அகத்தியரின் சோடச மாலை - சதுர்த்தி திதி -
ஸ்ரீபேருண்டாதேவி
சதுர்த்தியிலே நாதவிடை வாம பூசை
தரவேணுந் தயவாக அடிமை செய்ய
மதித்தபடி வரமருள்வாய் வாம ரூபி
வான் வெளியே வாசியே மௌனத் தாயே!
பதித்துன்றன் பதத்திலென்றன் சென்னி தன்னைப்
பரிதிமதி அகன்றாலும் அகலா மற்றான்
துதித்தபடி நின்சரண் மெனக்குத் தந்தாள்
சோதியே! மனோன்மணியே! சுழுனை வாழ்வே!
அனைத்து அண்டங்களிலும் நிறைந்துள்ள தேவி, அகிலத்துக்கே
ஆதிகாரணியாகத் துலங்குபவள். அநேக கோடி அண்டங்களைப் படைத்தவள்.
அவற்றை உருவாக்கியதால் இந்த அன்னைக்கு‘அநேக கோடி ப்ரமாண்ட ஜனனீ’
என்றும் ஓர் திருநாமம் உண்டு. உருக்கி வார்த்த தங்கம் போன்ற மேனியில்
பட்டாடைகளையும்,குண்டலங்கள், பொ ன் ஆரங்கள், முத்துமாலை, ஒட்
டியாணம்,மோதிரங்களைத் தரித்து, நிகரற்ற அழகுவல்லியாகத் திகழும் இவள்
முக்கண்கள் தரித்தவள்.
புன்முறுவல் பூத்து தரிசிப்போரைப் பூரிக்க வைக்கிறார். தன் கர கமலங்களிலும்
பக்தர்களின் பாதக மலங்களை அழிக்க பாசம்,அங்குசம், கத்தி, கோதண் டம்,
கவசம், வஜ்ராயுதம்தரித்துள்ளாள் . தேவியின் திருவடித் தாமரையைத் தாமரை
மலர் தாங்குகிறது.
மந்திரம்:
ஓம் பேருண்டாயை வித்மஹே விஷஹராயை தீமஹி
தன்னோ நித்யா ப்ரசோதயாத்
வழிபட வேண்டிய திதிகள்: சுக்ல பக்ஷ சதுர்த்தி, கிருஷ்ண பக்ஷ துவாதசி.
வழிபடு பலன்கள்: விஷ ஆபத்துகளிலிருந்து மீளலாம்.
பஞ்சமி திதி - ஸ்ரீ வன்ஹிவாசினி தேவி
பஞ்சமியில் பெற்றெடுத்தாய் சேயேன் றன்னைப்
பால்கொடுத்துப் பத நடனஞ் செய்தாய் தாயே!
கொஞ்சமொரு காரியத்தில் தவக்கஞ் செய்தால்
குழிப்பயிருங் கூரையின்மேல் ஏறுமோ தான்
தஞ்சமென நின் பொற்றாள் சார்ந்த மைந்தன்
சாக்கிரத்துக் கப்பால் நின் றாறி நைக்குள்
துஞ்சியுந்துஞ் சாதிருக்க ஏணி தந்தாள்
சோதியே! மனோன்மணியே! சுழினை வாழ்வே!
அக்னி மண்டலத்தில் உறைவதால் வன்ஹி வாஸினி. அக்னி மண்டலம் நம்
உடலின் மூலாதாரத்தில் உள்ளது. அங்கு குண்டலினி வடிவாய் அம்பிகை
துலங்குகிறாள். வஹ்னி என்ற பதம் மூன்று என்ற எண்ணிக்கையையும்
குறிக்கும். தேவி லலிதையின் பஞ்சதசாக்ஷரி என்னும் மகா மந்திரத்தின்
வாக்பவ,காமராஜ, சக்தி கூடங்களும் மூன்றே ஆகும். அழகே உருவாய் அருளே
வடிவாய்த் திகழும் இவள் மஞ்சள் நிற பீதாம்பரம் அணிவதில்
விருப்பமுள்ளவள். சுற்றிச் சுழலும் மயக்கும்விழிகளையுடையவள். தன்
திருக்கரங்களில் தாமரை, சங்கு,கரும்பு வில், அல்லிப்பூ, கொம்பு, மலரம் புகள்,
மாதுளம்பழம்,அம்ருத கலசம் எனத் தரித்திருக்கின்றாள்.
மந்திரம்:
ஓம் வஹ்னி வாஸின்யை வித்மஹே ஸித்திப்ரதாயை தீமஹி
தன்னோ நித்யா ப்ரசோதயாத்
வழிபட வேண்டிய திதிகள்: சுக்ல பக்ஷ பஞ்சமி, கிருஷ்ண பக்ஷ ஏகாதசி.
வழிபடு பலன்கள்:
நோய் தீரும். தேக காந்தியோடு, உலக இன்பங்களை பூரணமாக அனுபவிக்க
இயலும். ( நன்றி ஆன்மீக உலா)