telepathygiridharbaba

telepathygiridharbaba
shirdisai thunai

Monday, 28 July 2014

Brahma Gayatri Mantra


OM BRAHMA DEVAAYA NAMO NAMAHA
Sri Brahma Devar DarisanamOM BRAHMA DEVAAYA NAMO NAMAHA. Lord Brahma Mantras : Chanting the Brahma Mantra helps us to fulfill the four aims of life righteousness, Prosperity, Pleasures and Liberation. Brahma Mantras are also good for those who wish to gain knowledge. Given below are the Mantras of Lord Brahma. Brahma Gayatri Mantra Om Chathur mukhaya VidmaheHamasaroodaya DheemaheThanno Brahma Prachodayath. Om Vedathmanaya vidmahe,Hiranya Garbhaya Dheemahi,Thanno Brahma prachodayath. Brahma Bija Mantra "Aum Satchit Ekam Brahma" “Om Eim Hrim Shrim Klim Sauh Satchid Ekam Brahma”

Sunday, 13 April 2014

மகா ஸ்வாமிகளின் ஆசி


கோயில் நன்னா வரும்!’ — மகா ஸ்வாமிகளின் ஆசி காஞ்சி மகா பெரியவரது கருணை கடாட்சத்தில் திளைக்கச் செய்த- எனது வாழ்வில் நிகழ்ந்த ஓர் அற்புத சம்பவம்: சுமார் 45 ஆண்டுகளுக்கு முன், நாங்கள் குடும்பத்துடன் சென்னை பெரம்பூரில் உள்ள திரு.வி.க. நகரில் வசித்து வந்தோம். அந்தப் பகுதியில் சிம்சன் குரூப், பி-அண்ட்-சி மில் மற்றும் அரசு ஊழியர்கள் குடியிருந்தனர். எங்களுக்கென குடியிருப்போர் சங்கம் ஒன்று இருந்தது. எனினும், ஸத் சங்கம் ஒன்று ஆரம்பிக்க விரும்பினோம். ஸத் ஸங்கம் துக்கம் ப்ரஸயமதி… அதாவது, சாதுக்கள் மற்றும் நல்லவர்கள் கூடும் சங்கம், துக்கத்தை தணிக்கும் என்பர். அதற்கேற்ப நாங்கள் துவக்கிய ஸத் சங்கம் மூலம் ஏழை மாணவர்களுக்கும், துன்பத்தில் உழல்பவர்களுக்கும் சிறு சிறு உதவிகள் செய்து வந்தோம். தவிர, சனிக்கிழமைகளில் அன்பர்கள் சிலரது இல்லங்களில் அனுமன் திருவுருவப் படத்தை வைத்து, நாமசங்கீர்த்தனம் செய்வதும் வழக்கம். இந்த நிலையில், அப்போது திரு.வி.க. சிலை அருகே இருந்த காலி இடத்தில், விநாயகர் கோயில் கட்ட வேண்டும் என்று எங்களில் சிலர் விரும்பினர். அதற்காக குழு அமைத்து, நிதி திரட்ட தீர்மானித்தோம். குழுவில், நான் உட்பட… சுந்தரராஜன், கிருஷ்ணமூர்த்தி ஐயர், னிவாசன், ரங்காச்சாரி, மணி, எத்திராஜ், தரணிபதி, கோதண்டபாணி, பாளே கெட்டே பத்மனாப ராவ் என்று பலரும் இடம் பெற்றோம். நிதி திரட்டும் பணி துவங்கியது. முன்னதாக காலியிடத்தில், குடிசை அமைத்து உள்ளே விநாயகரை வைத்து வழிபட ஆரம்பித்தோம். நாட்கள் கழிந்தன. போதுமான நிதி கிடைக்க வில்லை. எங்கள் சேர்மனும், சிம்சன் குரூப் அதிபருமான அனந்தராம கிருஷ்ணனை சந்தித்து ஆலய திருப்பணி குறித்து விளக்கினோம். அவர், ஆயிரம் ரூபாய் நிதியுதவி செய்தார். அந்தக் காலத்தில் இது பெரிய தொகை. அனந்த ராம கிருஷ்ணன் பணம் கொடுத்த நேரம், நிதி மளமளவென்று சேர்ந்தது. எனினும், கோயில் கட்டுவதற்கு அது போதுமானதாக இல்லை. குழுவில் இருந்த அன்பர் ஒருவர், ”காஞ்சி புரம் போய் மகா ஸ்வாமிகளை தரிசிப்போம். அவர் அனுக்கிரகம் பண்ணி ஆசிர்வதித் தால், பெரிய பத்திரிகைகளில் செய்தி வெளியிட்டு நிதி திரட்டலாமே!” என்றார். எங்களுக்கும் அது சரி என்றே பட்டது. காஞ்சி மடத்தை தொடர்பு கொண்டோம். ”பெரியவா வட தேச யாத்திரை போயிருக்கா. மடத்துக்கு எப்போ திரும்புவாள்னு தெரியலே. ஒரு வாரம் கழிச்சு போன் பண்ணுங்கோ… பெரியவாகிட்டேருந்து சேதி வந்தா சொல்றோம்!” என்றனர். தொலைதொடர்பு வசதிகள் விரிவடையாத காலம் அது. அதையும் மீறி, காஞ்சி மடத்துக்கு அவ்வப்போது சிரமப்பட்டு போன் போட்டு, கனெக்ஷன் பெற்று விசாரித்துக் கொண்டிருந் தோம். மகா பெரியவாள், சென்னை வருவதாக எதுவும் தகவல் இல்லை. அன்று புதன்கிழமை. இரவு உறக்கத்தில் ஒரு கனவு: மகா ஸ்வாமிகள் நெல்லூரில் இருந்து புறப்பட்டு பெரம்பூர் வழியாக வந்து, ராவ் பகதூர் கலவல கண்ணன் செட்டியார் பள்ளி யில் முகாமிட்டிருப்பதாகத் தகவல் வர… நாங்கள் ஓடோடிச் சென்று பெரியவாளை தரிசித்து ஆசிர்வாதம் வாங்கி வருகிறோம்! கனவு கலைந்தது. எனக்குள் சந்தோஷம். காரணம்- விடிந்தால் வியாழக் கிழமை- குரு வாரம். கனவில் குரு தரிசனம்! விடிந்ததும், கனவைப் பற்றி நண்பர்களிடம் கூறினேன். அவர்கள், ”ராத்திரி பூரா அதையே நெனைச்சு படுத்திருப்பே. அதான் இப்படி ஒரு கனவு” என்று சிரித்தனர். அப்போது, பதற்றமாக ஓடி வந்த ரங்காச்சாரி, ”அண்ணா… ராமச்சந்திரனோட கனவு பலிச்சுடுத்து. நெல்லூர்லேருந்து வந்த பெரி யவா, நேத்து நடு ராத்திரி கலவல கண்ணன் செட்டியார் ஸ்கூல்ல வந்து தங்கியிருக்கா ராம்!” என்றார். எனக்கு மெய் சிலிர்த்தது! எல்லோரும் குளித்து விட்டு உடனே கிளம்பினோம். பள்ளிக்குச் சென்றதும் ஓர் இன்ப அதிர்ச்சி! கனவில் நான் கண்டது போலவே அதே இடத்தில்… அதே புன்னகையுடன் வீற்றிருந்தது அந்த நடமாடும் தெய்வம்! சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்தோம். அவரிடம், ஸத் ஸங்கம்… விநாயகர் ஆலயம் எழுப்புவது… அனந்த ராமகிருஷ்ணன் பணம் கொடுத்தது… என எல்லாவற்றையும் விளக்கி, ஆசி கேட்டுப் பணிந்தோம். மகா பெரியவாள், ”கோயில் நன்னா வரும். சாயந்தரம் அந்த இடத்துக்கு வரோம்!” என்று ஆசிர்வதித்தார். அன்று மாலையில், திரு.வி.க. நகர் விநாயகர் ஆலயத்துக்கு, புதுப் பெரியவாளான ஜெயேந்திரர் வருகிறார் என்றும், அவரை வரவேற்கும் முறை பற்றி யும் மடத்து ஊழியர் ஒருவர் தெரிவித்தார். எங்களுக்குக் கை- கால் ஓடவில்லை. ‘புதுப் பெரியவாளை உரிய மரியாதைகளுடன் வரவேற்க வேண்டும். சங்கத்தில் நயா பைசா இல்லை. பணத்துக்கு எங்கே போவது?’ என்ற கவலைத் தொற்றிக் கொண்டது. ஆனால், ஸ்வாமிகள் நம்மூருக்கு வருகிறார் என்று தெரிந்ததும் மக்கள் பொருளுதவி செய்தனர். இரவு சுமார் ஏழு மணிக்கு புதுப் பெரியவாள் வந்தார். நாகஸ்வர ஒலி மற்றும் வேத கோஷங்களுடன் ‘ஹரஹர சங்கர – ஜெய ஜெய சங்கர’ என்ற பக்தர் களது கோஷமும் சேர்ந்து, திரு.வி.க. நகரையே சொர்க்கபுரியாக மாற்றியது. புதுப் பெரியவாள் குடிசையில் இருந்த விநாயகரை வணங்கி விட்டு, மக்களை ஆசிர்வதித்தார். கிளம்பும்போது, ”நாளைக்கு முகாமுக்கு வாங்கோ!” என்றார். அவ்வாறே சென்றோம். மகா ஸ்வாமிகளது அனுக்கிரகத்தால், ஆசி பெற்றுத் திரும்பினோம். பிறகு, பத்திரிகைகளில் ஆசார்யாளின் அனுக் கிரகத்துடன் கோயில் கட்ட நிதி உதவி கேட்டு, விளம்பரம் வெளி யானது. நிதியும் குவிந்தது. கம்பீரமாக கோயில் எழும்பியது. வாரியார் ஸ்வாமிகள் முன்னிலையில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தது. ‘கோயில் நன்னா வரும்’ என்ற மகா பெரியவாளின் வாக்கு பலித்தது. கோயிலில் அப்போது விநாயகரை மட்டுமே பிரதிஷ்டை செய்திருந்தோம். பின்னாளில் ஆஞ்சநேயர், ஐயப்பன், நவக்கிரகங்கள் என்று பெரிய கோயிலாகி விட்டது. நான், திரு.வி.க. நகரில் இருந்து இடம் மாறி பல ஆண்டுகள் ஆகிவிட்டன. எப்போதாவது இந்தக் கோயிலைப் பார்க்க நேரிடும்போது, மகா பெரியவாளின் நினைவு வந்து மனம் குதூகலமாகும்! - பா.சி. இராமச்சந்திரன், சென்னை-19 படங்கள்: ம. அமுதன் Courtesy: http://balhanuman.wordpress.com

Tuesday, 18 March 2014

மடிசார், பஞ்சகச்சம்


மடிசார், பஞ்சகச்சம் --------------------------- பூஜை, சுப, அசுப விசேஷங்களுக்கு மடிசார், பஞ்ச கச்சம் அத்யாவஸ்யமான ஒரு உடை. இன்னும் சொல்லப்போனால், பிரேதத்துக்கே பஞ்ச கச்சம், மடிசார் கட்டித்தான் சம்ஸ்காரம் செய்ய வேண்டும் என்ற விதி இருக்கிறதாகக் கேள்விப்பட்டேன். நான் யூகித்தவரை இங்கு எழுதுகிறேன், சான்றோர்கள் இன்னும் விபரம் தெரிவியுங்கள், தவறிருந்தால் திருத்துங்கள் பஞ்ச கச்சம் என்பது - பஞ்ச பூதங்களைக் குறிக்கிறது. நாம் இந்த பூதங்களால் ஆன உடல் என்பதால் இந்த அடையாளம். விபூதி அணிவதும் நாம் திரும்ப இந்த பஞ்ச பூதங்களுக்கு இரையாகி பிறவி வேண்டாம் என்று இறை சக்தியை வேண்டுதல் தான். கேரளத்தில் இந்த உடை விஷயத்தில் மாறுபடுகின்றனர் என்று கேள்விப்பட்டேன் . அவர்கள் தான் இதை விளக்கவேண்டும். ஆனால் சாஸ்திர ரீதியாய் பூஜை, சுப, அசுப விசேஷங்களுக்கு பஞ்ச கச்சம் அத்யாவஸ்யமான ஒரு உடை அது தான் நடைமுறை என்று நினைக்கிறேன். நண்பர்கள் இன்னும் விபரம் தெரிவிக்குமாறு விண்ணப்பிக்கிறேன் .

Monday, 10 March 2014

சூரிய புராணம் --“அருணன் இந்திரன் திசை அணுகினன்”


வசிஷ்டர் உரைத்த வரலாறு : இராமன் உள்ளிட்ட சூரியவம்சத்து அரசர்களுக்குக் குலகுருவாக விளங்கியவர் வசிஷ்டர். பிற்காலத்தில், ஒரு சமயம் பிருஹத்பலன் என்ற சூரியவம்ச அரசன் தன் குலகுரு வசிஷ்டரைக் காண அவருடைய ஆச்ரமத்திற்கு வந்தான். அனைத்து நலன்களையும் அருள வல்லவரான தெய்வத்தைப் பற்றி, தான் அறிய விரும்புவதாக பிருஹத்பலன் வசிஷ்டரிடம் கூறினான். சக்தி வாய்ந்த தனது கதிர்களால் உலகத்தை விழிப்படையச் செய்து இயக்குகின்ற சூரியனே கண்ணால் காணத்தக்க தெய்வம் என்று வசிஷ்டர் உரைத்தார். சகல வல்லமை படைத்த சூரியனை வழிபட்டு இகபரசுகங்கள் அனைத்தையும் அடையலாம் என்றும் வசிஷ்டர் பிருஹத்பலனுக்குக் கூறினார். “குருநாதரே! சுடர்க் கடவுள் சூரியனுக்கு முதலில் எங்குத் திருக்கோவில் தோன்றியது? நான் அவரை எந்தத் தலத்தில் வழிபட்டு நலன்களை எய்தலாம்? அது குறித்த விவரங்களைத் தாங்கள் விளக்கியருள வேண்டும்!” என்று பிருஹத்பலன் வேண்டினான். “சந்திரபாகா என்ற நதியின் கரையில் சாம்பபுரம் என்ற நகரம் உள்ளது. ஸ்ரீகிருஷ்ணரின் புத்திரர்களில் ஒருவனான சாம்பன் என்பவனே சூரியபகவானுக்குத் திருக்கோவில் எழுப்பியவன் ஆவான். அத்திருத்தலத்தில் சூரியன் பன்னிரு வடிவங்களுடன் அருள் பாலிக்கிறார்” என்று வசிஷ்டர் விவரிக்கத் தொடங்கினார். அழகு-ஆணவம்-அவலம் : ஜாம்பவானின் மகள் ஜாம்பவதி என்பவளை, கிருஷ்ணர் திருமணம் செய்து கொண்டிருந்தார். ஜாம்பவதி பெற்றெடுத்த மகனே சாம்பன். அவன் காண்பவரைக் கவர்ந்திழுக்கும் ஆணழகனாக விளங்கினான். அதனால், அவனிடம் ஆணவம் குடிகொண்டது. ஸ்ரீகிருஷ்ணரின் மகன் என்ற பெருமையும் அவனுடைய ஆணவத்தை அதிகமாக்கியது. நாரத முனிவர் கிருஷ்ணரைக் காணத் துவாரகைக்கு வந்தார். பிரத்யும்னன் முதலான கிருஷ்ணகுமாரர்கள் அனைவரும் நாரதரை வணங்கி வரவேற்றனர். ஆணவத்தின் உச்சத்தில் இருந்த சாம்பன் மட்டும் நாரதரை வணங்காமல் அலட்சியமாக அமர்ந்திருந்தான். உரிய நேரத்தில் சாம்பனுக்குப் பாடம் புகட்டலாம் என்று கருதிய நாரதர் அப்போது வாளாவிருந்தார். உரிய நேரம் வந்தது. ஒரு தடாகத்தில் சாம்பன் பல பெண்களுடன் நீர் விளையாட்டில் திளைத்திருந்தான். சாம்பனின் அழகில் ஈடுபாடு கொண்ட அப்பெண்கள் கிருஷ்ணரையும் அலட்சியம் செய்தனர். அதனால், வெகுண்ட கிருஷ்ணர் சாம்பனைத் தன் மகன் என்றும் பாராமல் கடுமையாகச் சபித்துவிட்டார். “அழகால் ஆணவம் கொண்ட சாம்பனே! உனக்குத் தொழுநோய் உண்டாகட்டும்!” என்று சபித்துவிட்டார் கிருஷ்ணர். அவ்வாறே, சாம்பனைத் தொழுநோய் பற்றிக் கொண்டது. மக்கள் அவனைக் காண்பதைத் தவிர்த்தனர். சாம்பன் மற்றவர் கண்ணில் படாமல் தனிமையில் வாழ்ந்து வந்தான். தன் மகனைக் கோபத்தினால் சபித்து விட்ட கிருஷ்ணர் அது குறித்து வருந்தினார். சாம்பன் நாரதரை அவமதித்ததன் விளைவாகவே அனைத்தும் நிகழ்ந்தன என்பதை உணர்ந்த கிருஷ்ணர் சாம்பனிடம் சென்று ஆறுதல் கூறினார். நாரதரை அணுகி உரிய சாபவிமோசனம் பெறவும் அறிவுறுத்தினார். நாரதரின் வருகைக்காகக் காத்திருந்தான் சாம்பன். அடுத்த முறை நாரதர் துவாரகைக்கு வந்தார். அப்போது சாம்பன் அவரிடம் மிகவும் மரியாதையாக நடந்து கொண்டான். நாரதரைப் பணிவுடன் வணங்கிய சாம்பன் தொழுநோயிலிருந்து விடுபடும் வழியைக் கூறியருள வேண்டினான். நாரதர் தமது பயணத்தின் பொழுது, சூரியனின் உலகத்தைக் கண்டதாகவும், அங்கு சூரியன் அனைத்துத் தேவர்களாலும் வணங்கப்படும் சிறப்புடன் வீற்றிருந்ததாகவும் கூறினார். சாம்பன் சூரியனைப் பற்றிய முழு விவரங்களையும் அறிய வேண்டும் என்ற ஆவல் கொண்டான். பிரளயம் என்ற பெருவூழி முடிந்து மீண்டும் உலகங்கள் தோன்றிய விவரங்களை நாரதர் சாம்பனுக்கு முதலில் விளக்கினார். நவபிரஜாபதிகளில் ஒருவராகிய தட்சர்-அதிதிதேவி தம்பதி ஒளிவடிவிலான ஓர் அண்டத்தைப் பெற்றெடுத்தனர் என்றும், அதுவே சூரியன் என்றும் உரைத்தார் நாரதர். சூரியபகவான் தனது கதிர்களால் ஆகாயம், பூமி, நீர் ஆகியவற்றை வெப்பமடையச் செய்கிறார். சூரியபகவான் தனது கதிர்களால் கடல் முதலான நீர்நிலைகளிலுள்ள நீரைக் கிரகித்துக் கொள்கிறார். சூரியன் தோன்றி, சூரியக் குடும்பத்திலுள்ள உலகங்கள் தோன்றி, அவற்றில் உயிர்களும் தோன்றின. பின்னர் சுடர்க்கடவுளாகிய சூரியன் பன்னிரண்டு வடிவங்களை எடுத்துக்கொண்டு, பன்னிரண்டு வகையான செயல்களைப் புரிகிறான். அப்பன்னிருவரும் 'துவாதச ஆதித்யர்கள்' என்று அழைக்கப்பட்டனர். துவாதசம்-பன்னிரண்டு, ஆதித்யர்கள்-சூரியர்கள். 1. சூரியனே இந்திரன் என்ற பெயரிலிருந்து வானத்து தேவர்களைக் காத்து வருகிறான். 2. தாதா என்ற வடிவத்திலிருந்து படைத்தல் தொழிலைச் செய்கிறான். 3. பர்ஜன்யன் என்ற பெயருடன் இருந்து சூரியன் உலகத்தில் மழையைப் பெய்விக்கிறான். 4. பூஷா என்ற பெயருடன் இருந்து உணவுப் பொருள்களை விளைவித்தும், உயிர்களுக்கு ஊட்டச்சத்துகளை அளித்தும் உதவுகிறான். 5. துவஷ்டா என்ற பெயருடன் மூலிகைகளின் சக்தியாக இருந்து மக்களின் நோய்களைப் போக்கி நல்வாழ்வை அளிக்கிறான். 6. அரியமான் என்ற பெயருடன் இருந்து மூச்சுக் காற்றை அளித்து உயிர்களை இயங்கச் செய்கிறான். 7. பகன் என்ற பெயரிலிருந்து உயிர்களுக்கு நலன்களை வழங்குகிறான். 8. விவச்சுவான் என்ற பெயருடன் உயிர்களுக்கு ஜாடராக்கினி என்னும் ஜீரணசக்தியை அளித்தும், உடல் வெப்பம் சீராக இருக்கச் செய்தும் உதவுகிறான். 9. விஷ்ணு என்ற பெயருடன் இருந்து தேவர்களுக்கு எதிரான சக்திகளை அழிக்கிறான். (நல்ல எண்ணமும் செயல்களுமே தேவர்கள். அவற்றுக்கு எதிரான தீய எண்ணங்களும் செயல்களுமே அசுரர்கள்.) 10. அம்சுமான் என்ற பெயருடன் வாயுக்களின் வடிவத்திலிருந்து உதவுகிறான். 11. வருணன் என்ற பெயருடன் தண்ணீரின் வடிவத்தில் இருக்கிறான். உடலுக்குத் தேவையான நீர்ச்சத்தை அளிப்பவன் இவனே. 12. மித்திரன் என்ற பெயருடன் இருந்து சந்திரபாகா நதிக்கரையில் அமர்ந்து தவம் புரிகிறான். எதற்கு? உயிர்களுக்கு நலன்கள் யாவும் கிடைப்பதற்கே! “மித்ரன் என்ற பெயருடன் இருந்து, சூரியன் ஏன் தவம் இயற்றுகிறான்?” என்று பிருஹத்பலன் வசிஷ்டரிடம் வினவினான். “சூரியனிடமிருந்தே அனைத்தும் தோன்றின. அவனே சர்வ வல்லமை பெற்ற தெய்வம். அவனே தவம் புரிபவர்களுக்கு வரங்களை அருள வல்லவன். எனினும், அனைத்துக்கும் மேலான பரம்பொருள் உள்ளது. நம்முள் இருக்கும் அப்பொருளை அறிய முதலில் நாம் நம்மையே அறிதல் வேண்டும். அதுவே ஆத்மதரிசனம் அல்லது தன்னையறிதல் ஆகும். அத்தகைய முயற்சியில் உலகத்தின் முதல்வனாகிய சூரியன் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு உலகத்தினருக்கு வழிகாட்டினான்!” என்று விளக்கினார் வசிஷ்டர். முழு மனிதர்களுக்கு இருக்க வேண்டிய பதினாறு பண்புகளை வால்மீகி பட்டியலிட்டுக் காட்டியுள்ளார். அவற்றுள் ஒன்று, 'ஆத்மவான்' என்பதாகும். மனிதர்கள் அனைவரும் ஆத்மாவை அறியும் உயர்நிலை முயற்சியில் ஈடுபடுதல் இயலாது. அப்படியானால், 'ஆத்மவான்' என்பதற்கு வேறு பொருள் இருக்க வேண்டும் அல்லவா? சுயமதிப்பீடு : தனிமனித மேம்பாட்டுக்கு, 'செல்ஃப் அஸெஸ்மெண்ட்' என்னும் சுயமதிப்பீடு தேவை என்று தற்கால மனிதவள மேம்பாட்டு வல்லுநர்கள் கூறுகின்றனர். தனது குறை, நிறைகளை அறிந்து, அதற்கேற்ற வகையில் செயற்பட்டால் வாழ்க்கையில் வெற்றி அடையலாம். சாதனைகளும் நிகழ்த்தலாம். இத்தகைய சுயமதிப்பீடு செய்தவர்களும் ஆத்மவான்கள் (தன்னை அறிந்தவர்கள்) ஆவார்கள். ஆகவே, சூரியன் மித்திரன் என்ற பெயருடன் இருந்து தன்னை அறியத் தவம் செய்ததன் காரணம், “மக்கள் தமக்கு மேலான பரம்பொருளை அறியவும், தன்னை உயர்த்திக் கொள்ளவும், சுயமதிப்பீடு செய்தல் வேண்டும்” என்று அறிவுறுத்தவே ஆகும். அதுவே இப்புராண வரலாறு உணர்த்தும் உட்பொருள் ஆகும். சூரியனின் தேர் : சூரியனின் தேர்(ரதம்) பொன்மயமாக விளங்கும். அத்தேருக்கு ஒரே சக்கரம்தான் உண்டு. ஓர் ஆண்டை (சம்வத்சரம்) ஒற்றைச் சக்கரம் குறிப்பாக உணர்த்துகிறது. ஒற்றைச் சக்கரத்தில் ஆறு கட்டைகள் உள்ளன. அவை ஆறு பருவங்களை (ருதுக்கள்) உணர்த்துகின்றன. உத்தராயணம், தட்சிணாயணம் இரண்டையும் முறையே தேரின் மேற்பகுதியும் கீழ்ப்பகுதியும் உணர்த்துகின்றன. சூரியனின் தேரை ஏழு குதிரைகள் இழுத்துச் செல்கின்றன. அவை, காயத்ரி முதலான ஏழு சந்தஸ்களே என்பர். அருணன் என்பவன் சூரியத் தேரின் ஓட்டுநர் (சாரதி) ஆவார். அவர் சிவந்தநிறம் உடையவர். ஓர் ஊர்தியின் ஓட்டுநரே முதலில் கண்ணில் படுவார். அதுபோல், சூரியத் தேரின் ஓட்டுநர் அருணனின் செவ்வொளியே சூரிய உதயத்திற்கு முன்னால் நமக்குத் தெரிகிறது. கீழ்வானில் சிவந்த ஒளி தோன்றும் அந்த விடியல் நேர்த்தை, 'அருணோதயம்' என்று கூறுவர். “அருணன் இந்திரன் திசை அணுகினன்” என்று தமது திருப்பள்ளியெழுச்சியில் மணிவாசகர் குறிப்பிட்டுள்ளார். பெயர்ப் பொருத்தம் : சூரியன் முதலில் உதிக்கும் நாடு ஜப்பான் ஆகும். இந்தியாவில், சூரியன் முதலில் அருணாசலப் பிரதேசத்தில் உதிக்கிறார் என்பது அறிவியல் கண்ட உண்மை. அருணோதயம் என்னும் சூரியனின் செவ்வொளி முதலில் தோன்றும் மாநிலத்திற்கு அந்தப் பெயர் எவ்வளவு பொருத்தமாக உள்ளது! அருணம்-சிவப்பு. ஐசக்நியூட்டனுக்கு முன்னால்! : ஐசக்நியூட்டனின் நிறப்பிரிகைக் கொள்கை மிகவும் பிரபலமானதே. ஒரு வட்டமான தகட்டின் ஏழு சமமான பகுதிகளில் வானவில்லின் ஏழு நிறங்களைப் பூசி, அத்தகட்டை வேகமாகச் சுழற்றினால், அத்தட்டு வெண்மையாகவே தெரியும். மற்ற ஏழு நிறங்களும் வெண்மைக்குள் ஐக்கியமாகிவிடும். அத்தகைய ஆராய்ச்சித் தட்டையே, 'நியூட்டனின் வட்டத்தகடு' என்று கூறுவர். ஒரு படிகக்கல்லின் வழியே சூரிய ஒளியைச் செலுத்தினால், அந்த ஒளி, ஏழு வண்ணங்கள் உடைய ஒளிக்கற்றையாக வெளிப்படும். ஒவ்வொரு கடவுளுக்கும் உரியதாக ஒவ்வொரு கல்லைக் குறிப்பிடுவதுண்டு. அவ்வகையில் 'நிறப்பிரிகை' ஏற்படுத்தும் படிகக் கல்லையே சூரியனுக்கு உரிய கல்லாக நமது முன்னோர் குறிப்பிட்டுள்ளனர். சூரியன் ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் ஏறிப் பயணம் செய்கிறான் என்று புராணக் குறியீடு ஒளியின் ஏழு வண்ணக்கூறுகளை உணர்த்துகின்றன. சாகத்தீவு : ஆன்மிக நூல்கள் பூமண்டலத்தை ஏழு தீவுகளாகக் குறிப்பிட்டன. நாம் 'ஜம்பூத்துவீபம்' என்னும் நாவலந்தீவில் வாழ்கிறோம். சூரியனின் தீப்பிழம்புகளில் சில சாகத் தீவில் கடலில் புகுந்ததாகப் புராணம் கூறுகிறது. தற்காலத்தில் ஈரான் என்று வழங்கிவரும் பாரசீகமே சாகத் தீவாக இருக்க வேண்டுமென்று கருதுகின்றனர். வேத மதத்தை ஒத்திருந்த பாரசீக மதத்தினர் பலர் இந்தியாவில் குடியேறிவிட்டனர் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். சாம்பன் எழுப்பிய சூரியக் கோயிலில் பூஜைகள் செய்யத் தகுந்த சான்றோர்களான மகர் என்ற வகுப்பினரை, சாகத்தீவிலிருந்து அழைத்து வந்ததாகச் சூரிய புராணம் உரைக்கிறது. மகர்கள் பாரசீகத்திலிருந்து வந்தவர்கள் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். ஈரானியர்கள் தங்கள் இடையில் புனிதமான ஓர் ஆபரணத்தை அணிவார்கள். சூரியனுக்காக எழுப்பப்பட்ட திருக்கோயில்களிலுள்ள சூரியனின் படிமங்களில் ஈரானியர் அணியும் அந்த இடை ஆபரணம் அழகு செய்கிறது. இதுவே, மகர்கள் ஈரானியர்கள் என்பதற்கு ஓர் ஆதாரமாக உள்ளது. சாம்பன் செய்த தவம் : கிருஷ்ணனின் குமாரன் சாம்பனுக்குச் சூரியனைப் பற்றிய செய்திகளைக் கூறினார் நாரதர். சூரிய பகவானை நோக்கித் தவம் செய்து தொழுநோயிலிருந்து விடுபடலாம் என்றும் கூறி வாழ்த்தி அனுப்பினார். சாம்பன் தன் தந்தை கிருஷ்ணனைக் காணச் சென்றான். மருத்துவத்தால் குணப்படுத்த இயலாத தனது நோயை சூரிய வழிபாட்டின் வழியே தீர்த்துக் கொள்ள நாரதர் அறிவுறுத்திய செய்தியைக் கூறினான். சாம்பன் கிருஷ்ணரை வலம் வந்து வணங்கினான். கிருஷ்ணர். “சாம்பா! தேவரிஷி நாரதரின் ஆசி உனக்குக் கிடைத்துவிட்டது! சூரிய பகவானின் அருளால் நீ விரைவில் நோய் நீங்கி, துவாரகைக்குத் திரும்புவாய்!” என்று ஆசி கூறி அனுப்பினார். துவாரகையிலிருந்து புறப்பட்ட சாம்பன் சந்திரபாகா நதியைக் கடந்து சூரியன் பெயரால் அழைக்கப்படும் மித்திரவனத்தை அடைந்தான். உலகத்தவர் வியக்கும் வண்ணம் ஐம்புலன்களையும் அடக்கி, மனத்தையும் ஒருநிலைப்படுத்தி, சூரியனைச் சிந்தையில் நிறுத்திக் கடுந்தவம் இயற்றினான். உள்ளத்தில் நிலைநிறுத்திய சூரியனைப் போலவே சாம்பனின் மேனியும் ஒளிவீசத் தொடங்கியது. அவனுக்குத் திருவருள் செய்திடச் சூரிய பகவான் அவன் முன்னால் தோன்றினார். சூரிய பகவானைக் கண்ட சாம்பன் ஆனந்தக் கண்ணீர் பொழிய, இருகரம் கூப்பித் தொழுதான். அவரது திருவடியில் விழுந்து வணங்கினான், சூரிய பகவான் குறுநகை பூத்த முகத்துடன் பேசலானார். “ஜாம்பவதியின் குமாரனே! உனது தவத்தால் மகிழ்ந்தேன். நீ வேண்டும் வரங்களைக் கேட்டுப் பெறலாம்” என்றார். “சுடர்க்கடவுளே! தங்களின் தரிசனம் கிடைத்த பிறகு வேறென்ன வேண்டும்? தங்களிடம் மாறாத பக்தி இருந்தால் போதும்!” என்று சாம்பன் பணிவாகக் கூறினான். வேண்டிய வரத்தைக் கேட்டுப் பெற்றிடத் தயங்கினான் சாம்பன். பின்னர், தனது தொழுநோய் நீங்க வேண்டும் என்ற கோரிக்கையை எடுத்துரைத்தான். சாம்பன் வேண்டியபடி, சூரியனின் அருட் பார்வை பட்டு, சாம்பனின் தொழுநோய் விலகியது. பொன்மேனி பெற்ற சாம்பன் மீண்டும் சூரியனை வணங்கினான். “சாம்பா! பூவுலகில் உன் பெயர் மிகவும் பிரபலமடையப் போகிறது. இந்த சந்திரபாகா நதிக்கரையில் என்னைப் பிரதிஷ்டை செய்து வழிபடுக! இப்பகுதி உன் பெயரால், 'சாம்பபுரம்' என்று அழைக்கப்படும். இங்கு வந்து என்னைத் தரிசிப்பவர்களுக்கு நோய்கள் நீங்கும். அவர்கள் அனைத்து நலன்களும் அடைவார்கள். உனது விருப்பப்படி நான் அன்றாடம் உனக்குக் கனவில் காட்சி அளிப்பேன்!” என்று சூரிய பகவான் சாம்பனுக்குக் கூறியருளினார். சாம்பன் பெருமகிழ்ச்சி எய்தினான். ஆற்றில் கிடைத்த ஆதித்தன் படிமம் : சந்திரபாகா நதிக்கரையில் இருந்த மித்திரவனத்தில் முனிவர்கள் பலரும் சூரியனை வழிபட்டு வந்தனர். தான் சூரிய பகவானுக்குத் திருக்கோவில் கட்ட விரும்புவதாக, சாம்பன் முனிவர்களிடம் கூறினான். அவர்களும் அதே விருப்பத்தைத் தெரிவித்தனர். சாம்பன் சந்திரபாகா ஆற்றில் நீராடச் சென்றான். அவனுடன் முனிவர்களும் சென்றனர். வானத்தில் வந்து கொண்டிருந்த சூரியனின் உருவம் சந்திரபாகா ஆற்றின் நீரில் பிரதிபலித்தது. அதைக் கண்ட சாம்பனின் உள்ளம் நெகிழ்ந்தது. சூரிய பகவானை நேரில் கண்டது போன்ற உணர்வு மேலிட்டது. அதே உணர்வோடு ஆற்று நீரைக் கையில் அள்ளினான் சாம்பன். என்ன விந்தை! சாம்பன் கையில் ஆற்று நீர் அகப்படவில்லை சூரிய பகவானின் படிமம் அவனுடைய கைகளில் எழுந்தருளியது. சாகத்தீவிலிருந்து மகர் வகுப்பைச் சேர்ந்த சான்றோர்களை அழைத்து வர கிருஷ்ணன் தன்னுடைய கருடவாகனத்தைக் கொடுத்துதவினார். கருடபகவான் சாம்பனைச் சுமந்து சென்று சாகத்தீவில் இறக்கினார். அங்கு, சாம்பன் மகர் வகுப்பைச் சார்ந்த சான்றோர்களைக் கண்டு வணங்கினான். தான் துவாரகை வேந்தன் கண்ணனின் மகன் என்று அறிமுகம் செய்து கொண்டான். சூரிய பகவான் கூறிய செய்திகளை அவர்களிடம் எடுத்துரைத்தான். நாவலந்தீவிலுள்ள சந்திரபாகா நதிக்கரைக்கு வந்து, சூரியனுக்கு உரிய பூஜைகளை நடத்தித் தருமாறு வேண்டினான். “கிருஷ்ண குமாரரே! நாங்கள் தங்களுடன் உடனே புறப்படத் தயாராக உள்ளோம். ஏனெனில், தங்கள் வருகை குறித்து முன்னரே சூரிய பகவான் எங்களிடம் கூறிவிட்டார்!” என்றனர் மகர்குலச் சான்றோர்கள். அச்சான்றோர்களையும், சாம்பனையும் ஏற்றிக் கொண்டு கருடபகவான் சந்திரபாகா நதிக்கரைக்குத் திரும்பினார். மகர் பெருமக்களின் ஆலோசனைப்படி, சூரியன் அளித்த படிமத்தைச் சாம்பன் பிரதிஷ்டை செய்தான். அவர்கள் அன்றாட பூஜைகளைச் சிறப்பாக நடத்தி வந்தனர். “ஜம்பூத்தீவு என்ற நமது நாட்டில் முன்னர் சூரியனை நேரில் கண்டு வணங்கிப் போற்றினர். சாகத் தீவிலிருந்து சூரியனின் படிமவழிபாடு நம்நாட்டுக்கு வந்தது” என்று சூரிய புராணம் உரைக்கிறது.

Friday, 7 March 2014

Om Namah Sivaya - Lighting of Shivalayaas Kuzhu


The following temples around Kumbakonam, Mayavaram and Pudukottai are being attended to. We are looking for volunteers for expanding into other areas in Tamilnadu as well. No. Place Temple Archakar / contact person Phone Number 1 Achyutamangalam (Nannilam Taluk) Sri Viswanathaswami temple) 2 Adampar Sri Vandarkuzhali sametha Sri Kailasanathar temple Sri Kannan Gurukkal 99410 38138 3 Alangudi Nedar Village Sri Kalyani ambal sametha Sri Brahmapuriswarar temple Sri Jaya 9790380738 4 Asoor Sri.Thaanthonriswarar Thiru.Ravi,Teacher 4352443897 5 Chitrakudi (Budalur taluk) Sri Jagadambika sametha Sri Jagannatheswarar temple Sri Kanakaraj 948 717 2163 6 Enanallur (3 Km west of Thirukannapuram) Sri Kuduminathaswami temple Dr Selvam (of P.Kottur) 0435 237154 7 Eraharam Sri.Kailasanathar Thiru.Hari 9245884635 8 Kallaperambur (Alangudi Taluk) Sri Periyanayagi ambal sametha Sri Kailasanathar temple Sri Thyagarajan 0436 2285429 9 Kanjanur Sri.Kasiviswanathar Thiru.Ganesan 10 Kazhukanil muttam Sri Kamakshi ambal sametha Sri Kailasnathar temple 11 Kizhkorukkai (Near Kumbakonam) Sri Pushpakavalli ambal sametha Sri Gnanapuriswarar temple Smt Kurvammal 9443460812 12 Kollapuram (Udayarpalayam taluk) Sri Abhirami ambal sametha aparatha rakshakaswami temple Sri Shanmugam Iyya 9942656945 13 Kottur Sri.Kasiviswanathar Thirumathi. Amudha 14 Kovilacheri (Near Kumbakonam) Sri Shembagavalli ambal sametha sri Kakoleswarar temple 15 Maaligai thidal (Thirukarugavoor post, Thiruvarur dist) Sri Soundaranayagi ambal sametha sri Sundareswarar temple Sri Ramadorai 9677818267 16 Mahadeva Pattinam (Near Mannargudi) Sri Mahadevaswami temple Sri Bharathi Mohan 9443565300 17 Mahimalai (near Ammapettai, Valangaiman Taluk) Sri Annapoorani ambal sametha Sri Chandramouleeswarasawmi temple Sri Kannappa Sivachariyar 9443907990 18 Manambadi Sri.Viswanathar Thiru.Pakirisami 9976190992 19 Mangudi Sri.Sivalokanathar Thiru.Kasinathan 9965767146 20 Mayavaram Sri Vadaaranyeswarar temple Sri Swaminathan 9976071212 21 Melakaveri Sri.Brahmapuriswarar Sivasri.Baalu Gurukkal 04352421235 22 Melakaveri Sri.Kasiviswanathar Thiru.T.Ambalavanan 9443106741 23 Merkannamangalam (Near Srivanchiyam, Nannilam Taluk) Sri Meenakshi ambal sametha Sri Sundareswarar temple Sri Sankar 9787825210 24 Nambarai (Near Thimiri, Arcot taluk) Sri Maragathavalli sametha Sri Gowriswarar temple Sri Palani 9489343639 25 Nandiyalam (Near Rathnagiri in Chennai – Vellore highway) Sri Kamakshi ambal sametha Sri Nandhiswarar temple Sri Pandian 9443144501 26 Narikudi (Valangaiman taluk, near Alangudi) Sri emaneswari ambal sametha Sri emaneswaraswami temple Sri Vaidyalinga Udayar 9751593421 27 Natham @ Karuppur (Near Kumbakonam) Sri Agastheeswrar temple Sri Sivaprakasam 9944475662 28 Nedar Village (enroute Pasupathi koil village on Thanjavur – Kumbakonam road) Sri Mangalambika Sametha Sri Kalahasthiswara swami temple Sri Palaniswami 93650634669 / 04362292593 29 Pigiyanganallur Sri Siva temple Sri Ranganathan (of S.Pudur) 9445109914 / 04352465878 30 Pillayar petai Sri Visalakshi ambal sametha Sri Viswanathaswami temple Sri Sattanatha Gurukkal 9344147857 31 Porappadi Sri Mangalambika sametha sri Thirumoolanadaswami temple Sri Jayaraman 0435 2467643 32 Poundarikapuram Sri Soundaranayagi sametha Sri Somanathaswami temple Sri Ganesa Gurukkal 0435 2463930 33 Puliyanserry (Kumbakonam – Nannilam Road) Sri Kailasanathar temple Sri Mahadeva Gurukkal 34 Puthagalur ( Nannilam Taluk) Sri Paramasundari ambal sametha Parama sundara swami temple Sri Vaazhkai Udaya kumar 9345808198 35 Puzuthikudi Sri.Thirumulanathar Thiru.Duraiarasan 9976191701 36 Seedakkamangalam (Nannilam Taluk) Sri Thirumulanadhaswami temple Sri Venkatachalam 9788524229 37 Solapuram Sri.Bhairaveswarar Thiru.Jayakumar 9345618527 38 Solapuram Sri.Kasiviswanathar Thiru.Veeramani 9994694067 39 Thiagasamudram Sr.Boolakanathar Sivasri.Senthilvelava Gurukkal 9994367296 40 Thirukazhithattai Sri Vedhanayagi sametha Sri Vedapuriswarar temple Sri Sankar Gurukkal 9952805744 41 Thirukondeeswaram (Nannilam Taluk) Sri Dharmambika sametha sri Dharmapuriswarar temple Sri Rajaganapathi Sivachariyar 9486912793 42 Thirumandangudi Sri.Thiribuvaneswarar Sivasri.Nagaraja Gurukkal 4352941879 43 Thirumetraligai Sri.Brahmapuriswarar Thiru.Selvasekar 9442512703 44 Thiruvalliangudi Sri.Sozhiswarar Sivasri.Ramakrishna gurukkal 4352457459 45 Tirumangalam Sri.Boolakanathar Sivasri.Mohan Gurukkal 46 Tukhili Sri.Vedapuriswarar Thiru.Palaniswami 47 Tukhili Sri.Chokanathaswami Thiru.Palaniswami 48 Uththani Sri.Iravatheswarar Thiru.K.Murugan 4374220601 49 Vadapakkagrahram Sri.Chidambareswarar Thiru.Mohan 9952573094 50 Vadavansar (Near Pattavarthi on Manalmedu – Vaitheeswaran Koil road) Sri Kamakshi ambal sametha Sri Kailasanathar temple Sri Sankar 9787399201 51 Vallamangalam Sri.Sethupuriswarar Thiru.Magendran 9486402428 52 Vanavanallur (Near Anaikkarai road junction) Sri Kamakshi ambal sametha Sri Kailasanathar temple Sri Ramanatha Iyer 53 Varagadai (Near Mayavaram) Sri Varundeeswarar temple Sri Swaminathan 9976071212 54 Vazuththur Sri.Kailasanathar Sri.Ramanujam Iyengar 9790325139 55 Vizhudhiyur ( Kudavasal taluk) Sri Soundaranayagi sametha Sri Chokkanathaswami temple Sri Guruswami 9095922701 Temple lighting activities taken up in Mayavaram belt: In and around Mayavaram: 1. Temples in Punjai village: - Arulmigu ParvathaRajapuththiri Sametha NatrunaiNaathaEasWARAR KOIL, Another Ambaal is also there namly Malayala Mandana Madanthai. - Another koil there itself is Arulmiguri ThirumalaiRajeswari SamethaArulmigu Rajarajeswarar koil. Both these are governed by Sri Nataraja Gurukkal/ Sri Balasubramania gurukkal.Phone nos:9486902773 2. Siddimalli Village : Arulmigu Kamakshi Ambaal sametha Kailasanathar Koil, Gurukkal Phone number -9487312475 3. Arulmigu Balagujambigai Sametha VennaieswararKoil,VennaiNallur Near MArudur.Gurukkal name Sri Navaneetha battar phn no.9444170161 4. Arulmigu Balambigai sametha Vaidyanatheswarar koil, Pandur village, Sri Sadasiva gurukkal:phone no:04364236849 5. Arulmigu Thyalnayagi sametha Arulmigu Vaidyanatheswarar koil,Manneer Pallam near THALIGNAYIRU village.phn no:Padmanaban;9444526253. 6. Arulmigu Soundaranayaki Sametha Shangaarayanyeswarar koil,Thalachchangaadu.Gurukkal name:Bala/Swaminathan Phn no:04364-280615 & 04364-280032 7. Arulmigu Soundaranayaki Sametha Sundareswarar koil, Kesingan Village,Mr Mohan Incharge:9443503573 --------------------------------------------------------- Temple lighting activities taken up in Pudukottai area: Arulmigu VisalakshiAmbaal sametha KasiViswanathar koil; Ammasathram; Vairavamurthy Gurukkal 04339-202943 Arulmigu VisalakshiAmbaal sametha Kailasanathar koil; Uppilikkudi; Santhosh Gurukkal; Narthaamalai. 9376474622 Arulmigu Sundara Choleeswarar thirukkoil; Kolaththur,Venkatachalam a watchman lights lamp here; 9843609453 Arulmigu Brahadaambaal sametha Uththamanathar koil; Kiranur; Doraiswami Gurukkal.043396-262788 Arulmigu Sadasiveswar in the lands without roof also at Pandaarakudi fields; Thangamani; 9047177469. Arulmigu Subadranayaki sametha Walarmadeeswar koil; Neerpazhani; K.Arjunan alias Kuttaiyer; 9842393913 Arulmigu Dharmambigai sametha Agastheeswarar koil; Alaththur; Iluppur Taluk; 94443807873 Arulmigu VisalakshiAmbaal sametha Kasi Viswanathar koil; Athanakootaha; Ravi Bhaskar; 9865515111 Arulmigu Sivagami Ambaal Sametha Chidambareswar Koil, Thondamanallur; Thirumurthy 9751212115 Arulmigu Karpakaambigai SamethaAgneeswarar Koil; Kalamavoor; Kandaswami 9360779163. Nanjur,Kilakurinji,Letchmanappatti & Kadappillyarpatti - All these four villages have got Swami in the form of Sivalingas and are in a very neglected condition. Maximum efforts are also taken to keep a light lit once a day through some well wishers.

Thursday, 6 March 2014

orchid flower series




donkey & maths


donkey & maths

Modern Math

Equation 1

Human = eat + sleep + work + enjoy

Donkey = eat + sleep

Therefore,

Human = Donkey + work + enjoy

if, Human - enjoy = Donkey + work

In other words,

Human that doesn't enjoy = Donkey that works (Eqn 1)

******************************************************

Equation 2

Men = eat + sleep + earn money

Donkeys = eat + sleep

Therefore, Men = Donkeys + earn money (Eqn 2)

If Men - earn money = Donkeys

In other words,

Men that don't earn money = Donkeys (Eqn 3)

******************************************************

Equation 3

Women = eat + sleep + spend

Donkeys = eat + sleep

Therefore, Women = Donkeys + spend (Eqn 4)

If, Women - spend = Donkeys

In other words,

Women that don't spend = Donkeys (Eqn 5)

******************************************************

To Conclude:

>From Eqn 3 and Eqn 5
Men that don't earn money = Women that don't spend
So,
Men earn money not to let women become Donkeys! (Postulate 1)

Women spend not to let men become Donkeys! (Postulate 2)
From Eqn 2 + Eqn 4, we have
Men + Women = Donkeys + earn money + Donkeys + spend
From Postulates 1 and 2, we can conclude

Man + Woman = 2 Donkeys

And the Donkeys live happily ever after!

knr


--
If God brings you to it, He will bring you through it.
Happy moments, praise God.
Difficult moments, seek God.
Quiet moments, worship God.
Painful moments, trust God.

  Every moment, thank God

குறிஞ்சிப் பாட்டில் கூறப்பட்டுள்ள 99 பூக்கள்


கபிலர் இயற்றியகபிலர் இயற்றிய குறிஞ்சிப் பாட்டில் கூறப்பட்டுள்ள 99 பூக்கள் இங்கே:


வள் இதழ் ஒண் செங் காந்தள், ஆம்பல், அனிச்சம், தண் கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி, செங் கொடுவேரி, தேமா, மணிச்சிகை, உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ், கூவிளம், எரி புரை எறுழம், சுள்ளி, கூவிரம், வடவனம், வாகை, வான் பூங்குடசம், எருவை, செருவிளை, மணிப் பூங் கருவிளை, பயினி, வானி, பல் இணர்க் குரவம், பசும்பிடி, வகுளம், பல் இணர்க் காயா, விரி மலர் ஆவிரை, வேரல், சூரல், குரீஇப் பூளை, குறுநறுங் கண்ணி, குருகிலை, மருதம், விரி பூங்கோங்கம், போங்கம், திலகம், தேங் கமழ் பாதிரி, செருந்தி, அதிரல், பெருந் தண் சண்பகம், கரந்தை, குளவி, கடி கமழ் கலி மா, தில்லை, பாலை, கல் இவர் முல்லை, குல்லை, பிடவம், சிறுமாரோடம், வாழை, வள்ளி, நீள் நறு நெய்தல், தாழை, தளவம், முள் தாள் தாமரை, ஞாழல், மௌவல், நறுந் தண் கொகுடி, சேடல், செம்மல், சிறுசெங்குரலி, கோடல், கைதை, கொங்கு முதிர் நறு வழை, காஞ்சி, மணிக் குலைக் கள் கமழ் நெய்தல், பாங்கர், மராஅம், பல் பூந் தணக்கம், ஈங்கை, இலவம், தூங்கு இணர்க் கொன்றை, அடும்பு, அமர் ஆத்தி, நெடுங் கொடி அவரை, பகன்றை, பலாசம், பல் பூம் பிண்டி, வஞ்சி, பித்திகம், சிந்துவாரம், தும்பை, துழாஅய், சுடர்ப் பூந் தோன்றி, நந்தி, நறவம், நறும் புன்னாகம், பாரம், பீரம், பைங் குருக்கத்தி, ஆரம், காழ்வை, கடி இரும் புன்னை, நரந்தம், நாகம், நள்ளிருள் நாறி, மா இருங் குருந்தும், வேங்கையும், பிறவும், அரக்கு விரித்தன்ன பரு ஏர்அம் புழகுடன்

கபிலரின் குறிஞ்சி பாட்டில் கூறிய 99 தமிழ் பூக்கள்...

1. காந்தள்
2. ஆம்பல்
3. அனிச்சம்
4. குவளை
5. குறிஞ்சி
6. வெட்சி
7. செங்கொடுவேரி
8. தேமா (தேமாம்பூ)
9. மணிச்சிகை
10. உந்தூழ்
11. கூவிளம்
12. எறுழ் ( எறுழம்பூ)
13. சுள்ளி
14. கூவிரம்
15. வடவனம்
16. வாகை
17. குடசம்
18. எருவை
19. செருவிளை
20. கருவிளம்
21. பயினி
22. வானி
23. குரவம்
24. பசும்பிடி
25. வகுளம்
26. காயா
27. ஆவிரை
28. வேரல்
29. சூரல்
30. சிறுபூளை
31. குறுநறுங்கண்ணி
32. குருகிலை
33. மருதம்
34.கோங்கம்
35. போங்கம்
36. திலகம்
37. பாதிரி
38. செருந்தி
39. அதிரல்
40. சண்பகம்
41. கரந்தை
42. குளவி
43. மாமரம் (மாம்பூ)
44. தில்லை
45. பாலை
46. முல்லை
47. கஞ்சங்குல்லை
48. பிடவம்
49. செங்கருங்காலி
50. வாழை
51. வள்ளி
52. நெய்தல்
53. தாழை
54. தளவம்
55. தாமரை
56. ஞாழல்
57. மௌவல்
58. கொகுடி
59. சேடல்
60. செம்மல்
61. சிறுசெங்குரலி
62. கோடல்
63. கைதை
64. வழை
65. காஞ்சி
66. கருங்குவளை (மணிக் குலை)
67. பாங்கர்
68. மரவம்
69. தணக்கம்
70. ஈங்கை
71. இலவம்
72. கொன்றை
73. அடும்பு
74. ஆத்தி
75. அவரை
76. பகன்றை
77. பலாசம்
78. பிண்டி
79. வஞ்சி
80. பித்திகம்
81. சிந்துவாரம்
82. தும்பை
83. துழாய்
84. தோன்றி
85. நந்தி
86. நறவம்
87. புன்னாகம்
88. பாரம்
89. பீரம்
90. குருக்கத்தி
91. ஆரம்
92. காழ்வை
93. புன்னை
94. நரந்தம்
95. நாகப்பூ
96. நள்ளிருணாறி
97. குருந்தம்
98. வேங்கை
99. புழகு
இங்கே:

வள் இதழ் ஒண் செங் காந்தள், ஆம்பல், அனிச்சம், தண் கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி, செங் கொடுவேரி, தேமா, மணிச்சிகை, உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ், கூவிளம், எரி புரை எறுழம், சுள்ளி, கூவிரம், வடவனம், வாகை, வான் பூங்குடசம், எருவை, செருவிளை, மணிப் பூங் கருவிளை, பயினி, வானி, பல் இணர்க் குரவம், பசும்பிடி, வகுளம், பல் இணர்க் காயா, விரி மலர் ஆவிரை, வேரல், சூரல், குரீஇப் பூளை, குறுநறுங் கண்ணி, குருகிலை, மருதம், விரி பூங்கோங்கம், போங்கம், திலகம், தேங் கமழ் பாதிரி, செருந்தி, அதிரல், பெருந் தண் சண்பகம், கரந்தை, குளவி, கடி கமழ் கலி மா, தில்லை, பாலை, கல் இவர் முல்லை, குல்லை, பிடவம், சிறுமாரோடம், வாழை, வள்ளி, நீள் நறு நெய்தல், தாழை, தளவம், முள் தாள் தாமரை, ஞாழல், மௌவல், நறுந் தண் கொகுடி, சேடல், செம்மல், சிறுசெங்குரலி, கோடல், கைதை, கொங்கு முதிர் நறு வழை, காஞ்சி, மணிக் குலைக் கள் கமழ் நெய்தல், பாங்கர், மராஅம், பல் பூந் தணக்கம், ஈங்கை, இலவம், தூங்கு இணர்க் கொன்றை, அடும்பு, அமர் ஆத்தி, நெடுங் கொடி அவரை, பகன்றை, பலாசம், பல் பூம் பிண்டி, வஞ்சி, பித்திகம், சிந்துவாரம், தும்பை, துழாஅய், சுடர்ப் பூந் தோன்றி, நந்தி, நறவம், நறும் புன்னாகம், பாரம், பீரம், பைங் குருக்கத்தி, ஆரம், காழ்வை, கடி இரும் புன்னை, நரந்தம், நாகம், நள்ளிருள் நாறி, மா இருங் குருந்தும், வேங்கையும், பிறவும், அரக்கு விரித்தன்ன பரு ஏர்அம் புழகுடன்

கபிலரின் குறிஞ்சி பாட்டில் கூறிய 99 தமிழ் பூக்கள்...

1. காந்தள்
2. ஆம்பல்
3. அனிச்சம்
4. குவளை
5. குறிஞ்சி
6. வெட்சி
7. செங்கொடுவேரி
8. தேமா (தேமாம்பூ)
9. மணிச்சிகை
10. உந்தூழ்
11. கூவிளம்
12. எறுழ் ( எறுழம்பூ)
13. சுள்ளி
14. கூவிரம்
15. வடவனம்
16. வாகை
17. குடசம்
18. எருவை
19. செருவிளை
20. கருவிளம்
21. பயினி
22. வானி
23. குரவம்
24. பசும்பிடி
25. வகுளம்
26. காயா
27. ஆவிரை
28. வேரல்
29. சூரல்
30. சிறுபூளை
31. குறுநறுங்கண்ணி
32. குருகிலை
33. மருதம்
34.கோங்கம்
35. போங்கம்
36. திலகம்
37. பாதிரி
38. செருந்தி
39. அதிரல்
40. சண்பகம்
41. கரந்தை
42. குளவி
43. மாமரம் (மாம்பூ)
44. தில்லை
45. பாலை
46. முல்லை
47. கஞ்சங்குல்லை
48. பிடவம்
49. செங்கருங்காலி
50. வாழை
51. வள்ளி
52. நெய்தல்
53. தாழை
54. தளவம்
55. தாமரை
56. ஞாழல்
57. மௌவல்
58. கொகுடி
59. சேடல்
60. செம்மல்
61. சிறுசெங்குரலி
62. கோடல்
63. கைதை
64. வழை
65. காஞ்சி
66. கருங்குவளை (மணிக் குலை)
67. பாங்கர்
68. மரவம்
69. தணக்கம்
70. ஈங்கை
71. இலவம்
72. கொன்றை
73. அடும்பு
74. ஆத்தி
75. அவரை
76. பகன்றை
77. பலாசம்
78. பிண்டி
79. வஞ்சி
80. பித்திகம்
81. சிந்துவாரம்
82. தும்பை
83. துழாய்
84. தோன்றி
85. நந்தி
86. நறவம்
87. புன்னாகம்
88. பாரம்
89. பீரம்
90. குருக்கத்தி
91. ஆரம்
92. காழ்வை
93. புன்னை
94. நரந்தம்
95. நாகப்பூ
96. நள்ளிருணாறி
97. குருந்தம்
98. வேங்கை
99. புழகு

தாய் - தந்தை - குரு - தெய்வம்

தாய் - தந்தை - குரு - தெய்வம்

(சிதம்பரனார் மாவட்டத்தில் கும்மிடிக்கோட்டை - வாலை குருநாதஸ்வாமி கோயிலில் கும்பாபிஷேகத்தில் சுவாமிகளின் அருள்வாக்கு)
கோயிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று சொல்வார்கள். இந்த உயர்ந்த மனிதப்பிறவி எடுத்த எல்லோரும் நல்ல பழக்க வழக்கங்களோடு விளங்க வேண்டும். பக்தியும் மரியதையும் இருந்தால்தான் நல்ல பழக்கவழக்கங்கள் வரும் மூன்று பேர்களிடத்திலே பக்கிதியோடு இருக்க வேண்டும்.
தாய் தந்தையரிடத்திலே பக்தியோடு இருக்க வேண்டும். மரியாதையோடு இருக்க வேண்டும். குருவினடத்திலே பக்தியோட இருக்க வேண்டும். தெயவத்தினிடத்திலே பக்தியோடு இருக்க வேண்டும்.
முன்காலத்திலே பார்த்தால், படிப்பைத் தேடிக் கொள்வதற்காக குருவினடித்திலே சென்று அவருக்கு வேண்டிய சேவைகள் பணிவிடைகளெல்லாம் செய்து, பல காலங்கள் அவருடனேயே இருந்து, பாடமெல்லாம் கற்றுக் கொண்டார்கள். துரோணாச்சாரியாரிடத்திலே பலபேர் படித்தார்கள். ஆசிங்கரரிடத்திலே பலபேர் படித்தார்கள்.
ஒரே ஒரு முனிவரிடத்திலே ஆயிரம் பேர்கள் கூட படித்தார்கள். இதுபோல் பல நூறுபேர் சேர்ந்து படிக்கக் கூடிய இடத்திற்கு, கடிகாஸ்தானம் என்று பெயர். பல்கலைக்கழகம் என்று சொல்லுகிறோமே அது போன்று கடிகாஸ்தானம்.
உபமன்யு என்று ஒருவர், அவர் ஒரு முனிவரிடத்திலே சேவை செய்து, அவர் சொல்லும்படியெல்லாம் கேட்டுக்கொண்டு படித்தார். அவர் என்ன சாப்பிடச் சொல்லுகிறாரோ, அதைத்தான் சாப்பிடுவார். அவர் சொல்லும்படியெல்லாம் இருந்துகொண்டு கஷ்டப்பட்டுப் படித்தார்.
இதுபோல் கிருஷ்ணபரமாத்மா கூட சாந்த்வீபணி என்ற முனிவரிடத்திலே.. பகவானே.. படித்தார். ராமபிரானுக்கு விஸ்வாமித்திரர் நல் உபதேசம் செய்தார். எப்படிப் பசியை நீக்குவது, எப்படித் தூக்கத்தை வெல்வது என்றெல்லாம் விஸ்வாமித்திரர் ராமபிரானுக்குச் சொல்லிக் கொடுத்தார். அது குருபக்தி.
அதுபோன்று தாய் தந்தையர்களுக்குச் செய்ய வேணடியதைச் செய்து, மதித்தார். இப்படி மதித்தவர்களில் பெரிய உதாரணம் பிள்ளையார்.
உலகமனைத்துமே தாய் தந்தையர்தான் என்று தாய் தந்தையரையே வலம் வந்தவர். அதன் மூலமாக ஒரு பழத்தையே பெற்றவர்.
அதுபோல, சிரவணகுமாரன் என்று ராமாயணத்திலே வருகிறது, வயதான தாய் தந்தையருக்குப் பணிவிடைகளெல்லாம் செய்து வந்தார். ஒரு சமயம் தசரத மகாராஜா வேட்டைக்காகச் செல்லும்பொழுது ஒரு யானை தண்ணீர் குடிக்கிற மாதிரிச் சத்தம் கேட்டது. அதைப் பார்த்து சத்தத்தைக் கேட்டு யானை தான் தண்ணீர் குடீக்கிறதாக்கும் என்று நினைத்து அவர் அடித்தார். அவர் சத்தத்தைக் கேட்டு திக்கை அறிந்து கொண்டு அடிக்கக் கூடியவர் என்னும் திறமைக்காக.. வேறு ஒன்றுமில்லை.. அந்த நேரம் மனிதக்குரல் கேட்டவுடனேயே அவர்களிடத்திலே போய் மன்னிப்பெல்லாம் கேட்டுக்கொண்டார் தசரத மகாராஜா.



மகாராஷ்டிராவிலே பண்டர்பூர் என்று ஒர் ஊர் இருக்கிறது. சில படங்களைப் பார்த்தால் தெரியும். இடுப்பிலே கை வைத்துக்கொண்டு ஒரு பெருமாள் இருப்பார்.
அவரை விட்டல் என்று சொல்லுவார்கள். அந்த இடத்திலே புண்டரீகன் என்று ஒருவர் இருந்தார். அவர் தாய், தந்தையர்களுக்கெல்லாம் பணிவிடை செய்து வந்தார். கூப்பிட்டால் மட்டுமே வரக்கூடிய ஸ்வாமி, இவ்வளவு நல்லவர்கள் இருக்கிறார்களே என்று தானாகவே வந்தார், தாய் தந்தையர்களிடத்திலே பக்திக்கு இது போன்றவர்கள் உதாரணங்கள்.
அதேபோன்று தெய்வத்தினிடத்தில் பக்திக்கு, துருவன் என்று ஒருவர் இருந்தார். ராஜ வம்சத்தைச் சேர்ந்தவர், சின்ன வயதிலேயே தவம் செய்தார். அதே போன்று பிரஹலாதன் சின்ன வயசிலேயே தபஸ் பண்ணினார். சின்ன பாலகராக இருந்தவர் பெரிய ஞானத்தைப் பிரசாரம் செய்யக்கூடிய ஞானஸ்தனாக விளங்கினார். இவர்களெல்லாம் சிறந்த தெய்வ சக்திக்கு எடுத்துக்காட்டாக விளங்குபவர்கள்.
இதுபோல், தாய் தந்தையர் குரு, தெய்வம் இவர்களிடத்தில பக்தி செய்து நல்லதொரு மனப்பக்குவத்தை அடைந்து அதன் மூலமாக இறைவனுடைய அருளைப் பெற்றவர்கள், ஞானத்தைப் பெற்றவர்கள், முக்தியை அடைந்தவர்கள், ஆனந்த அனுபவ நிலையிலேயே திளைத்திருந்தவர்கள் நம்முடைய முன்னோர்கள் எல்லாம் ஈஸ்வரனிடத்திலே பக்தியை வைக்க வேண்டும். அந்த பக்தி மாறுதல் அடையக் கூடியதாக இல்லாமல் சஞ்சலமும் சந்தேகமும் உள்ளதாக இல்லாமல் தீர்மானமானதாகவும், அகங்காரம் கர்வம் இல்லாததாகவும் இருக்க வேண்டும், பிரியத்துடன் இருக்க வேண்டும். பிரார்த்தனைகளை நல்ல பிரார்த்தனைகளாகச் செய்ய வேண்டும், தர்மத்தினுடைய அடிப்படையில் பிரார்த்தனைகள் அமைய வேண்டும். அப்படி என்ன பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று நமக்குத் தெரிய வில்லையென்றால் 'என்ன கொடுத்தால் எனக்கு நல்லதோ, அதைக் கொடுங்கள்' என்று பிரார்த்தனை செய்ய வாவது தெரிந்து கொள்ளவேண்டும். இப்படியாக பக்தி அமைய வேண்டும்.
அப்படி ஒரு பக்தி செய்வதற்காகத்தான் உருவ வழிபாடெல்லாம் நாம் செய்து வருகிறோம். எல்லா இடத்திலேயும் நிறைந்திருக்கக்கூடியவர் ஸ்வாமி. அவரை அதே ரூபத்திலே நாம் தெரிந்து கொள்வது கடினம். அதற்காகத்தான் மூர்த்தி வழியாக, உருவத்தின் வழியாக வழிபடுகிறோம்.
தீபத்தை வழிபடுகிறோம். தீபமங்கள் ஜோதி என்று சொல்லுகிறோம்.
இது போல தீபத்தை வழிபடுவதை, ஆதிசங்கரர் முதலாகப் பல பேரும் சொல்லியிருக்கிறார்கள். சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். ஆதிசங்கரர் அம்மனைப் பற்றிச் சொல்லும் போதும் இ தை சொல்லியிருக்கிறார்.
மிருத்யுஞ்சயன் என்று ஒரு ஸ்வாமி. ஈஸ்வரனுடைய ஒரு விதம். பதினாறு வயதில் ஒரு மார்க்கண்டேயர். வயது முடிந்தவுடனயே எமன் வந்தபோது ஈஸ்வரனை பக்தி செய்தார். எமன் வந்தார். ஈஸ்வரனுடைய அருள் இருந்ததனால் ஒன்றும் செய்ய முடியவில்லை. பக்திக்காக ஈஸ்வரன் இவருக்கு ஆசி புரிந்தார். அந்த மிருத்யுஞ்ஜயரைப் பற்றிச் சொல்லும்போது அந்த தீபத்தைப் பற்றியும் சொல்லி எப்படியெல்லாம் தீபம் இருக்க வேண்டும் என்றும் சொல்லியிருக்கிறார்.
ஒரு தீபத்திலிருந்து இன்னொரு தீபம் எரிவது போல் ஞானம் தொடர்ந்து வந்துகொண்டே இருக்க வேண்டும் என்பது தாத்பர்யம். அதையும் நம்முடைய
உருவ வழிபாட்டில் சேர்த்தார்கள், பல தீபங்களைப் பற்றியும் பல நூல்களிலும் சொல்லியிருக்கிறார்கள்.
'மாதா ச பார்வதீ தேவீ, பிதா தேவோ மஹேஸ்வரா:' என்பத ஸ்லோகம். அதேதான், 'சொல்லும் பொருளும் என் நடமாடும்' என்று ஆதீ தம்பதிகள் என்று பெயர். வால்மீகி முனிவர் ஆதிகவி. ஒருவர் புரிந்து கொள்வதற்காகப் பேசுகிறோம். நம்முடைய இலக்கியங்கள் எல்லாம் பாட்டில் இருக்கிறது தேசிகர் விருத்தம், கலிவெண்பா, கட்டளைக் கலிவெண்பா, சக்கர பந்தம் இப்படிப் பல முறைகளில், வெண்பாக்களில் அமைந்திருக்கிறது, எழுத்துக்களில் குறில் நெடில் எல்லாம் வைத்து வெவ்வேறு விருத்தங்கள் அமைந்திருக்கின்றன. அந்தாதி என்று சொல்லுகிறோம், அதுபோல் பல விதங்களில் அமைந்துள்ளது. முதல் முதலில் பாட்டு என்று அமைத்தவர் வால்மீகி முனிவர். அவர்தான் முதல் முதலாக ராமாயணத்தை எழுதியவர். முதலில் மனிதன் எழுதிய பாட்டு என்றால் அதுதான்.
அதுபோல் பார்வதி பரமேஸ்வரன் இரண்டு பேரும் ஆதி தம்பதிகள். 'ஏகபிம்பம் சிவார்ப்பணம்' என்பதாக பக்தியோடு சமர்ப்பிக்க வேண்டும். சுதோஷி என்று பெயர். ஒரு தும்பைப்பூ. அது இருந்தாலே சந்தோஷப்படக்கூடியவர் ஸ்வாமி, சிவ சிவ சிவ சிவ என்று சொன்னாலே போதும். கங்காதரர் அவர் ,ஒரு புனிதமான எண்ணத்தைக் கொடுக்கக்கூடிய, பாவங்களைப் போக்கக்கூடிய கங்கையை நமக்காகத் தரித்துக் கொண்டிருப்பவர், அவருக்கு கங்கையினால் ஆகவேண்டியது ஒனறுமில்லை. அவருக்கு எந்தப் புனிதத் தன்மையும் வேண்டியதேயில்லை. மனிதர்கள், இந்த உலகத்திலே இருக்கக்கூடியவர்கள், நல்லதொரு மனதுடன் இருக்கவேண்டும், பாவங்கள் நீங்க இருக்கவேண்டும் என்பதற்காக, பகீரதன் தவம் பண்ணினதை ஏற்றுக்கொண்டு அதற்காகத் கங்கையைத் தருவித்துக் கொடுத்தவர். அதனால் கங்காதரன் என்று பெயர்.
அம்பாள், இந்த அம்பாளுடைய கருணையானது தனியானது, முனிவர்கள் எல்லோரும் அம்பாளுடைய பக்தியைச் செய்த ஞானத்தைச் செய்திருக்கிறார்கள். இந்திரனுக்கு ஞானத்தை உபதேசித்தவள் அம்பாள். ஆதி சங்கரர் சௌந்தர்ய லஹரியெல்லாம் செய்திருக்கிறார். காமாட்சியம்மனிடத்திலே ஸ்ரீ சக்ரப்பிரதிஷ்டை செய்திரூக்கிறார். அதே போன்று திருவானைக்கா. அது நீரைச் சேர்ந்த ஸ்தலம். அங்கே அம்பாளுக்கு காதணிகள் இருக்கிறதே, அதை தாடங்கம் என்று சொல்லுவார்கள். அந்த தாடங்கத்தை அணிவித்தவர். இதுபோன்று பல இடங்களிலே ஆதிசங்கரர் பக்தி செய்திருக்கிறார்.
காளிதாஸர் சாதாரணமாக இருந்து, அம்பாளுடைய அருளினாலே பெரிய மகாகவி ஆனவர். காஞ்சிபுரத்திலே ஒருவர் ஊமையாக இருந்தார். அம்மனின் அருளாலே பேசும் சக்தி பெற்றார், பாடினார். வேறு யாரைப் பற்றியும் பாடவோ பேசவோ விரும்பாமல் இதுவே போதும் என்று இருந்துவிட்டார். ஐந்து விதங்களிலே அம்மனைப் பற்றிப் பாடியிருக்கிறார். ஐநூறு பாடல்கள். அதில் ஒரு பகுதியில் அம்மனுடைய பாதங்களை, மந்தஹாஸத்தை (புன்னகை) கடாட்சத்தை (பார்வை) எல்லாவற்றையும் பற்றி நூறு நூறு எழுதியிருக்கிறார். அந்த அளவுக்கு பக்தியினுடைய மகிமை !
ஐம்பத்தி ஒரு சக்தி பீடங்கள் இருக்கின்றன. அம்பாதி என்ற ஊரிலே ஐம்பது
ஷேத்திரங்கள் இருக்கின்றனவே அதற்கெல்லாம் சேர்த்த மாதிரி கோயில் கட்டியிருக்கிறார்கள். குஜராத்தில் இருக்கிறது காமாட்சியம்மன் கோயில். இமயமலை, காஞ்சீபுரம் என்று எங்கெங்கெல்லாம் அம்மனுடைய சக்தி பீடம் இருக்கிறதோ அதற்கெல்லாம் கோயில் கட்டியிருக்கிறார்கள்.
இப்படி அம்பாளுடைய பக்தர்களாக விளங்கியவர்கள் எல்லோரும் பெரிய ஞானிகளாக விளங்கியிருக்கிறார்கள் அகத்தியர். தெய்வீகத்துக்கும் தமிழ் மொழிக்கும் முக்கியமானவர் அந்த அகத்திய முனிவருடைய தர்மத்தின் லோபாமுத்திரை. இந்த லோபாமுத்திரை அம்மனுடைய பக்தை. இதுபோன்று பெரியவர்கள் எல்லாம் நிறைய பக்தி செய்து அவரவர்களுக்கு வேண்டிய அறம், பொருள், இன்பம், வீடு என்று சொல்லக்கூடிய எல்லா வகையிலும் பயன் பெற்றிருக்கிறார்கள். இந்த ஊரிலே வெள்ளிக் கிழமைகளிலே சுவாமிக்கும் அம்பாளுக்கும் பூஜைகள் எல்லாம் நடைபெற்றிருக்கிறது. முன்பிருந்த பெரியவர்கள் எல்லாம் இந்த ஊருக்கு வந்து செய்திருக்கிறார்கள். இந்த ஊரைச் சேர்ந்தார்கள் எல்லாம் பெரிய பெரிய விழாவெல்லாம் நடத்தினார்கள். எல்லோருமே தினமும் காலையிலும் சாயங்காலமும் ஐந்து நிமிஷம் தீப வழிபாடு செய்து, இறைவனுடைய பெயரை வெட்கமில்லாமல் பக்தியோடு, உரக்கச் சொல்லி பிரார்த்தனை செய்துகொண்டு, நல்ல புத்தியைக் கொடுக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து, அதன் மூலம் எல்லோரும் சிறந்து விளங்க வேண்டும் என்று வாழ்த்தி ஆசிர்வதிக்கின்றோம்.

Varamtharuvai Iraiva - December 26, 2013

Friday, 21 February 2014

அருகம் புல் ரகசியங்கள்

அருகம்புல் ரகசியங்கள்



ஆல்போல் தழைத்து அருகு (அறுகு) போல வேரூன்ற வேண்டும் என்று தமிழர்கள் வாழ்த்துவதை அறிவோம். ஆலமரம் மிகப்பெரிய மரமாக வளர்ந்து விழுதுகள் மூலமாக காலம் காலமாக வாழ்வதை நாம் அறிவோம் (காண்க எனது முந்தைய கட்டுரை: இந்திய அதிசியம்- ஆலமரம் )

வரலாறு, தொல்பொருட் துறை அறிஞர் டாக்டர் இரா.நாகசாமி ஒரு அரிய தகவலைத் தருகிறார்: அருகம் புல், புல் வகைகளில் அரசு போன்றது. ஆகையால் ராஜாக்கள் பட்டாபிஷேக தினத்தன்று அருகம் புல்லை வைத்து ஒரு மந்திரம் சொல்லுவார்கள். ‘’அருகே, புல்களில் நீ எப்படி சிறந்து விளங்குகிறாயோ அதே போன்று மன்னர்களில் நானும் சிறந்தோன் ஆகுக’ எணன்று முடி சூடும்போது மன்னன் கூறவேண்டும் என்று வடமொழி நூல்கள் கூறுகின்றன’ (பக்கம்26, யாவரும் கேளிர், டாக்டர் இரா நாகசாமி)


அருகம் புல் ரகசியங்களை இந்துக்கள் ஆதியிலேயே அறிந்திருந்தனர். நெல்லும் புல்லும் ஒரே வகைத் தாவரம் தான். ‘கிராமினே’ என்ற குடும்பத்தைச் சேர்ந்த 11,000 வகைத் தாவரங்களில் தர்ப்பைப் புல்லுக்கும் அருகம் புல்லுக்கும் மட்டுமே தனி இடம் கொடுத்தனர். பிள்ளையாருக்கு ஏற்றது அருகம் புல். நவக் கிரக ஹோமங்களில் கேது கிரகத்துக்கு சாந்தி செய்யும்போது அருகம் புல்லை ஹோமத் தீயில் இடுவர். கேது கிரகத்துக்குப் பிள்ளையார் அதி தேவதை.

மார்கழி மாதத்தில் வீட்டு வாசலில் அருகம்புல்லையும் சாணியில் நட்டுவைப்பர். அருகம் புல் இருந்தால் சாணியில் புழுப்பூச்சிகள் வராது. அருகம் புல்லுக்கு வடமொழியில் தூர்வா என்று பெயர். இப் பெயர் கணபதி மந்திரங்களிலும் உபநிஷத்திலும் வருகிறது. பிள்ளையாரை தூர்வாப் ப்ரியாய நம: என்று சொல்லி வழிபடுவர்.

2000 ஆண்டுப் பழமையான சங்கத் தமிழ் இலக்கியத்திலோ தொல்காப்பியத்திலோ ‘சிவன்’ என்ற சொல்லே கிடையாது. அதே போல பிள்ளையார் பற்றிய குறிப்பும் கிடையாது. ஆனால் கபிலர் என்ற பிராமணப் புலவரின் பெயர் ரிஷி முனிவர்களுக்கும் உண்டு. பிள்ளையாருக்கும் உண்டு. பகவத் கீதையில் கண்ணபிரான் (9-26) ‘எனக்கு பத்ரம் புஷ்பம், பலம் தோயம்= இலை, பூ, பழம், தண்ணீர்’ எதைக் கொடுத்தாலும் நான் அதை ஏற்றுக்கொள்வேன் என்று கூறுகிறார். இதையே கபிலரும் (புறம் 106)

‘’புல் இலை எருக்கம் ஆயினும், உடையவை

கடவுள் பேணேம் என்னா’’ என்று கூறுகிறார்.

புல், இலை, எருக்கு ஆகிய எதைப் போட்டு பூசித்தாலும் கடவுள் வேண்டாம் என்று சொல்லாது என்று கபிலர் கூறியதை எனது ‘’புறநானூற்றில் பகவத் கீதை’’ என்ற கட்டுரையில் ஏற்கனவே கொடுத்துவிட்டேன். இங்கு பிள்ளையாரின் ஒரு பெயரான ‘’கபிலர்’’ என்ற பெயரைக் கொண்ட புலவர், புல், இலை, எருக்கம் என்று கூறுவதைப் பார்த்தால் இது மூன்றும் பிடித்த ஒரே கடவுள் பிள்ளையார்தான்!

புல் என்பது அருகம் புல்லையும், பத்திரம் என்பது விநாயகருக்குப் பிடித்த 21 வகை இலைகளையும், எருக்கம் என்பது எருக்கம் பூவையும் குறிக்கலாம்.

மாணிக்கவாசகர் புல்லாகிப் பூண்டாகி என்று பாடுவதிலும் பொருள் உளது. இன்னொரு உண்மை என்னவென்றால் இறந்தவன் மறுபிறப்பு எடுப்பது எப்படி என்று கூறும் உபநிஷத்துகள் நமது ஆன்மா மழை மூலம் புல்லை அடைந்து, பசுவின் வயிற்றை அடைந்து பாலாக மாறி தாயின் வயிற்றில் கரு மூலமாகப் புகும் என்றும் சொல்லப்பட்டிருப்பதும் கவனிக்கப் படவேண்டியது.

பாம்பு- கீரி சண்டை மர்மம்

பாம்பும் கீரியும் பரம எதிரிகள். இரண்டும் ஒன்றை ஒன்று பார்த்தால் தாக்கிக் கொல்லாமல் விடா. பாம்பு கடிக்கும் போது விஷத்தைப் போக்குவதற்காக ஒவ்வோரு முறையும் கீரி, அருகம் புல் மீது படுத்துப் புரண்டு சக்தி பெறும் என்பதும் கவனிக்கத்தக்கது.

அருகம் புல் பெயரிலேயே சக்தி கொடுக்கும் சூரியன் பெயரும் (அருகன்) இருக்கிறது. அருகன்=சூரியன்=ஆர்கோஸ் (கிரேக்கம்)= பர்கோ தேவஸ்ய( காயத்ரி மந்திரம்) எல்லாம் ஒன்றுக்கு ஒன்று தொடர்புடைய சொற்கள்.

இலங்கை மக்களும் நாட்டார் சமூகத்தினரும் அருகின் பெருமையை நன்கு அறிவர். இலங்கையில் குழந்தைகளுக்கு ‘’பால் அரிசி’’ வைப்பார்கள். பள்ளிக்குப் போகும் முன் குழந்தைகளுக்கு பாலில் அருகம் புல்லைத் தோய்த்து வாயில் விடுவர்.

கல்யாண காலங்களில் மணமக்களை வாழ்த்தி அருகரிசி போடுதலும் உண்டு.

மருத்துவ குணங்கள்

மிருகங்களில் பலம் வாய்ந்ததும், வேகம் மிக்கதும், பலன் தருவதும் சாக பட்சிணிகள் தான்; அதாவது சைவ உணவு சாப்பிடுபவையே; .யானை, குதிரை, காண்டாமிருகம், பசு ஆகிய அனைத்தும் சைவ உணவு, குறிப்பாக அருகம் புல் முதலியனவற்றை சாப்பிடுபவை. குதிரை, முயல், காட்டுப் பன்றி ஆகியன அருகம் புல்லை விரும்பிச் சாப்பிடும். இவை அனைத்தும் அபார வேகம் மிக்கவை. அத்தனைக்கும் அருகம் புல் ‘பெட்ரோல்’ மாதிரி.

நோய் வந்தால் பூனை, நாய், கோழி ஆகியன கூட அருகம்புல்லைக் கடித்துத் துப்புவதைக் காணலாம்.

அருகம் புல் பற்றிய புராணக் கதையும் கூட அதன் குணத்தைக் காட்டும். அனலாசுரன் என்பவன் நல்லோர் அனைவர்க்கும் துன்பம் செய்தான். எல்லோரும் பிள்ளையாரை வேண்டவே அவர் அனலாசுரனை விழுங்கிவிட்டார். பெயருக்கு ஏற்றவாறே அவன் அவர்க்கு வயிற்றில் அனலை உண்டாக்கி எரிச்சல் தரவே, பிள்ளையாரும் அருகம் புல்லைச் சாப்பீட்டே குணம் அடைந்தார்.

அருகம் புல் சாற்றை காலையில் அருந்துவது நல்லது. இது மலச் சிக்கல், உடலில் உள்ள விஷம் ஆகியவற்றை நீக்கும்.தோல் நோய்கள், மார்பு, நுரை ஈரல் தொடர்பான நோய்கள், ஜனன உறுப்புகள் சம்பந்தமான நோய்களைக் குணப்படுத்தும்.

ஜெர்மனி போன்ற நாடுகளில் புல் சாற்றைக் கலந்தும் ரொட்டி செய்கிறார்கள். மக்கள் அதை விரும்பி வாங்குகிறார்கள். நாமும் அருகம் புல் தோசை, சப்பாத்தி, ரொட்டி ஆகியவற்றை செய்யலாம். புல் வகைகளை உணவாக உட்கொள்ளுதல் பற்றி தனி புத்தகமே ஆங்கிலத்தில் இருக்கிறது. ஒரு வேளை ஆங்கிலப் புத்தகத்தில் ஆங்கிலேயர் சொன்னால் தான் நம்மவர்களுக்குப் புரியும் போல இருக்கிறது.

பிரதமர் இந்திராகாந்தி வெளிநாட்டுக்குச் சென்றபோது அவருக்கு பரிசாக அளித்த கம்பளம் இந்தியாவில் செய்யப்பட்டது (மேட் இன் இண்டியா) என்று எழுதப்பட்டதை அவரே ஒரு கூட்டத்தில் குறிப்பிட்டார்.அது போல அருகம்புல்லும் ‘பாரீன்’ சரக்காக வரும் நாள் வெகு தொலைவில் இல்லை.

அபிதான சிந்தாமணி தரும் தகவல் (பக்கம் 109)

அறுகு: ஒரு விதமான பூண்டு. இதைக் கஷாயம் செய்து மிகவும் விருப்பமான உருசியுள்ள, குளிர்ச்சியுண்டாக்குகிற குடிநீராக உபயோகப் படுத்துகின்றனர். இது உப்பறுகு, கூந்தலறுகு, சிற்றறுகு, புல்லறுகு, பேரறுகு, பானையறுகு, வெள்ளறுகு என பேதப்பட்டு குணங்களும் மாறுபடும். இது தேவர்கள் பொறுட்டு அநலாசுரனை விநாயகர் விழுங்கிய காலத்து வெப்பம் தணிவுற முனிவர் பூசித்தலாலும், விரோசனையால் விநாயக மூர்த்தி பசியாக வந்த காலத்திற் பசி தணிய நிவேதிக்க இட்டமையாலும், ஆசிரியை எனும் ரிஷி பத்தினியால் தேவேந்திரனிடம் துலை ஏறப்பெற்றுத் துலையில் தேவேந்திரன் செல்வத்தினும் உயர்ந்தமையாலும், தருப்பையில் ஒன்றாதலாலும் ஏற்றமுடைத்தாம் (விநாயக புராணம்) துலை= தராசு
Infromation from : http://tamilandvedas.wordpress.com/
Contact: swami_48@yahoo.com

எழுதியவர்- லண்டன் சுவாமிநாதன்

Wednesday, 19 February 2014

தங்கள் பகுதியில் சிதிலமடைந்த நிலையில்

https://www.facebook.com/giridharan.mahadevan.3

பாரத தேசத்தில் எண்ணற்ற பழமையான கோயில்கள் உள்ளன. அதிலும் தமிழ்நாட்டில் உள்ளகோயில்கள் எண்ணிக்கை பாரத நாட்டில் உள்ள பிற மாநிலங்களில் இருக்கும் கோயில்களைவிட அதிகம் .குறிப்பாக தமிழகத்தில் உள்ளகோயில் மூர்த்தங்கள் சித்தர்கள் ,முனிவர்கள் ,தேவர்கள் போன்றோருக்கு காட்சிகொடுத்து அவர்களால் பூஜிக்கப்பட்டு கோவில்களாக
உருமாறின.இது தவிர பண்டைய அரசர்களால் கட்டப்பட்டகோயில்கள கணக்கில்லாதவை .இத்தகைய புனிதமான சக்திவாய்ந்த பலகோயில்கள் இன்று கவனிப்பாரற்று பூஜைகளின்றி இருக்கின்றன . 

பலகோயில்கள் முற்றிலும் இடிந்துபோய் ஸ்வாமி சிலை மட்டும் இங்குமங்கும் சிதறி கிடக்கின்றன .ஒரு காலத்தில் நன்கு வழிபடப்பட்ட கோயில்கள் இன்று பரிதாப நிலையில் உள்ளன...ஆழ்வார்களும் நாயன்மார்களும் வழிபட்ட கோயில்கள் பல நித்ய பூஜைகள் இல்லாமல் இடிந்தும் கவனிப்பாரற்றும் இருக்கின்றன .தற்காலத்தில் புதிது புதிதாக கோயில்கள் கட்டப்பட்டு நன்றாக பராமரிக்கப்பட்டு வரும் நிலையில் பழைய பவித்திரமான சக்திவாய்ந்த கோயில்கள் அவல நிலையல் உள்ளன. இந்த நிலை மாற வேண்டும் . பழைய கோயில்கள் முன்பு இருந்த அளவில் இல்லாவிட்டாலும் சிறிய அளவில் உருவாக வேண்டும்.


இந்நிலையில் காஞ்சி காமகோடி பீடம் பூஜ்யஸ்ரீ ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய ஸ்வாமிகள் மற்றும் பூஜ்ய ஸ்ரீ சங்கர  விஜயேந்திரசரஸ்வதி சங்கர ஆச்சர்யர் ஸ்வாமிகள் ஆகியோரது பெரு முயற்சியால் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு அவை தம் பணிகளை துவக்கி விட்டன . சிதிலமடைந்த ஆலயங்களை கண்டறிய ஒரு குழுவும், அவ்வாறு கண்டறியப்பட்ட ஆலயங்களில் அந்தந்த ஊர் மக்களின் ஒத்துழைப்புடன் மீண்டும் வழிபாடுகளை தொடங்க ஒரு குழுவும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன .


இதுவரை காஞ்சிபுரம மாவட்டத்தில் கண்டறியப்பட்ட, சிதிலமடைந்த ஆலயங்களில் மீண்டும் வழிபாடுகளை நடத்திடசெய்ய பணிகள் நடைபெற்று வருகின்றன .இதனை கண்ணுறும் அன்பர்கள் தங்களுக்கு விருப்பமிருப்பின் தாங்களும் இப்பணியில் இணைந்துகொள்ள வசதியாக தங்கள் பெயர், மின்னஞ்சல் முகவரி , தொலைபேசி எண் அகியவற்றை தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம் . மேலும் இத்தகைய புராதனமான ஆலயம் ஏதும் தங்கள் பகுதியில் சிதிலமடைந்த நிலையில் இருக்குமானால் அதுபற்றி தெரிவிக்குமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

GIRIDHARAN M
MOBILE NUMBER:+91-7200086562
Email id: 1918shirdibaba@gmail.com

YOUR CONTRIBUTION CAN BE VIA

Account Name: GIRIDHARAN M
Bank Name: STATEBANK OF INDIA
Branch : SAIBABACOLONY BRANCH(4792)
Savings Bank Account No: 11200621292
Ifsc:-SBIN0004792

பிரம்மகத்தி தோஷம்

பிரம்மகத்தி தோஷம் நீங்க பரிகார பூஜை!



மேல் மலையனூரில் அமாவாசை தினத்தன்று லட்சக்கணக்கான பக்தர்கள் ஊஞ்சல் உற்சவத்தை காண வருவது வழக்கம். ஏன் அன்று மட்டும் அவ்வளவு பக்தர்களின் கூட்டம் என நம் மனதில் கேள்வி எழலாம். அதற்கு காரணம், மேல்மலையனூர் சக்தி புராணங்களில் மிகவும் முக்கியமானது. இதில் உலக ஜீவன்களுக்கு படி அலக்கும் சிவனுக்கோ பிரம்ம தோஷம் பிடிக்கிறது.
bhama hasti dosham pariharam பிரம்மகத்தி தோஷம் நீங்க பரிகார பூஜை!
அந்த பிரம்ம தோஷம் ஆனது சிவன் ராத்திரி அடுத்த நாள் மயானக் கொள்ளை அன்று ஸ்ரீ அங்காள பரமேஸ்வரியால் சிவனுக்கு பிரம்ம தோஷம் நீங்குகிறது. ஆகையால் மேல்மலையனூர் சக்தி புராணங்களில் இடம் பிடித்தது. அமாவாசை சிவம் ராத்திரிக்கும் என்ன தொடர்பு என கேள்வி எழுகிறது.
சரவணன் என்ற பூசாரியிடம் கேட்ட போது அவர் கூறிய பதில் அமாவாசைக்கு முன்பு சிவன் ராத்திரி என்றும் அன்று மறுநாள் அமாவாசை அன்று சுடுகாட்டில் அம்மனை சாந்தி படுத்த படையலிட்டு பொறி, கடலை, கொழுக்கட்டை போன்றவற்றை படையலிட்டு பிரம்மன் தலைக்கு இறைப்பது வழக்கம்.
மற்றும் அன்று இரவு அம்மனை ஊஞ்சலில் அமரவைத்து தாலாட்டு பாடல்கள் பாடி அம்மனை சாந்தி படுத்துவார்களாம். அமாவாசை அன்று வழக்கமாகவே அம்மன் உக்கிரமாக இருப்பாள் என்றும் அம்மனை சாந்தி படுத்தவே ஊஞ்சல் உற்சவம் நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது. அதனால் அன்றைக்கு வரும் பக்தர்களுக்கு அம்மன் அருள் பூர்ணமாக கிடைப்பதாக நம்பப்படுகிறது.
ஏவல், பில்லி சூனியம் நீங்கியும் நினைத்த காரியங்கள் நடை பெறுவதாகவும் மக்கள் நம்புகின்றனர். மாதம் மாதம் ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது. மேல்மலையனூர் ஸ்ரீ அங்காளம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களில் பெரும் பகுதியினருக்கு மூலஸ்தானத்தில் அம்மன் காலடியில் உள்ள தலை பற்றி தெரிந்திருப்பதில்லை.
பிரம்மனால் படைக்கப்பட்ட எந்த உயிரையும் கொன்றாலோ அல்லது அழித்தாலோ பிரம்ம கத்தி தோஷம் பிடிக்கும் என்று திருவிளையாடல் புராணத்தில் கூறப்படுகிறது. எனவே இந்த ஜென்மத்தில் நாம் தெரிந்தோ தெரியாமலோ உயிர்களை கொன்று இருக்கலாம். இதனால் பிரம்மகத்தி தோஷம் பிடிக்க வாய்ப்பு உள்ளது.
நீங்களும் சிவன் போல் பித்து பிடித்து அலைய வேண்டாம். இதற்கு பரிகாரம் மேல்மலையனூரில் நடக்கும் மாசி மாதம் அமாவாசை நாளில் சென்று இரவு தங்கினால் உங்களுடைய பாவங்கள் நீங்கும். பிரம்மகத்தி தோஷமும் நிவர்த்தியாகும்.
பிரம்மனின் தலைகளில் ஒன்றை கொய்த சிவபெருமானுக்கு பிரம்ம கத்தி தோஷம் பிடித்த இந்த பிரம்ம கத்தி தோஷம் மேல்மலையனூரில் நடக்கும் மயான கொள்ளையின் போது நிவர்த்தியானது என்பது குறிப்பிடத்தக்கது.
thagaval upayam : http://tamilthoguppu.com/

Monday, 17 February 2014

அங்கிரஸ், பிரத்யங்கிரஸ் என்ற ரிஷிகள்

சக்தி வழிபாடு

ஹிரண்யகசிபுவை வதம் செய்த பின்னரும் நரசிம்மரின்
உக்கிரம் தணியவில்லை. இதனை கண்ட தேவர்கள்
அஞ்சி நடுங்கி பரமேஸ்வரனை தஞ்சமடைந்தனர்.

சிவபெருமான் சரபேஸ்வரராக உருவெடுத்தார். சரபம்
பாதி பறவை உருவத்தையும்
பாதி யாளி உருவத்தையும் கொண்ட பிரமாண்ட பறவை.
கூரிய நகங்களையும் பற்களையும் கொண்டது. சரபரும்
நரசிம்மமும் சண்டையிட்டனர். நீண்ட நாட்கள் நீடித்த
சண்டையை முடிவுக்கு கொண்டு வர எண்ணிய சரபர்
தனது இறக்கைகளில் ஒன்றாக இருந்த காளியை உக்ர
பிரத்யங்கிரா தேவியாக அவதாரமெடுக்க செய்தார்.

நரசிம்மருக்கும் சரபருக்குமிடையே உக்கிரமாக
சண்டை ஏற்பட்டபோது கண்ட பேருண்டம் என்ற பட்சியின்
உருவில் நரசிம்மம் யுத்தம் செய்தார்.
கண்ட பேருண்டம் சரபப் பட்சிக்கு கடும்
எதிரியாகும். மிகுந்த கோபத்தில் இருந்த
சரபருக்கு அவர் நெற்றிக் கண்ணிலிருந்து உக்கிரப்
பிரத்தியங்கிரா என்ற பத்திரகாளி உதித்தாள். இவள்
கண்ட பேருண்டத்தின் சக்தியை விழுங்கி விட்டாள்.
இதை உமாபதி சிவம் தன் ‘குஞ்சிதாங்க்ரி ஸ்தவம்’
எனும் துதியில் குறிப்பிட்டுள்ளார்.

சரபேஸ்வரரின்
சக்திகளாக விளங்குபவர்கள் பிரத்தியங்கிராவும்
சூலினியும். இவர்கள் இருவரும் சரபரின் மனைவியர்.
இருவரும் சரபருக்கு இரு இறக்கைகளாக
விளங்குகின்றனர்.
பிரத்தியங்கிரா என்பது பத்ரகாளியேதான்.
சரப மூர்த்தி நரஸிம்மத்தை அடக்க உதவ வந்த
சக்தி இவளே. பயங்கரமானத் தோற்றத்தின் காரணமாக
உக்ரா என்று அழைக்கப்படுகிறாள். நரசிம்மர்
சாந்தமானார். தான் சிவபெருமானுடன்
சண்டையிட்டதை எண்ணி வருந்தி, சிவனை 18
ஸ்லோகங்களால் துதித்தார். இந்த 18
ஸ்லோகங்களே சரபேஸ்வரரின் அஷ்டோத்திர நாமாக்கள்.

இந்த அம்பிகையின் மந்திரத்தைக் கண்டுபிடித்தவர்கள்
அங்கிரஸ், பிரத்யங்கிரஸ் என்ற ரிஷிகள். இத்தேவியின்
நாமமே அந்த இரு ரிஷிகளின் பெயர்களிலும் உள்ளன.
தக்ஷ யக்ஞத்தை அழிக்க சிவபெருமான் அனுப்பிய
வீரபத்திரருக்கு துணையாக இருந்து உதவியவள்
பிரத்யங்கிராதான்.
குரோதத்திலிருந்து உதித்தவளாதலால்
இவளுக்கு குரோத சம்பவாயா என ஒரு திருநாமமும்
உண்டு.
சிவ த்வேஷத்தை ஒழிக்க இவள் உதித்ததால்
உலகிற்கே மங்கலம் ஏற்பட்டது. இவளை உபாசித்து இவள்
அருளைப் பெற்றுவிட்டால் அந்த ராம லக்ஷ்மணர்கூட
தன்னை வெல்ல முடியாது என்பதை உணர்ந்த இந்திரஜித்,
நிகும்பலை என்ற இடத்தில் மிக ரகசியமாக யாகம்
செய்தான். தன்னை உபாசிப்பவன்
நல்லவனா கெட்டவனா என்பதை கவனிக்கக் கூடியவள் அல்ல
இவள். பிரத்யங்கிராவின் அருள்
இந்திரஜித்திற்கு கிடைத்து விட்டால் அவனை யாரும்
வெல்ல முடியாது என்பதை ஜாம்பவான் மூலம் அறிந்த
ஆஞ்சநேயர் அந்த யாகத்தை முதலில்
அழித்துவிட்டுதான் மறுவேலை பார்த்தார்.
இவளை உபாசிப்பவர்கள் கடன்,
சத்ரு தொல்லைகளிலிருந்து மீள்வர்.
16 செல்வங்களையும் பெற்று பெரு வாழ்வு வாழ்வர்.
பில்லி, சூனியம், ஏவல், செய்வினைகள் போன்ற
அனைத்து தீயவினைகளையும் தீர்ப்பவள்
பிரத்யங்கிரா தேவி. இவள் பத்ரகாளியின் அம்சம்.
பிரத்யங்கிரா தேவிக்கான திருக்கோயில்
கும்பகோணத்திலிருந்து சுமார் 9 கி.மீ. தொலைவில்,
ராகு தோஷ பரிகாரத் தலமான திருநாகேஸ்வரம்
மற்றும் திவ்ய தேச தலமான ஒப்பிலியப்பன்
திருக்கோயில் அருகில் அமைந்துள்ளது. ஆலய
அமைவிடத்தின் பெயர் ஐவர்பாடி. பஞ்ச பாண்டவர்கள்
இத்தலம் வந்து தேவியை பூஜித்து அருள் பெற்றதால்
இப்பெயர். பின்னர்
இதுவே மருவி அய்யாவாடி என்றானது.
தேவி சிங்க முகத்துடனும் கரிய உடலுடனும்
சிறிய கண்களுடனும் கைகளில் சூலம், கபாலம்,
டமருகம், பாசம் போன்ற ஆயுதங்கள் ஏந்தியும் நீல நிற
ஆடை உடுத்தி, தனது வலது காலை தொங்கவிட்டு,
இடது காலை மடித்து சிங்கத்தின்
மீது சிம்மவாகினியாய் வீற்றிருந்து திருவருள்
பாலிக்கின்றாள். அகோர ரூபம் என்றாலும்
தேவி இங்கு சர்வமங்களங்களையும் அருளும் குணம்
கொண்டவள். பயம் நீக்குபவள். எந்தவித பயம்
ஏற்பட்டாலும் இத்தேவியின் நாமத்தை சொல்ல அந்த
பயங்கள் தீர துணையிருப்பவள்.
கேட்டவர்க்கு கேட்டதை அருளும் இவள்
பக்தருக்கு உறுதுணையாய் கூடவே இருப்பவள். பஞ்ச
பாண்டவர் இந்த தேவியை பூஜித்ததன் சாட்சியாக
இத்தலத்தில் உள்ள தல விருட்சம் ஐந்து விதமான
இலைகளை கொண்டுள்ளது.
முற்பிறவி வினைகள், தீராத நோய்கள், குழப்பங்கள்,
கஷ்டங்கள் தீர்க்கும

ஐவர்பாடி எனும் அய்யாவாடி.
பிரத்யங்கிராதேவி பிரத்யங்கரஸ், பால
பிரத்யங்கிரா, பிராம்மி பிரத்யங்கிரா, ருத்திர
பிரத்யங்கிரா, உக்கிர பிரத்யங்கிரா, அதர்வண
பிரத்யங்கிரா, சிம்ம முகக் காளி, மும்முக
ப்ரத்யங்கிரா, ஸ்ரீ மகா பிரத்யங்கிரா என
ஒன்பது விதமாக வழிபடப்படுகிறாள். கலியுகக்
கடவுளான இவளை உபாசிப்பவர்கள் கல்வி,
வேள்விகளில் சிறந்து விளங்குவர்.
இவளை பூஜிப்பவரை,
தம்மை பூஜிப்பவர்களாகவே தேவர்கள்
எண்ணி அருள்பாலிப்பர். தேவியை பூஜிப்பவர்
பிரம்மன், விஷ்ணு, சிவன், கௌரி, லட்சுமி, விநாயகர்
அனைவரையும் பூஜித்த பலன்களை பெறுவர். உக்கிர
தெய்வமாக காணப்பட்டாலும்
இவளது திருவுருவத்தை வீட்டின் பூஜை அறையில்
வைத்து வழிபடலாம்.

‘‘ ஓம் க்ஷம் பக்ஷ ஜ்வாலாஜிஹ்வே கராள
தம்ஷ்ட்ரே
ப்ரத்யங்கிரே க்ஷம் ஹ்ரீம் ஹூம்பட்’’

என்ற இவளது மூல மந்திரத்தை தொடர்ந்து ஜெபித்து,
இவளது தியான மந்திரம், அஷ்டகம், பஞ்சகம்
சொல்லி தினமும் வழிபட குடும்பத்தில்
அமைதி நிலவும். பகைவர் தொல்லைகள் அறவே தீரும்.
தீயவர்கள் சேர்க்கை இல்லாது போகும். தீவினைகள்
நெருங்காது. அனைத்து தோஷங்களும் விலகி ஓடும்.

நல்ல எண்ணங்கள் பிறக்கும். அஷ்ட ஐஸ்வர்யங்களும்
கைகூடும். அமாவாசை, பௌர்ணமி தினங்களில்
நடைபெறும் யாகத்தில் கலந்து கொள்வதும்
இவளுக்கு மிகவும் பிரீதியான மிளகாயுடன்
தரிசனம் செய்வதும் மிகச் சிறந்த பலன்களை தரும்.
உக்கிர தேவியான இவளுக்கு மிளகாய், மிளகு போன்ற
காரமான பொருட்கள் மிகவும் ஏற்றவை.
பிரணவத்தில் இருந்து விரிவடைந்திருக்கும் இந்தத்
தேவியின் மூலமந்திரத்தை காயத்ரீ மஹா மந்திரம்
சொல்லுவதுபோல் ஐந்து இடைவெளி விட்டுச் சொல்ல
வேண்டும். அதாவது, ஓம் என்ற பிரணவத்தை தீர்க்க
ஸ்வரத்திலும் அடுத்த க்ஷம் என்பதை ஸ்வரித அதாவது,
குறுகிய ஸ்வரத்திலும் ஓம் க்ஷம்
என்று ஒரு இடைவெளியிலும்
பக்ஷஜ்வாலா ஜிஹ்வே என்று இரண்டாவது இடைவெளியிலும்
கராளதம்ஷ்ட்ரே என்று மூன்றாவது இடைவெளியிலும்
ப்ரத்யங்கரே என்று நான்காவது இடைவெளியிலும்
க்ஷம் ஹ்ரீம் ஹும்பட்
ஸ்வாஹா என்று ஐந்தாவது இடைவெளியிலும்
வைத்து ஒவ்வொரு இடைவெளிக்கும் இடைப்பட்ட காலம்
மூன்று மாத்திரை நேரம். அதாவது,
மூன்று செகண்டுகள்.
பிரத்யங்கிரா தேவி பயத்தை போக்குபவள். எந்தக்
காரணத்தினால் பயம் ஏற்பட்டாலும் இவள் நாமாவைச்
சொன்னாலே நிவாரணம் கிடைத்து விடும்.
பிரம்மானந்தத்தை அடைந்தவனுக்கு ஒரு விதமான
பயமுமில்லை என்பது ச்ருதி வாக்கியம்.
ஸம்ஸாரமே பயங்கரமானது.
இதிலிருந்து அம்பிகை விடுவிக்கிறாள்.
அகசம்பந்தமான பாவங்களை நீக்கக்கூடியவள் இவள்.
சம்சார பந்தத்திலிருந்து மீட்டு மோட்சம் தரக்கூடிய
தேவதையும் இவளே.

‘‘பீதம்மாம் நிதராம் அனன்ய சரணம் ரக்ஷ அனு
கம்பாநிதே
ப்ரஸீத பரதேவதே மம ஹ்ருதி ப்ரபூதம் பயம்
விதாரய’’

என தேவி மஹிம்ன ஸ்தோத்திரம் விளக்குகிறது.
அதை எவனொருவன் ஸ்ரீவித்யா உபாசகனைக்
குறித்து அபிசார கர்மா செய்கிறானோ
அக்கர்மாவை பிரத்யங்கிராதேவி தானாகவே திருப்பி விட்டு அவனைக்
கொன்று விடுகிறாள். அதர்வணவேதம் போற்றிப்
பணிந்திடும் பத்ரகாளிதேவி இவள். அதர்வண
பத்ரகாளியான இத்தேவியே எல்லா பலன்களையும்
பக்தர்களுக்கு அருளுவதோடு மகாமாயையாக
இருந்து திருமாலுக்கே மது-கைடபரை அழிக்க
வழி வகுத்தவள். மது-கைடபர் சிந்தையில் இவள்
புகுந்து அகம்பாவத்தை ஏற்படுத்தி, திருமாலிடமே,
‘எங்களுடன் இவ்வளவு தீவிரமாக போர்புரியும்
திருமாலே! உனக்கு என்ன வரம் வேண்டும்? கேள்,
தருகிறோம்’ என்று சொல்லவைத்தவள்.
திருமாலுக்கு வேலை சுலபமாயிற்று. ‘உங்கள்
இருவரையும் கொல்ல வரம் கொடுங்கள்’
என்று கேட்டு அவர்களை சம்ஹாரம் செய்தார்.
முக்தியை அடைந்த மகான்கள் இந்த
காளியை உபாசித்தவர்களே. மாயையை வெல்லவும்
மோட்சத்தை அடைவதற்கான தகுதியைப் பெறவும் இவள்
தயவு மிக மிக அவசியம். ராமகிருஷ்ண பரமஹம்ஸர்
கூட காளிமாதாவை உபாசித்தே கைவல்யபதம்
அடைந்தார். இருபது அட்சரங்கள் கொண்ட மூல
மந்திரமும், மாலாமந்திரமும் பிரபஞ்சசார தந்திரம்
எனும் நூலில் இடம்பெற்றுள்ளன. ஆயிரம் தலை, 2000
கைகள் என்றால் அவள் விச்வரூபி என்றே கொள்ள
வேண்டும். விஸ்வமென்ற ஸமஸ்த ஜகத்திலும்
பரவி இருப்பவள் என்று பொருள். இதை, ‘யதாஹி கதலீ
நாமத்வக் பத்ரான்யா ந த்ருச்யதே ஏவம் விஸ்வஸ்ய
நான்யத்வம் த்வத்ஸ்தா ஈஸ்வர த்ருச்யதே’
என்கிறது விஷ்ணு புராணம்.
ப்ராக பாவம் (முன்பு இல்லை); த்வம்ஸாபாவம்
(இனி இருக்கப் போவதில்லை) என்று பல பாவங்கள்
இருக்கின்றன. இவை எல்லாம் அம்பிகைக்கு இல்லை.
இதை பின்வரும் வாக்கியங்கள் விளக்குகின்றன:
ஸ பூர்வேஷாமயி குரு: காலேநா நவசச் சேதாத்
யோக ஸூத்திரம்
புமான் ஆகரசவத் வ்யாபீ ஸ்வாதிர்க்தம்
ம்ருஷா யத:
தேசத: காலதச் சாபி ஹ்யநந்தோ வஸ்துத:
ஸ்ம்ருத : ஸௌர ஸம்ஹிதை
கோபம் என்பது அற்ப குணம்தான். ஆனால், வீரபத்திரரின்
கோபம் தர்மாவேசமானது. சிஷ்ட பரிபாலன துஷ்ட
நிக்ரஹ வெறி அது. இதற்குப் பக்கத் துணையாக
இருந்தவள் பிரத்யங்கிரா. அம்பிகைக்கு ‘க்ரோத சமனீ’
அதாவது கோபத்தை நாசம் செய்பவள் என்று பெயர்.
‘கோபமுடையவர் செய்யும் தானம், யக்ஞம், தபஸ்,
உபாசனை எல்லாம் பச்சை மண்ணாலாகிய குடத்தில்
எடுத்த ஜலம்போல போய் விடுகிறது’
என்கிறது ஆபஸ்தம்ப ஸூத்திரம்.
தாருகனை அழித்தவளும் பத்ரகாளியான
பிரத்யங்கிராவே. தாருகனை அழிக்க சிவபெருமான்
சிருஷ்டித்த இவளுக்கு காலகண்டி என்று பெயர்
என்கிறது லிங்க புராணம்.
‘ஸ ஸர்ஜ காளீம் காமாரி : கால கண்டீம் காபர்தினீம்’ -
அப்போது அவள் ருத்ரனின் நெற்றிக்
கண்ணிலிருந்து தோன்றினாள் என்கிறது மார்க்கண்டேய
புராணம்.
அதர்வண வேதத்தில் மந்திர காண்டத்தில்
சௌகை சாகையில் 32 ரிக்குகளும் பிப்பலாத
சாகையில் 48 ரிக்குகளும் பிரத்யங்கிராவைப்
பற்றியவை. இத்தேவியைப் பற்றி நாரத தந்திரம் எனும்
நூலிலும் கூறப்பட்டுள்ளது. சரபர், பைரவர்
எல்லோருமே சிவாம்சம். பிரத்யங்கிரா பைரவரின் பட்ட
மகிஷி. ஸ்ருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரத்தை செய்வதால்
பரமசிவனுக்கு பைரவர் என்பது திருநாமம்.
அம்பிகையை பைரவரே பூஜித்ததால்
அம்பிகை மஹாபைரவபூஜிதா என்று வணங்கப்படுகிறாள்.
இது பத்மபுராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பைரவர்களின் அத்தனை வடிவங்களுக்கும் சக்தியாக
விளங்கி திருவருள் புரிபவள் பிரத்யங்கிரா.
லலிதாம்பிகை திருவருள் புரியும் ஸ்ரீபுரத்தின்
22, 23ம் பிராகாரங்களுக்கு நடுவில் மார்த்தாண்ட
பைரவர் வசிப்பதாக சொல்லப்படுகிறது.
தேவி உபாசகர்களிடம் விரோதம் பாராட்டுபவர்கள்,
தேவியின் பெயரால் உபாசகர்களை
ஏமாற்றுபவர்கள் போன்றோரின் கண்பார்வையை இவர் மங்கச்
செய்து விடுவார் என்று கூறப்பட்டுள்ளது. அந்தகன்
எனும் அசுரனை ஒழிக்க பைரவருக்கு உதவிய
சக்தி பிரத்யங்கிராவே.
தாரகன், தன் ரத்தம் கீழே சிந்தினால், அந்த
ஒவ்வொரு சொட்டு ரத்தத்திலிருந்தும் ஆயிரம்
அசுரர்கள் தோன்றும் வரத்தைப் பெற்றிருந்தான்.
ஒரு பெண் மூலம்தான் தனக்கு மரணம் சம்பவிக்க
வேண்டும் என்ற வரத்தையும் பெற்றிருந்தான்.

அவனைக்
கொல்ல விஷ்ணு வைஷ்ணவியையும்
பிரம்மா பிராம்மியையும் மகேஸ்வரன்
மாஹேஸ்வரியையும் குமரன் கௌமாரியையும் இந்திரன்
இந்திராணியையும் யமதர்மராஜன் வாராஹியையும்
ஷட்மாதர்களாக்கினர். அவர்கள் அறுவராலும்
தாருகனைக் கொல்ல முடியாமல் போனது.
அப்போது ருத்ரனின்
கண்களிலிருந்து பிரத்யங்கிரா பத்ரகாளி ஆவிர்பவித்தாள்.
அவளுடன் காளீ, காத்யாயனீ, சாந்தா, சாமுண்டா,
முண்டமர்த்தனி, த்வரிதா, வைஷ்ணவி, பத்ரா எனும்
எட்டு சக்திகளும் தோன்றி அனைவரும்
ஒன்றாகி தாருகனைக் கொன்றனர். சப்தசதியில் இந்த
மகாகாளிக்கு ‘ஐம்’ பீஜம் கொடுக்கப்பட்டுள்ளது.
காளியின் பீஜம் பொதுவாக ‘க்லீம்’ என்பதேயாகும். ஐம்
எல்லா ஞானத்தையும் குறிக்கும். ஞானத்தைத் தருபவள்
அதன் மூலம் ஆனந்தமும் தருகிறாள். எனவே ஐம் பீஜம்
இவளுக்கு தரப்பட்டுள்ளது. மகாலட்சுமி சத்
ரூபிணி. மகா சரஸ்வதி சித் ரூபிணி. சித் எனில்
அறிவு. மகா சரஸ்வதி அறிவுதரும் சக்தியாக
மட்டுமன்றி சிருஷ்டியை நடத்தி வைக்கும் பிரம்ம
சக்தியாகவும் விளங்குகிறாள்.

சிருஷ்டிக்கு மனிதர்களைத் தூண்டுபவன் மன்மதன்.
க்லீம் மன்மத பீஜமாகும். ஆசை ஏற்பட்டால்
மட்டுமே சிருஷ்டி ஏற்படும். எனவே இது காமராஜ
பீஜமுமாகும். சிருஷ்டி சக்தியாகிய

மகாசரஸ்வதிக்கு க்லீம் பீஜம் பொருத்தமானதே.
‘க்ருஷ்ண வர்ணி ப்ருஹத்ரூபி பிருஹத்கண்டி
மஹத்பயி
தேவி தேவி மஹாதேவி மம சத்ரூன் வினாசய’

என்று சொல்லப்பட்டிருக்கிறது.

சரபர், பைரவர்
எல்லோருமே சிவ அம்சம். பிரத்யங்கிரா பைரவரின்
மஹிஷி. லோகத்திற்கு மரணம் (சிருஷ்டி) ரமணம்
(ஸ்திதி) வமனம் (சம்ஹாரம்) செய்வதால்
பரமசிவனுக்கு பைரவர் என்று பெயர். ஸ்ரீபுரத்தில்
22, 23வது பிராகாரங்களுக்கு நடுவில்
மார்த்தாண்ட பைரவர்
வசிப்பதாக சொல்லப்பட்டிருக்கிறது. சிவலீலைகளில்
ஒன்று அந்தகன் என்ற அசுரனை பைரவ மூர்த்தியாக
சிவபெருமான் வதம் செய்தது. சிவபெருமான்
பைரவரை அழைத்து அந்தகனுக்கு அந்திம காலத்தைக்
கொடுக்கும் ரகசியத்தைச் சொல்லி அனுப்பினார்.
பைரவர் அந்தகனை சம்ஹரித்துத் திரும்பி வந்தார்.
இதற்கு உதவியாக இருந்தவள் பிரத்யங்கிரா. பைரவ
பத்தினியாதலால் பைரவி என்ற பெயரும் உண்டு.
இவள் ஞானத்தை தருபவளாதலால் வித்யை ரூபமாகவும்
அவித்யை ரூபமாகவும் இருக்கிறாள். வித்யை,
ஸ்வாத்மா ரூபமான ஞானம். அவித்யை (ஞானம்
ஏற்படுவதற்கு முன்புள்ள நிலை).
கடைசி விருத்தியின் ரூபமான ஞானம்.
இவ்விரண்டு ஸ்வரூபங்களாகவும்
அம்பிகை இருக்கிறாள். இவ்விரண்டையும் உடையவன்
அவித்யையினால் ம்ருத்யுவை ஜயித்து வித்யையினால்
அமிர்தத்துவத்தை அடையச் செய்கிறான்.

‘வித்யாம் சாவித்யாம் ச யஸ்தத் வேதோபயம்
ஸஹ
அவித்யாய ம்ருத்யும் தீர்த்வா வித்யயாம்ருதமச
நுதே ச்ருதி’

-இந்த இரண்டு ரூபங்களில் வித்யா ரூபத்தால் ஜீவன்
விடுவிக்கப்படுகிறதென்றும் அவித்யா ரூபத்தால்
கட்டப்படுகிறதென்றும் சொல்லப்படுகிறது.

‘வித்யா வித்யேதி தேவ்யா த்வே ரூபே ஜானிஹீ
பார்த்திவ
ஏகயா முச்யதே ஜந்து : அந்யயா பத்யதே புந:’

-என்கிறது தேவி பாகவதம்
சென்னை சோழிங்கநல்லூரிலும்
பாண்டிச்சேரி அருகேயுள்ள மொரட்டாண்டியிலும்
மேல்மருவத்தூரிலும் திருப்பூர்-
பொள்ளாச்சி வழித்தடத்தில் 20 கி.மீ தொலைவில் உள்ள
பல்லடம் வெங்கடாபுரத்தில் உள்ள
சாம்பசிவரிஷி எனும் தத்தகிரி சுவாமிகள்
ஆசிரமத்திலும்
பிரத்யங்கிராதேவி திருவருள்பாலித்து வருகிறாள்.
ஓவியம் - ஸி.ஏ.ராமச்சந்திரன்
(அடுத்தது, ஆறு ஆதாரங்களிலும் அம்பிகையர்
தரிசனம்)
தியானம்
ஸிம்ஹீம் ஸிம்மமுகீம் பகவத: ஸ்ரீ பைரவஸ்யோல்லஸ:
சூல ஸ்தூல கபால பாச டமரு வ்யக்ரோக்ர ஹஸ்தாம்
புஜாம்
தம்ஷ்ட்ராகோடி விசங்கடாஸ்ய குஹராமாக்த நேத்ரத்
ரயீம்
பாலேந்து த்யுதி மௌக்திகாம் பகவதீம் ப்ரத்யங்கராம்
பாவயே.
தேவியின் இந்த மூலமந்திரத்தை தினமும் பய
பக்தியுடன் ஜெயிப்பவர்கள் நோய் நொடியற்று,
சத்ரு அழிந்து, பேய் பில்லி சூன்யம் பறந்தோட, பயம்
நீங்கி, பாதுகாப்பான வாழ்வில் எல்லா ஆனந்தத்தையும்
அடைந்து பிரத்யங்கிரா தேவியின் அருள்பெற்று, நீண்ட
ஆயுளுடன் இம்மண்ணுலகில் நிலைபெற்று வாழ்வார்கள்.
கருணை உள்ளம் கொண்ட இத்தேவியின் மூல மந்திர
அக்ஷரத்தின் பிரணவ கலைகளைக் கூர்ந்து நோக்கின்,
இதில் சம்ஹாரத்தைக் குறிக்கும்
கலைக்கு இடமே இல்லை என்று புரியும். 1. ஜ்ஜம் என்ற
சித்தி கலையும், 2. ஜம் என்ற சித்தி கலையும், 3.
கம் என்ற சிருஷ்டி கலையும், 4.
த்தம் என்ற வரத கலையும் தான் உள்ளன. இந்தக் கலைகள்
அக்னி சூரியக் கலைகளில்
அடங்கி ஒளி வீசுகின்றபடியால் ஜ்வாலா என்ற
பெயரை அடைகின்ற தேவி சித்தி,
சிருஷ்டியை வரமாக அளிக்கும் வரதா எனப் பெயர்
பெற்று, ஒளி வீசி, பக்த
கோடிகளுக்கு உபாசகர்களுக்கு ஸகல
சம்பத்துகளையும் அளிக்கின்ற பிரதம காளி என்ற
திருப்பெயரையும் பெற்று பிரத்யங்கிரா தேவியாக
போற்றித் துதிக்கப்படுகிறாள்.

தனித்து ஏகாந்தமாக
புன்னாக மரங்கள் சூழ்ந்த தலத்தில் சர்வமங்களம்
பொருந்திய காரிண்யையாக ஒளிவீசுகின்ற
மகா சக்தியான இந்தத் தேவியை போற்றித்
துதித்து புகழும் பொருளும் சர்வ சம்பத்தும்
பெறுவோமாக.

அதர்வ ருக் மந்திரம்

ஓம் க்ருஷ்ணவர்ணீ ப்ருஹத்ரூபி, பிருஹத் கண்டீ மஹத்பயீ

தேவி தேவி மஹா தேவி மம சந்ரூன் விநாசய மம:
சத்ரூன் விநாசயோன் நம: