மடிசார், பஞ்சகச்சம்
---------------------------
பூஜை, சுப, அசுப விசேஷங்களுக்கு மடிசார், பஞ்ச கச்சம் அத்யாவஸ்யமான ஒரு உடை.
இன்னும் சொல்லப்போனால், பிரேதத்துக்கே பஞ்ச கச்சம், மடிசார் கட்டித்தான் சம்ஸ்காரம் செய்ய வேண்டும் என்ற விதி இருக்கிறதாகக் கேள்விப்பட்டேன்.
நான் யூகித்தவரை இங்கு எழுதுகிறேன், சான்றோர்கள் இன்னும் விபரம் தெரிவியுங்கள், தவறிருந்தால் திருத்துங்கள்
பஞ்ச கச்சம் என்பது - பஞ்ச பூதங்களைக் குறிக்கிறது.
நாம் இந்த பூதங்களால் ஆன உடல் என்பதால் இந்த அடையாளம்.
விபூதி அணிவதும் நாம் திரும்ப இந்த பஞ்ச பூதங்களுக்கு இரையாகி பிறவி வேண்டாம் என்று இறை சக்தியை வேண்டுதல் தான்.
கேரளத்தில் இந்த உடை விஷயத்தில் மாறுபடுகின்றனர் என்று கேள்விப்பட்டேன் . அவர்கள் தான் இதை விளக்கவேண்டும்.
ஆனால் சாஸ்திர ரீதியாய் பூஜை, சுப, அசுப விசேஷங்களுக்கு பஞ்ச கச்சம் அத்யாவஸ்யமான ஒரு உடை அது தான் நடைமுறை என்று நினைக்கிறேன்.
நண்பர்கள் இன்னும் விபரம் தெரிவிக்குமாறு விண்ணப்பிக்கிறேன் .
No comments:
Post a Comment