சுண்ணாம்புச் சத்துள்ள ஏதும் முப்பூ அல்ல என்று முப்பூ வழலைச் சுண்ணத்தில் அகஸ்தியர் சொல்லி இருப்பது கவனிக்கத் தக்கது.சாறிப் போவார்கள் சவடுகள் வண்ணார்கள் என்று சொன்னதிலிருந்து சவட்டுப்பான உவருப்பை (பூநீறை ) முப்பு என்றெண்ணி பலர் களர் நிலத்தில் விளைந்துள்ள உப்பை முப்பு என்றெண்ணி அவ்வழியே செல்பவர்கள் வண்ணார்கள் என்கிறார்.
சில மதி கெட்ட வீணர்கள் தலைச்சன் பிள்ளை மண்டை ஓடு என்று சொன்னதை தலைப்பிள்ளைகளின் மண்டை ஓடு என்றெண்ணி , புதைக்கப்பட்ட சிறு பிறந்த குழந்தைகளில் தலைச்சன் பிள்ளைகளின் மண்டை ஓட்டை , எடுத்து அதைப் புடம் போட்டு அதை வைத்து ஆராய்ச்சி செய்து வருகிறார்கள் . இன்னும் சிலர் உயிரோடு இருக்கும் தலைச்சன் பிள்ளைகளைக் கடத்தி உயிரோடு காளிக்குப் பலி கொடுத்து அந்த தலைச்சன் பிள்ளை மண்டை ஓட்டை எடுத்து மை , மற்றும் அந்த ஓட்டை பற்பம் செய்து அதை முப்பு என்று ஆராய்ச்சி செய்பவர்களும் பெரும் பாவம் செய்து வருகிறார்கள் .
தலைச்சன் பிள்ளை மண்டையோட்டை படாத் பாடு பட்டு கொண்டு வந்து உரலில் போட்டு இடித்து தண்ணீரில் கலக்கி சூரிய ஒளியில் காய்ச்சி எடுத்து அதை முப்பு என்று சொல்லித் திரிபவர்கள் பலர் கொடும் பாவம் செய்து வருகிறார்கள். அதற்கான் விடயங்களை கீழே காணுங்கள்.முப்பு என்பது மண்டையோடு அல்ல என்று குறிப்பிட்டிருப்பதிலிருந்து இது தெளிவாகும்.
நன்றி முப்பூ குரு ,ஆசிரியர், நீதியரசர் திரு பலராமையா அவர்கள்
தலைச்சன் பிள்ளை மண்டையோடு என்பது என்ன என்று இதோ கீழே கொடுத்துள்ளதை கவனியுங்கள் .யாம் இப்போது வெளிப்படுத்தப் புகுந்துள்ளது பல்லாண்டுகளாக ரகசியமாக வைக்கப்பட்டுள்ள பல சித்த ரகசியங்களை வெளிப்படுத்தும் முயற்சி இது.
இந்த விடயங்களை வெளிப்படுத்தும் போது , இந்த அளவிற்கு மன முதிர்ச்சி அடையாத சிலர் இந்த விடயங்களை புரியாததோடு , வாய்க்கு வந்ததையெல்லாம் கருத்துரை என்ற பெயரில் எழுதி வருகின்றனர்.அவற்றால் எமக்கோ உங்களுக்கோ மற்றவர்களுக்கோ பயன் இல்லை. இனி இவற்றை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளுகிறேன்.எழுதினாலும் பிரசுரிக்க மாட்டடோம் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்.
கும்ப கோணம் இப்போது ஒரு சம்பவத்தைக் குறிப்பிட விரும்புகிறேன் . சித்தர் பாடல்களை ஒரு அச்சகத்தில் பதிப்பிட முயற்சி மேற்கொண்டிருப்பதை தெரிந்து கொண்ட சில சாதாரண அறிவிலிகள், நாத்திக வாதப் புத்தகம் அச்சிடுகிறார்கள் என்று கருதி அந்த அச்சகத்தை சிதைத்து , அடித்து நொறுக்கி எறிந்தனர் . இப்படிப்பட்ட அறிவிலிகளும் இந்த ஞானம் சிறந்த தமிழ் நாட்டில் இருக்கிறார்கள் .
இப்போது விடயத்துக்கு வருவோம் . கீழே கொடுத்திருப்பதுதான் தலைச்சன் பிள்ளை மண்டை ஓடு .அது மண்டை ஓடு போல காட்சி தருகிறதா???? இதுதான் சிவனின் கபாலம் என்றழைக்கப்படுவதும். இதை சுண்ணமாக்கினால் அதுவே கபாலச் சுண்ணம். இது பல ரச வாத வேதி வினைகளுக்கு பயனாகும்.
இன்னொரு கல் மூளை போல தோற்றம் அளிக்கும் இதுதான் தலைச்சன் பிள்ளை மூளை .இதை சுண்ணம் செய்வதுதான் தலைச்சன் பிள்ளை மூளைச் சுண்ணம்.இதுவும் பல ரச வாத வேதி வினைகளுக்கு பயனாகும்.
மேலும் தலைச்சன் பிள்ளை மண்டை ஓடு பற்றியும் , தலைச்சன் பிள்ளை மூளை பற்றியும் அவற்றை சுண்ணம் செய்தால் என்ன செய்யலாம்.
காணொளி விரைவில்
No comments:
Post a Comment