின்னச் சங்கரன் கதை'யும் மற்றம் சில கையெழுத்துப் படிகளும் ஒற்றர்களிடம் சிக்கி அழிந்துபோயின. நண்பர்களின் தூண்டுதலால் 'சின்னச் சங்கரன் கதை'யை மட்டும் புதிதாக எழுதினார்; ஆனால் ஆறு இயல்கள் மட்டுமே உருயின. அந்த அளவில் 'ஞானபாநு' (சுப்பிரமணிய சிவா நடத்திய இதழ்) வெளியிட்டது.

1914
நேடாலில் பாரதியின் 'மாதா மணிவாசகம்' வெளியாயிற்று
1917
கண்ணன் பாட்டு (முதற் பதிப்பு); பரலி சு.நெல்லையப்பர் வெளியிட்டார்.

1918
பரலி சு.நெல்லையப்பர் பாரதியின் 'நாட்டுப் பாட்டு' (முதற் பதிப்பு) வெளியிட்டார்.
நவம்பரில் புதுவையை விட்டுப் புறப்பட்ட பாரதியைக் கடலூரில் கைது செய்தனர். சென்னை வழக்கறிஞர் திரு.துரைசாமி ஐயர், 'சுதேசசமித்திரன்' ஆசிரியர் திரு.ஏ.ரங்கசாமி ஐயங்கார் சி.பி.இராமசாமி ஐயர் ஆகியோர் முயற்சியால் விடுதலை பெற்றார்.
1919
கடையம் (திருமதி செல்லம்மாள் ஊர்), எட்டயபுரம் - இரண்டு ஊர்களிலும் தங்கி வந்தார். இடையில் திருவனந்தபுரத்தில் நடந்த ஒரு திருமணத்துககுப் போனபோது திரு.கே.ஜி.சேஷையரின் பழக்கம் ஏற்பட்டது.
1920
மீண்டும் 'சுதேசமித்திரன்' உதவியாளரானார். புதுவையிலிருந்து வ.வே.சு.ஐயரும் பல நண்பர்களும் சென்னை வந்து சேர்ந்தனர்.

காந்தியடிகளைக் கண்டு, சில மணித்துளிகள் பேசும் வாய்ப்பினைப் பாரதியார் பெற்றார். நேரம் சிறிதளவேயாயினும் இரு பெருமக்களும் ஒருவரை யொருவர் இனங்கண்டு கொண்ட அற்புதமான சந்திப்பு.
1921
திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி கோயில் யானை பாரதியைத் தூக்கி எறிந்தது. செப்டம்பர் மாதம் 11ஆம் நாள் பாரதி மறைவு.

No comments:

Post a Comment