telepathygiridharbaba

telepathygiridharbaba
shirdisai thunai

Monday, 16 December 2013

புற்று நோய்குணமாக

 புற்று நோய்குணமாக 

பலன் தந்த / தரும் ஸ்லோகம் புற்று நோய்குணமாக ############################# அஸ்மின் ப்ராத்மன் நனுபாத்மா கல்பே த்வமித்தம் உத்தாபித பத்மயோனி அநந்தபூமா மம ரோகராசிம் நிருந்த்தி வாதாலய வாஸ விஷ்ணோ - ஸ்ரீமத் நாராயணீயம் பொருள்: பரமாத்மாவாக எங்கும் நிறைந்திருக்கும் ஸ்ரீகுருவாயூரப்பா! பாத்ம கல்பத்தில் பிரம்மதேவனைத் தோற்றுவித்தவனும், அளவற்ற மகிமையுடையவனுமான நீ, எனது எல்லா வியாதிகளையும் நீக்கி ஆரோக்கியம் அருள வேண்டும். பக்தர் ஒருவர், காஞ்சி ஸ்ரீமகாபெரியவாளை நமஸ்கரித்து கண்ணீர் பெருக நின்றார். பெரியவா அவரைப் பார்த்து, என்ன ரொம்ப வலிக்கிறதா?” என்று கருணையுடன் கேட்டார். பிறகு, மேற்கண்ட ஸ்லோகத்தை எழுதிக் கொள்ளச் சொல்லி, தினமும் நூற்றி எட்டு தடவை இதைச் சொல், கவலைப்படாதே” என்று ஆறுதல் கூறி அனுப்பினார். ஆறு மாதங்கள் கழித்து, அந்த பக்தர் மீண்டும் கண்ணீர் மல்க, பெரியவாளை தரிசித்து சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார். நன்னாயிட்டியே” என்றார், அந்தக் கலியுக தெய்வம். அந்த பக்தர், ஆமாம் நன்னாயிட்டேன். மருந்து எதுவும் வேண்டாம் என்று டாக்டர்கள் சொல்லி விட்டார்கள்” என்றார் அவர். அந்த பக்தருக்கு வந்திருந்தது புற்று நோய். பகவானை நம்பி பிரார்த்தித்தால், நிச்சயம் பலனுண்டு என்பதை, இதன் மூலம் மீண்டும் நமக்கு உணர்த்தியிருக்கிறார் மகா பெரியவர்.

Friday, 13 December 2013

எம்பெருமான்

எம்பெருமான் 

முத்தீ –

கார்ஹபத்யம், ஆஹவநீயம், தக்ஷிணாக்நி என்பவை த்ரேதாக்நிகளாம். நான் மறைகளாவன – ருக், யஜுஸ், ஸாமம், அதர்வணம் என்பன. இவை வேதவ்யாஸரால் பிரிக்கப்பட்ட பிரிவின் பெயர்களாதலால், அதற்கு முன்னிருந்த தைத்திரியம் பௌடியம் தலவகாரம் சாமம் என்ற நான்கும் என்று கொள்ளுதல் தகும். 

ஐவகைவேள்வி –

ப்ரஹ்மயஜ்ஞம் தேவயஜ்ஞம் பித்ருயஜ்ஞம் மநுஷ்யயஜ்ஞம் என்பன பஞ்சமஹாயஜ்ஞங்கள். 

ப்ரஹ்மயஜ்ஞமாவது –

“ப்ரஹ்மயஜ்ஞப்ரசநம்“ என்று தினப்படியாக வேதத்தில் ஒவ்வொரு ப்ரச்நம் ஓதுவது.

வே
யஜ்ஞமாவது அக்நிஹோத்ரம்செய்வது

பூதயஜ்ஞமென்பது பிராணிகட்குப்பலியிடுவது.

பித்ருயஜ்ஞமென்பது பித்ருக்களை உத்தேசித்துத் தர்ப்பணம் விடுவது.

மநுஷ்யயஜ்ஞமென்பது விருந்தாளிகளுக்கு உணவு முதலியன கொடுப்பது.

அறு தொழில் –

தான் வேதமோதுதல், பிற்களுக்கு ஓதுவித்தல், தான் யாகஞ் செய்தல், பிறர்க்கு யாகஞ் செய்வித்தல், தானங்கொடுத்தல், தானம்வாங்கிக்கொள்ளுதல் என்பன ஆறு கருமங்களாம்.

ஆக. த்ரேதாக்நிகளையும் நான்கு வேதங்களையும் பஞ்சமஹாயஜ்ஞங்களையும் ஷட்கருமங்களையும் நிரூபகங்களாகவுடைய வேதியர்களாலே ஸேவிக்கப்படுபவன் எம்பெருமான் என்றதாயிற்று.”

Thursday, 12 December 2013

பன்னிரண்டு முக ருத்ராட்சம்..!


பன்னிரண்டு முக ருத்ராட்சம் துவாதச ஆதித்யர்களின் ஆதிக்கம் பெற்றதாகும் . மகாவிஷ்ணுவின் அருள் பெற்றதாகவும் கூறபடுகிறது. இந்த மணியை பூஜிபதாலோ,அணிவதாலோ அக்னி நோய் பற்றிய அம்சங்கள் விலகும்.
செல்வம் ,மகிழ்ச்சி பெருகும் .வாழ்வில் ஏழ்மையே வரது என்று பத்மபுராணம் கூறுகிறது.
ஆயுதங்கள் கொண்ட மனிதன் ,கொம்புகளை கொண்ட விலங்குகள்,சிங்கம் போன்ற கொடிய விலங்குகள் ஆகியவற்றின் மீதான அச்சத்தை இந்த மணி விலக்கும் ,உடல் ,மன வலியைப் போக்கும்.
இதை அணிவதால் பிற மனிதர்களை ஆளும் தன்மை ,தலைமை பதவி அனைத்தும் வந்து சேரும்.எல்லா விதமான சந்தேகங்களையும் தீர்த்து முழுமையான அறிவைத்தரும்.
இம்மனியும் அபூர்வமாகவே கிடைக்கிறது
யார் அணியலாம்:
அதிகாரிகள் ,தொழில் அதிபர்கள் ,அரசியல் பிரமுகர்கள் போன்றோர் இதை அணிவதால் தலைமைபதவிக்கு உயர்வார்கள்.
சூரிய ஆதிக்கம் பெற்ற பன்னிரண்டு முக ருத்ராட்சத்தை அணிபவர்கள் கீழ்க்கண்ட நியமங்களை கடைப்பிடித்தால், இந்த மணியின் சக்தி பல மடங்கு அதிகரிக்கும் .
அதிகாலை சூரிய உதயத்திற்கு முன் எழ வேண்டும்.
குளித்த பின்பு சூரியனுக்கு ஜல நிவேதனம் செய்து சூரிய பகவானின் 21 அல்லது 108 திரு நாமங்களைக் கூற வேண்டும்.
ஞாயிற்று கிழமைகளில் ஆதித்ய ஹ்ருதயம் , காயத்ரி மந்திரங்களி உச்சாடனம் செய்ய வேண்டும்.
ஞாயிற்று கிழமைகளில் உப்பு ,எண்ணெய் , இஞ்சி போன்றவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும் .
தினமும் கண்களிலும்,கண் இமைகளிலும் இம்மணியை வைத்து வணங்க வேண்டும்.
ருத்ராட்சமும் ஜோதிடமும்:
ஒரு முக மணியை போலவே சூரிய ஆதிக்கம் பெற்றது .ஒரு முக ருத்ராட்சத்தின் பலன்கள் கிடைக்கும் .
ருத்ராட்ச மந்திரம் :
ஓம் க்ரோம் க்க்ஷோம் ரவ்ம் நமஹ :

Tuesday, 10 December 2013

லக்ஷ்மீ தந்த்ரம். { chapter 1 4to 15}

1-4 ஜிதேந்த்ரியம் ஜிதாதாரம் ராகத்வேஷாவசீக்ருதம்
சதுர்தசாங்க யோகஸ்தம் ப்ரஸங்க்யாநபராயணம்
பொருள் – (அத்ரி முனிவர் பற்றித் தொடர்கிறது) தனது இந்த்ரியங்களை வென்றவர்; தனது மூலாதாரச் சக்கரம் குறித்து அறிந்தவர்; இந்த உலக விஷயங்கள் குறித்து விருப்பு-வெறுப்பு அற்றவர்; யோகத்தின் 14 அங்கங்களையும் அறிந்தவர்; உண்மையான ஞானத்தை அறியும் முயற்சியில் தளராதவர்….
1-5 வித்தே ஸ்வர்பாநுநா பாநௌ புரா தபநதாம் கதம்
நிதாநம் தமஸாமாத்யம் தேஜோராசிமநாமயம்
பொருள் – முன்பு ஒரு காலகட்டத்தில் சூரியனை ஸ்வர்பானு என்னும் அசுரன் தனது நிழலால் துளைத்து, அவனை நீக்க முயற்சித்தபோது, தபந நிலை எடுத்தவர்; தவம் என்பதே என்ன என்று இவரைச் சுட்டிக்காட்டி அறியவேண்டியுள்ளது; தேஜோமயமாக உள்ளவர்…. (ஸ்வர்பானு என்னும் அசுரன் தன்னுடைய நிழலால் சூரியனை அழிக்க முயற்சித்த நிகழ்வு ருக்வேதத்தில் கூறப்பட்டது)
1-6 அத்ரிமத்ரிகுணோபேதமத்ரிவர்கஸ்தமவ்யயம்
ப்ராப்த: ஸங்க்யா முபாஸீ ந ம்ருஷிம் ஹுதஹுதாசனம்
பொருள் – மூன்று குணங்களால் பாதிக்கப்படாத இவர் அத்ரி என்பவர் ஆவார்; மூன்று புருஷார்த்தங்களைக் கடந்தவர் (தர்மம், அர்த்தம், காமம்) ; எப்போதும் உள்ளவர்; காலையிலும் மாலையிலும் உபாஸிப்பதைக் கை விடாதவர்; எப்போதும் அக்னி கார்யங்களில் ஈடுபட்ட ரிஷி ஆவார்.
1-7 பதிவ்ரதாநாம் பரமா தர்மபத்நீ யசஸ்விநீ
ப்ரஹ்மா விஷ்ணு மஹேசாநாம் ஜநநீ காரணாந்தரே
பொருள் – (அனசூயா பற்றிக் கூறுவது) – கணவனுக்கு ஏற்ற மனைவியர்களில் மிகவும் சிறந்தவள்;அத்ரி முனிவரின் தர்மபத்னி; ப்ரம்மன், விஷ்ணு, சிவன் ஆகிய மூவருக்கும் தாய் போன்ற ஸ்தானத்தை ஒரு சூழ்நிலையில் அடைந்தவள்…..
1-8 தேவைரபிஷ்டுதா சச்வச்சாந்தி நித்யா தபஸ்விநீ
விதுஷீ ஸர்வதர்மஜ்ஞா நித்யம் பதிமநுவ்ரதா
பொருள் – தேவர்களாலும் இடைவிடாது போற்றப்படுபவள்; சமநிலையில் உள்ளதில் இருந்து நழுவாதவள்; சிறந்த தவம் உள்ளவள்; அனைத்தும் அறிந்தவள்; அனைத்து தர்மங்களும் அறிந்தவள்; எப்போதும் கணவனுக்கு உண்மையாக இருப்பவள்…..
1-9 பத்யு: ச்ருதவதீ தாஸ்தா விவிதா தர்மஸம்ஹிதா:
ப்ரணிபாத புரஸ்காரம் அனஸூயா வசோ அப்ரவீத்
பொருள் – தனது கணவனால் அனைத்து விதமான ஸம்ஹிதை மற்றும் தர்மசாஸ்திரங்களை உபதேசிக்கப் பெற்றவள். இப்படிப்பட்ட அனசூயை தனது கணவனைப் பணிந்து, அவரிடம் பின்வருமாறு கேட்டாள்.
1-10 பகவன் ஸர்வதர்மஜ்ஞ மம நாத ஜகத்பதே
த்வத்த ஏவ ச்ருதா தர்மாஸ்தே தே பஹுவிதாத்மகா:
பொருள் – அனசூயை அத்ரி முனிவரிடம்,”பகவானே! அனைத்தும் அறிந்தவரே! எனது நாதனே! இந்த உலகில் உள்ள முனிவர்களுக்கு நாயகன் போன்றவரே! உம்மிடம் இருந்து நான் பல தர்ம சாஸ்திரங்களை உபதேசமாக அறியப் பெற்றேன்”, என்று தொடங்கினாள்.
1-11 ஞானானி ச விசித்ராணி பலரூபாதிபேதத:
ஏதேப்யோ பகவத்தர்மோ விசிஷ்டோ வித்ருதோ மயா
பொருள் – இவ்விதம் உள்ள சாஸ்திரங்களின் தன்மைகள் என்ன என்பதையும் நான் அறிந்து கொண்டேன். இவை அனைத்திலும் பகவத்தர்மம் என்பது மிகவும் உயர்ந்தது என்பது எனது தாழ்வான கருத்தாகும் (பகவத் தர்மம் = பாஞ்சராத்ர ஆகமம்)
1-12 த்வயா கதயதா தாஸ்தா பகவத்தர்ம் ஸம்ஹிதா:
ஸூசிதம் தத்ர தத்ர ஏவ லக்ஷ்மீமாஹாத்ம்யம் உத்தமம்
பொருள் – தாங்கள் எப்போதெல்லாம் பகவத்தர்மம் பற்றிக் கூறுகிறீர்களோ, அப்போதெல்லாம் மஹாலக்ஷ்மியின் பெருமைகளைப் பற்றிக் கூறத் தவறுவதே இல்லை.
1-13 ரஹஸ்யத்வாதப்ருஷ்டத்வாந்ந த்வயா ப்ரகடீ க்ருதம்
ததஹம் ச்ரோதும் இச்சாமி லக்ஷ்மீ மஹாத்ம்யம் உத்தமம்
பொருள் – அந்தப் பகுதிகள் பரமரகசியமாக உள்ளதாலும், நான் அவற்றைக் குறித்து உங்களிடம் கேட்கவில்லை என்பதாலும் அந்தப் பகுதிகள் குறித்து நீங்கள் இதுவரை விளக்கியதில்லை. இப்போது எனக்கு மஹாலக்ஷ்மியின் மேன்மைகளை அறிய ஆவலாக உள்ளது.
1-14 யத் ஸ்வபாவா ஹி ஸா தேவீ யத் ஸ்வரூபா யத் உத்பவா
யத் ப்ரமாணா யத் ஆதாரா யத் உபாயாத் யத் பலா
பொருள் – அவளது ஸ்வபாவம் என்ன, அவளது ரூபம் எவ்விதம், அவளது தோற்றம் எங்கிருந்து, அவளை அறிய உதவும் ப்ரமாணம் என்ன, அவள் எதனை ஆதாரமாகக் கொண்டுள்ளாள், அவளை அடையும் உபாயம் என்ன, அவளை அறிந்ததன் மூலம் கிட்டும் பயன் என்ன?
1-15 ததஹம் ச்ரோதும் இச்சாமி த்வத்தோ ப்ரஹ்மவிதாம் வர
பவேயம் க்ருதக்ருத்யாஹம் யஸ்ய விஜ்ஞானயோகத:
பொருள் – பரப்ரஹ்மத்தை அறிந்தவரும், பல தத்துவங்கள் தெரிந்தவரும் ஆகிய உங்களிடம் இருந்து மேலே உள்ள கேள்விகளுக்கான விடைகளை அறிய ஆவலாக உள்ளேன். இப்படிப்பட்ட ஞானம் மூலமாக எனது வாழ்வின் குறிக்கோளை நான் அடைந்தவளாகிவிடுவேன்.

 உறையூர் கமலவல்லி நாச்சியார் (நன்றி – ஸ்ரீமாந் முரளி பட்டர்

லக்ஷ்மீ தந்த்ரம் – ஓர் அறிமுகம்

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீரங்கநாயகி ஸமேத ஸ்ரீரங்கநாத பரப்ரஹ்மணே நம:

லக்ஷ்மீ தந்த்ரம் – ஓர் அறிமுகம்
லக்ஷ்மீ தந்த்ரம் என்னும் இந்தப் பாஞ்சராத்ர ஆகம நூலானது, பெயருக்கு ஏற்றபடி, மஹாலக்ஷ்மியைப் பற்றியதாகும். இதில் மஹாவிஷ்ணுவிற்குச் சமமான இடத்தில் மஹாலக்ஷ்மி வைக்கப்பட்டு, அவளைத் துதிப்பது கூறப்பட்டுள்ளது. இந்த நூலின் 50 ஆவது அத்தியாயத்தில் புருஷஸூக்தம் மற்றும் ஸ்ரீஸூக்தம் ஆகியவற்றைப் பற்றி நன்கு விளக்கப்பட்டுள்ளன. இந்த நூலில் பல இடங்களில் மஹாலக்ஷ்மியே தனது திருவாய் மலர்ந்தருளியுள்ளது மிகவும் சிறப்பாகும்.
மிகவும் உயர்ந்த இந்த நூலைப் பற்றிய குறிப்புகளோ, புத்தகங்களோ அதிகமாக வெளிவராமல் உள்ளது வியப்பாகவே உள்ளது. இந்த இணையதளம் மூலமாக, ஸ்ரீரங்கநாச்சியாரின் திருவுள்ளத்துடன் அடியேன் அன்றாடம் மூன்று ச்லோகங்களுக்கு – ச்லோகம் மூலம், பொருள் ஆகியவற்றை முனைய உள்ளேன். இதற்கு நம்பெருமாளும், எம்பெருமானாரும் பக்கபலமாக நிற்கவேண்டும் என்று வேண்டுகிறேன்.
1-1 நமோ நித்யாநவத்யாய ஜகத: ஸர்வஹேதவே
ஞானாய நிஸ்தரங்காய லக்ஷ்மீநாராயணாத் மநே
பொருள் – மிகவும் தூய்மையானதும், தோஷங்கள் அற்றதும், உலகின் காரணமாக உள்ளதும், அனைத்திற்கும் காரணமாக உள்ளதும், ஞானமயமாக உள்ளதும், மாற்றம் அடையாமல் உள்ளதும், லக்ஷ்மி – நாராயணன் ஆகிய இருவருக்கும் ஆத்மாவாக உள்ளதும் ஆகிய அதனை (ப்ரஹ்மம்) வணங்குகிறேன். (இங்கு லக்ஷ்மிக்கும் நாராயணனுக்கும் ஆத்மாவாக வேறொரு உயர்ந்த வஸ்து உள்ளதாகக் கூறப்பட்டாலும், இந்த வஸ்துவும் நாராயணனும் ஒன்றே என பின்னர் கூறப்பட உள்ளது. இதே கருத்தை ப்ரஹ்ம சூத்திரத்தில் 3-2-30 முதல் 3-2-36 வரை காணலாம் – இந்த சூத்திரங்கள் அடியேனின் கடந்த நம்பெருமாள் விஜயத்தின் ஸ்ரீபாஷ்ய பகுதியில் உள்ளது).
1-2 ககாஸனம் க்ருணாதாரமீத்ருசம் ஸோமபூஷிதம்
அகலங்கேந்து ஸூர்யாக்நிம் லக்ஷ்மீரூபம் உபாஸ்மஹே
பொருள் – பறவை ஒன்றின் மீது அமர்ந்துள்ளவளும், கருணை ஒன்றே வடிவமாக உள்ளவளும், ஸோமனால் ஆராதிக்கப்படுபவளும், தோஷங்கள் அற்றதான சந்திரன்-சூரியன் -அக்னி ஆகியவற்றின் சேர்க்கை போன்று உள்ளவளும் ஆகிய லக்ஷ்மியின் ரூபத்தை நான் ஆராதிக்கிறேன் (இங்கு பறவை என்பது ஆந்தையைக் குறிப்பதாகவும் கொள்ளலாம் – காரணம் வடநாட்டினர் ஆந்தையை லக்ஷ்மியின் வாகனமாகக் கொள்வர்; அல்லது கருடன் என்று கொள்ளலாம்).
1-3 வேதவேதாந்த தத்த்வஜ்ஞம் ஸர்வ சாஸ்த்ர விசாரதம்
ஸர்வ ஸித்தாந்த தத்த்வஜ்ஞம் தர்மாணாமாகதாகமம்
பொருள் – (அத்ரி முனிவர் குறித்துக் கூறப்படுவது) வேதவேதாந்தங்களில் கூறப்படும் தத்துவங்களை முழுமையாக அறிந்தவர்; அனைத்து சாஸ்த்திரங்களையும் ஆராய்ந்து அறிந்தவர்; அனைத்து ஸித்தாந்தங்கள் குறித்த ஞானம் உள்ளவர்; அனைத்து தர்மங்கள் குறித்தும், அவற்றின் ஆகமம் குறித்தும் நன்கு அறிந்தவர் …. (அடுத்த ச்லோகத்தில் தொடரும்)