telepathygiridharbaba

telepathygiridharbaba
shirdisai thunai

Monday, 28 October 2013

சிவன் நிச்சயம் காப்பாற்றுவார்

இறைவனின் அருள் அலைகள் அபரிமிதமாக வெளிப்படும் ஒரு அதிசய சில ஆலயங்களுக்கு செல்லும்போது , நம்மை அறியாமல் பூரண மன நிம்மதி கிடைக்கும். பூர்வ ஜென்ம தொடர்பு அந்த ஆலயங்களுக்கும் , நமக்கும் இருக்கும் என்கிற எண்ணம் மனதில் மெல்ல அரும்பும். , புராதன காலத்தில் இருந்தே பெரும் புகழுடன் , அருள் பாலித்துக் கொண்டு இருந்த ஒரு சில ஆலயங்கள் - இன்று மக்கள் மத்தியில் அதிகம் அறியப்படுவது இல்லை. ஆனால் , அந்த ஆலயங்களில் இன்றும் அருள் அலைகள் அபரிமிதமாக வெளிப்படுகின்றன.

அஷ்ட திக் பாலகர்களில் ஒருவரான - அக்னியும், நவ கிரகங்களில் நீதி தேவனான - சனி பகவானும் , வழிபட்ட பழம்பெரும் ஆலயமான திருக்கொள்ளிக்காடு ஆலயம் பற்றிய தகவல்களை , நமது வாசகர்களிடம் பகிர்ந்து கொள்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

அன்பர் ஒருவர், தனது கடன் இந்த ஜென்மத்தில் முடியாது என்று , எல்லா விதமான முயற்சி , பரிகாரம் என்று சகலமும் செய்துவிட்டு , வெறுத்துப் போய் , விரக்தியின் விளிம்பில் , குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ளலாமா என்று விபரீத முடிவுக்கும் சென்றவர். அந்த நிலையில் எதேச்சையாக திருவொற்றியூர் - வடிவுடை அம்மன் ஆலயம் அருகில் , அவர் என்னை சந்திக்க , என்னுடைய ஆலோசனையின் பேரில் இந்த ஆலயம் சென்று வந்தார். " 48 நாட்கள் - உடல் , மன சுத்தியோடு , கடைசி ஒன்பது நாட்கள் தினம் ஒரு வேளை மட்டுமே உணவு உண்டு , விரதம் மேற்கொண்டு - இந்த ஆலயம் சென்று அபிஷேகம் செய்து வாருங்கள் . உங்களை அந்த சிவன் நிச்சயம் காப்பாற்றுவார்" என்று நம்பிக்கையூட்டினேன்.

இது தான் சார் , என்னுடைய கடைசி முயற்சி . நீங்கள் சொல்லியபடி இன்னும் ஒரு வருடத்தில் , எனக்கு விடிவு இல்லை என்றால், நான் வாழ்வதிலே அர்த்தமில்லை என்று சொல்லிச் சென்றவர்.

சென்று வந்த ஆறே மாதத்தில் , அவரது ஒட்டு மொத்த கடனும் அடைந்து , பூரிப்புடன் இருக்கிறார். இப்போது , அவரை பார்க்கும்போது - அவர் முகத்தில் தெரியும் சந்தோசம் , மனதுக்கு நிம்மதியாக இருக்கிறது.

அதனால் தான், அடிக்கடி நான் சொல்வது உண்டு. சில ஆலயங்களுக்கு நாம் செல்லும்போது , நமது கர்மக்கணக்கு நேராகிறது.

ஏழரை சனி , அஷ்டம சனி நடப்பவர்களும் , மகர , கும்ப - ராசி , லக்கினங்களில் பிறந்தவர்களுக்கும் , சிம்ம ராசி , இலக்கின நேயர்களும் - இந்த ஆலயம், அவசியம் ஒருமுறை வந்து , வழிபட்டுச் செல்லுங்கள்.
உங்கள் வாழ்வில் பெரிய திருப்புமுனை ஏற்படும்.



ஆலயத்தின் பெருமைகளையும், மகிமைகளையும் வார்த்தைகளில் விவரிக்க முடியாது. பழம் பெரும் அரசர்கள், இறைவனின் மகிமையை பரிபூரணமாக உணர்ந்து , அவரை பூஜித்து இருக்கின்றனர். ஆயிரம் வருடங்களாக , பூஜை செய்யப்பட்ட இறை சந்நிதானத்தில் - அருள் அலைகள் அபரிமிதமாக நிறைந்து இருக்கும். ராகு கால நேரங்களில் இதைப் போன்ற ஆலயங்களில் - அம்மன் சந்நிதி முன்பு இருக்க வாய்ப்பு கிடைப்பவர்கள், பாக்கியம் செய்தவர்கள்.


திருக்கொள்ளிக்காடு! - திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப் பூண்டி வட்டத்தில், திருவாரூர் - திருத்துறைப்பூண்டி நெடுஞ்சாலையில் உள்ள திருநெல்லிக்காவிலிருந்து தெங்கூர், கீராலத்தூர் வழியாக இத்தலத்தை அடையலாம். சனி பகவானின் தோஷம் நீக்கும் தலங்கள் வரிசையில் இது தலையாயது.

சுவாமிபெயர் - அக்கினீசுவரர், தேவியார் - பஞ்சினுமெல்லடியம்மை.

இத்திருக்கோயிலை வலம் வந்து சனி பகவானை வழிபட்டுத் திருக்கொள்ளி அக்னீஸ்வரர் திருமுன்பு வீழ்ந்து வணங்குபவர்களின் சனி தோஷத்தைத் தன் ஜோதியால் எரித்துச் சாம்பலாக மாற்றுபவன் அவ்விறைவன் என்பதைத் தொன்மை நூல்கள் கூறுகின்றன.

1,500 ஆண்டுகளுக்கும் முற்பட்ட இத்திருக்கோயிலை மாமன்னன் முதலாம் இராஜராஜ சோழன் கற்கோயிலாகப் புதுப்பித்தான். இக்கோயிலில் இராஜராஜ சோழனின் கல்வெட்டுகள், முதலாம் இராஜேந்திர சோழனின் கல்வெட்டு, அவனது மகன் முதல் குலோத்துங்க சோழனின் கல்வெட்டுகள், பிற சோழ மன்னர்களின் கல்வெட்டுகள் உள்ளன.


சோழ மன்னன் ஒருவனுக்கு மிகக் கடுமையான சனி தோஷம் ஏற்படவே, எங்கும் அவனுக்கு அமைதி கிட்டாமையால் கடைசியாக இங்கு வந்து சனி பகவானைப் பூஜித்து அக்னீஸ்வரர், மிருதுபாதநாயகி ஆகியோர் திருவடிகளை வணங்கி சிவஜோதியின் காரணமாகச் சனி தோஷம் முழுவதும் நீங்க மனமகிழ்வடைந்தான் என்பது தலபுராணம்.சோழ மன்னர்கள் காலத்தில் இத்தலம் முக்கியத்துவம் பெற்று விளங்கியது.

இத்திருக்கோயிலின் தலமரம் வன்னி. தீர்த்தக் குளம் கோயிலுக்கு எதிரே உள்ளது. இராஜகோபுரம் இல்லை. முகப்பு வாயில் வழியாக உள்ளே சென்றால் பலி பீடமும் நந்தியும்

No comments:

Post a Comment